புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தொழிற்சங்கம்,செல்வி ஜெயலலிதா தொழிற்சங்கத்தை ஆதரித்தது. செய்தி.
துணை நடிகர் முதல் பிரபலநடிகர்வரை தங்களுக்கென்று தனித் தனியாக தொழிற்சங்கம் தொடங்க அவரவர் தனி மேலாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்களாம். வதந்தி.
0
அடுத்தடுத்து தோல்வி,நிதானமாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் விக்ரம்.செய்தி
எடிட்டர் லெனின் எடுத்த நாக் அவுட் குறும்படமும்,அடுத்து ஒரு தேயிலைக்கம்பெனி எடுத்த
விளம்பரப்படமும் என்ன கணக்கில் வரும் ?.இப்போது காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் மணப்புறம் கோல்டு லோன் விளம்பரம் வெற்றியா,தோல்வியா?.இல்லை கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சங்கர்,மணிரத்னம் படங்களில் சம்பாதித்தது தோல்வியா ? வெவரமாக் கேட்டுச் சொல்லுங்க. பொதுஜனம் சந்தேகக் கேள்வி.
0
கன மழையால் விருதுநகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செய்தி.
ஒரே ஒரு நாள் வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்தது செய்தியா வருது, வருஷம் முழுக்க ஆறு,ஓடை,கண்மாய்,குளங்களுக்குள் வீடுகள் புகுந்ததப்பத்தி எழுதறதே இல்லை ஏன்.நீர் நிலைகள் அங்கலாய்ப்பு.
கோடிக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை போட்டார்கள். செய்தி
ரெண்டு மாசத்துக்கு இம்சையிலிருந்து விடுதலை. மனைவிமார்கள் உற்சாகம்.ரெண்டுமாசத்துக்கு யாவாரமே நடக்காது அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்.
0
விசாரணக்கைதி கொலைசெய்யப்பட்டதால் பெரியகுளத்தில் பதட்டம்.
ஒரே மாசத்துல ரெண்டு கொலை செய்திருக்கிறோம் ஒன்றுக்கு இனிப்புக்கொடுத்து மாலை மரியாதை பண்றாங்க.இன்னொன்னுக்கு கலவரம் பண்றாங்க. குழப்பம்.
12 comments:
ரெண்டுமாசத்துக்கு யாவாரமே நடக்காது அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்.
அச்சோ பாவம் அரசின் கஜானா!!!
ஆகா
நல்லா நறுக்கறீங்க
கலக்குங்க
கலக்கல் அண்ணா....
ஆகா.. நல்லா இருக்குங்க.. :)
நச்சுன்னு இருக்கு காமு அண்ணா..
நடிகர்கள், அரசியல்வாதிகள் அப்புறம் மாலை போட்டவர்கள், டாஸ்மாக் விற்பனை மற்றும் தாய்மார்களின் தற்காலிக சந்தோசம் இறுதியில் இரண்டு கொலைகள்.. இறுதியில் சுவீட் கொடுத்து கொண்டாடிய அபத்தம்தான் நம் ஓட்டு மொத்த மக்களின் மனநிலையும்...
//புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தொழிற்சங்கம்,செல்வி ஜெயலலிதா தொழிற்சங்கத்தை ஆதரித்தது. செய்தி.
// சட்டமன்றத்தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமா?
நீங்கள் எழுதிய பின்னூட்டங்களின் வழியே உங்களை தொடர்ந்து, உங்களின் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன்.
மிக நிதானமாகவும் , தெளிவாகவும் கருத்துக்களை உரைக்கிறீர்கள்.
வாக்கினில் தெளிவு, கருத்துக்களில் முதிர்ச்சி...
பின் தொடர விருப்பம்..
ஆகா..... நச் நச் என சொல்லியுள்ளீர்கள் தோழா..
அடடா! நீங்க இது மாதிரி எழுதுவது புதுசா இருக்கே! சூப்பர்.
\\ Sethu said...
அடடா! நீங்க இது மாதிரி எழுதுவது புதுசா இருக்கே! சூப்பர்.\\
நானும் இதையே தான் சொல்ல வந்தேன்.
/அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்./
அதெல்லாம் ப்ளாஸ்டிக் தம்ப்ளர்ல அடிக்கிறாய்ங்க.அப்புறம் கூட ஒருதரம் அறிந்தும் அறியாமலும் கூவுனா போச்சு.
/ஆறு,ஓடை,கண்மாய்,குளங்களுக்குள் வீடுகள் புகுந்ததப்பத்தி எழுதறதே இல்லை ஏன்.நீர் நிலைகள் அங்கலாய்ப்பு./
இது இது டாப்பு:))
Post a Comment