காட்டுக்குள் சும்மா நடந்து போனால் சூழல் அப்படியே இளகி இதமாகி மனது இலேசாகிவிடுகிறது.இந்த முறை தென்தமிழகத்தில் மழை சக்க போடு. குளம் குட்டைகளில் நீரின்னும் வற்றாமல் கிடக்கிறது.தினம் கடந்து போகும் ஒரு குளத்தின் கரையில் வசிக்கும் இயற்கை வாசிகளில் ஒரு சில சாம்பிள். தம்பி ஆண்டன் தனது நுட்பம் குறைந்த காமிரா மூலம் பதிவு செய்த ரம்மியமான இயற்கை .
உச்சி மத்தியானம் வெது வெது நீருடன் டாலடிக்கும் வெள்ளிக் காசுகள்
.
தாத்தா தாத்தா பொடிகுடு.....வாங்க ஆளுக்கொன்று பிடுங்கி,தலைவெட்டிச்சிரிக்கலாம்.காலச்சக்கரத்தை நிறுத்திவிட்டு கல்மிஷமில்லாத உலகத்துக்குள் கிடக்கலாம்.
மூளையில் தீமூட்டும் ஒரு கவிதை. நாளங்களில் தேனோடும் ஒரு இசை.
எல்லாவற்றையும் பார்த்து கெக்கலிட்டுச்சிரிக்கும் மருதாணிப்பூ..
மயக்கும் மாலை ஆதவக் கதிர் நீரொடு கலந்து செய்யும் தங்கத்திவலைகள்
5 comments:
Beautiful photos.பகிர்ந்ததுக்கு நன்றிங்க.
நுட்பம் குறைந்த காமராவா? ப்ரமாதம்.
நுட்பம் குறைந்த கேமரா மாதிரி தெரியல
ஞாபகங்களை மீட்டெடுத்த அத்தனை படங்களும் அழகு...
அதிலும் தலையைச் சுண்டி விளையாடிய அந்த ஒற்றைப்பூ(பேர் மறந்துபோச்சு)ரொம்ப அழகு.
படங்கள் அழகு.... பகிர்வுக்கு நன்றி
Post a Comment