சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கங்காதரன், பொதுச் செயலா ளர் எஸ்.துரைகண்ணு வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறையை பாடத்திட் டங்களில் தோற்கடிக்கப் பட்ட திமுக அரசாங்கம் செய்த சில தவறுகளை கார ணம் காட்டி நிறுத்தி வைப் பதாக தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
பணக்கார தமிழகம், ஏழைத் தமிழகம் என நமது மாநிலம் இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. அரசாங் கத்தின் ஒவ்வொரு அசைவையும் பணக்காரத் தமிழகம் தன் பால் சாதகமாக்கிக் கொள்ள அயராது முயல்கிறது. அதன் காரணமாகவே அரசின் பொறுப்புகளில் இருந்த கல்வி பணக்காரர்கள் புகுந்து விளையாடும் கள்ளச்சந்தையின் சரக்காக மாறிவிட்டிருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த முடி யாத அரசாங்கமே தமிழக அரசாங்கத்தையே மாற்றும் அளவு கல்வி வணிகர்கள் தலைக்கனம் பிடித்து அலை கிறார்கள். தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுத் திருக்கிற முடிவை கல்வி வணிகர்கள் மட்டுமே வர வேற்றிருக்கிறார்கள் என் பதை தமிழக அரசாங்கம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரும் ஒரே மாதிரியான கல்வி முறையின் கீழ் பயில வேண்டும் என்ற நோக்கத் தோடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அறி முகமான ஒரு திட்டத்தை சொத்தை காரணங்களைக் காட்டி அவசரகதியில் முடக்கிப்போட முயல்வது தமிழக அரசாங்கத்தை பணக் கார தமிழகத்தின் பக்கம் மட்டுமே தள்ளிவிடும்.
ஏழைகளுக்கு இலவச அரிசி; பணக்காரர்களுக்கு தரமான கல்வி வழங்குகிற முரண்பாடான அரசாங்க மாகத் தோற்றமளிப்பதில் இருந்து விடுபட்டு உண்மையான மக்கள்நல அரசாங்கமாகத் திகழ்ந்திட பாடத் திட்டத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளை நீக்கி விட்டு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தீக்கதிர்- நாளிதழ்
கொள்ளிவைக்கப் பிள்ளையில்ல
குடிச்ச கஞ்சி கூட்டுலசேரல
ஊசிமேல தவமிருந்து
ஒத்தப்பிள்ள பெத்தானாம்
பெத்த பிள்ளைக்கு பேச்சு வராம
ஊர் ஊரா அலைஞ்சானாம்
போகாதா கோயிலில்ல
கும்பிடாதசாமியில்ல
ஒரு நாத்தேவையில
திருவாய் மலர்ந்தானாம்
கொள்ளியோட பெறந்த பிள்ள
ஒன்னக்கொல்லாம விடமாட்டேன்னு
விக்குனானுமில்ல
வெறச்சானுமில்ல தகப்பன்
6 comments:
அரசின் மிகத் தவறான முடிவு. வருத்தப்படப் போகிறார்கள்.இது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவோ என்று சந்தேகமாக உள்ளது. எங்கள் பள்ளியில் தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே கட்டணத்தை கம்பல்சரி ஆக்கி விட்டார்கள். பள்ளிகள் கூட்டமைப்பு பணபலமிக்கதாக இருக்கிறது. பெற்றோர் சங்கம் உறுதியாக செயல்பட வேண்டிய நேரம் இது. அரசை நம்பிப் பயனில்லை.
இன்னொரு கதை தெரியுமா.பாடப்புத்தகத்தில் பாதியைக்கிழித்துக்கொடுக்க உத்தரவிட்டார்களாம்.பின்னர் அது கொஞ்சம் ஓவர் என்று கருதி.புதிய பாடத்திட்டம் உருவாக்கி இரவு பகலாக அச்சடிக்கபடுகிறதாம்.பதினைந்தாம் தேதிவரை கெடு.கல்வி வளர்க்கும் உயரதிகாரிகள் இப்போது சிவகாசியில் டேரா.
சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.
http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-கல்விஆர்வலர்கள/
(சமச்சீர் கல்வி:ஆர்வலர்கள் பதில் அளிப்பார்களா?)
சமச்சீர் கல்வி முறை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.... இருப்பினும் அதிலுள்ள மாறுபட்ட கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. அதாவது பாட புத்தகம் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தில் இல்லை என்பது தான் இந்த பணக்கார வர்க்கம் என்று நீங்கள் கூறுபவர்களின் ஆதங்கம்.. அதனை மனதில் வைத்து தயாரித்தால் இனியாவது நல்லப்படியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
காமராஜ் அவர்களே!நேத்து ஆந்திராவின் நிஜாமாபாத்திலிருந்து கன்யாகுமரி வரை பத்து ஐம்பது பேர் வெள்ளை கவுனும் போட்டுகிட்டு,இடுப்புல பெல்டொட முதல்வர பாத்தாங்க.அவங்க என்ன மாடு மேய்க்கரவங்களா? பூரா பெரும் கல்வியாளர்கள்.அவசரத்துக்கு சொரிஞ்சிகிட்டோம். சவம் கொள்ளிக் கட்டை.என்ன செய்ய?---காஸ்யபன்
பழைய மொந்தையில் புதிய கள்..
அது போதை தரக்கூடியது, இது வலி தரக்கூடியது. வலியை விரும்பியேற்பதை தவிர வேறு வழியில்லை.
Post a Comment