5.6.11

திடீர் ரசம்,திடீர் சாம்பார், மற்றும் திடீர் புரட்சியாளர் ராம்தேவ்.


ஜீவ சமாதி யடைந்தார்,தண்ணீரில் மிதக்கிறார்,குருடர்களைப்பார்க்க வைக்கிறார்,வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கிறார்,கிரிக்கெட்டில் ஜெயிக்க யாகம் நடத்துகிறார்,ஓடிப்போனார்,இரட்டை ஆயுள் தனடனை கொடுக்கப்பட்டது,ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்தார் என்றுதான் இது வரை சாமியார்களைப்பற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தது.சமீபகாலமாக  அவர்களுக்கு புது அவதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அரசியல் அவதாரம்.அதுவும் பரபரப்பான அரசியல் அவதாரம்.தங்களின் ஞானதிருஷ்டியால் நடந்தவற்ரையும் நடக்க இருப்ப வற்றையும் அறியமுடிகிற இவர்களின் கண்ணுக்கு இப்பொழுதுதான் இந்த லஞ்சம் கறுப்புப்பணம் தெரியவந்திருக்கிறது.இவ்வளவு நாட்கள் அந்த ஞானதிருஷ்டி என்கிற ரேடாரில் லஞ்சமும் ஊழலும் கறுப்புப்பணமும்  தட்டுப்படாமல் போனது எப்படி.அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது எப்படி.

நேற்று கரைவேஷ்டி கட்டிய அண்ணாதிமுக கவுன்சிலரலிருந்து தலைமுறை தலைமுறையாய் கரைவேஷ்டி கட்டாமல் கொள்ளையடிக்கிற முதலாளிகள் வரை தாங்கள் அடித்த பணத்தில் முதல் பங்கை உண்டியலில்தான் போடுகிறார்கள்.அன்னதானம் போட,கும்பாபிஷேகம் நடத்த என கோயில்களுக்கு கொடுக்கிற அன்பளிப்புகள் தங்கள் கறைகளை கழுவிக்கொள்வதோடு வருமாண வரியிலிருந்தும் விலக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இப்படியான ஆன்மீக செயல்பாடுகளின் நிஜமான நிதியாதாரம் முறைகேடாக சம்பாதித்த பணம்தான் என்பதை தெய்வமே அறியும்.அதனால் தான் அந்த ஏரியாவுக்குள் இன்று வரை நுழையாமல்  சமியார்களும் பீடங்களும் நிஷ்டையில் இருந்தார்கள்.  இப்போது தங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு இந்த தவறுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது வினோதமான விஷயமக இருக்கிறது.சுமார் பதினெட்டுக்கோடி செலவில் முற்றிலும் குழு குழு வசதி செய்யப்பட்ட பந்தலில் இருந்துகொண்டு  அவர்கள் படம் காட்டுவதைப் படம் பிடிக்க வெறிகொண்டலைகிறது அவர்களின் ஊடகங்கள்.

ஒரு யோகா சொல்லிக்கொடுக்கிற சாமியார் எப்படி பதினெட்டுக்கோடி செலவழித்து உண்ணாவிரதம் இருக்க முடியும். ஒரு ஆன்மீக நிலையம் எதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உயர்தொழில்நுட்ப மருத்துவமனைகள் நடத்துகிறது.கருணையும், பரிவும்,மண்ணிப்பும் நிறைந்த சாத்வீகச்சாமியார்கள் ஏன் மசூதியை இடிக்கவேண்டும் என்கிற மனசாட்சிப்படியான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. ஒரு மிகப்பெரிய ஊழலைக்கண்டுபிடித்து அதற்குத்தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அன்னா ஹசாரேவும்,ஆன்மீக ராம்தேவும் விஸ்வரூபமாகக்காட்சிப் படுத்தப்படுவது எதற்காக,யாருக்காக ?.

தங்களின் ஒருநாள் கூலியையும் இழந்துவிட்டு கைக்காசும் செலவழித்து வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்னாடி உட்கார்ந்து கோஷமிடும் லட்சோபலட்சம் மக்களின் கோரிக்கைகளை உதாசினமாகக் கடந்து போகிறது ஊடகங்கள் . இங்கொன்றும் அங்கொன்றுமாக தினம் தினம் இந்தியா முழுவதும் நடக்கிற போராட்டங்கள்.ஊழலின் ஊற்றுக்கண்ணான நிறுவணங்களில் நேரடியாகத் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருக்கிறது ஒரு தன்னலமில்லாத கூட்டம்.அநீதிகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கி அதனால் இன்னல்களை சம்பாதித்து இறுதியில் தங்கள் உயிரையும் பலிகொடுத்த தியாகிகள் ரத்தினசாமி,லீலாவதி போன்ற வர்களின் மரணம் எதோ முன்பகை காரணமாக நடந்தது போல ஒரு வரிச்செய்தியாய்ச் சித்தரித்தது ஊடகங்கள்.

இப்போது களத்தில் இருக்கிற எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் வாதியும் சுத்தமானவர்கள் இல்லை என்பது போலொரு தோற்றத்தை உண்டு பண்ணவே திட்டமிட்டு இந்த திசை திருப்பல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.   இந்த உண்ணா விரதப் போராட்டத்துக்கான உடனடிப்பலன்கள் ஏதும் சர்வநிச்சயமாக நிகழ்ந்து விடப் போவதில்லை.ஆனால் திட்டமிட்டபடி பலன்கள்  அரசியல் அனுகூலமாக முடியும்.

14 comments:

vasu balaji said...

அனைத்தும் துறந்தவர்களுக்கும் அரசியல் துறக்கக் கடினம் போலும்:)

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.

hariharan said...

ஹசாரே குஜாரத்தையும் மோடியையும் விமர்சித்த வேளையில் பாபா ராம்தேவ் ஊழ்லை ஒழிக்க தனி அவதாரம் எடுத்திருப்பது, பாஜகவின் புதிய நாடகமா? என்ற சந்தேகம் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் இப்பொது தயாநிதிமாறன் வரை நீண்டுள்ளாது, இது அருண்ஷோரி,மறைந்த பிரமோதம்காஜன் வரை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. Neo-Libelaralism தான் எல்லா முறைகேடுகளுக்கு காரணம் என்ற உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது.

மெடில்கிளாஸ் மக்களுக்கு இப்படி இன்ப்புகளை அவ்வப்போது மீடியாக்கள் பரிமாறுகின்றன. பாபாராம்தேவ் மீது அடிக்கிற வெளிச்சம் எதை மூடி மறைப்பதற்கு?

மணிஜி said...

காமராஜ்..நல்லப்பதிவு..கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள் சார்..

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அழகான பதிவு... அவசியமான பதிவும் கூட...

அன்புடன்
ராகவன்

பொடியன் said...

உங்கள் அனுமதியுடன் இதை எனது முகப்புதகத்தில் பதிய விழைகிறேன்.....

க.பாலாசி said...

அருமையான பதிவு...இந்த கூத்துக்குகளுக்கு கொடிபிடிக்கும் அந்த மேல்தட்டு மக்களை என்ன செய்வது... தலைப்பு பொருத்தம்...

ஓலை said...

புரையோடியிருக்கும் ஊழலை எதிர்க்க மக்கள் தயாராகுகிறார்கள். அதை இவர்கள் பயன் படுத்துகிறார்கள். சரியான அமைப்பு மக்களை வழி நடத்தினால் விடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

bandhu said...

//ஒரு யோகா சொல்லிக்கொடுக்கிற சாமியார் எப்படி பதினெட்டுக்கோடி செலவழித்து உண்ணாவிரதம் இருக்க முடியும். ஒரு ஆன்மீக நிலையம் எதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உயர்தொழில்நுட்ப மருத்துவமனைகள் நடத்துகிறது.//
பணம் சம்பாதிப்பது தவறா? "அதிகம் பணம் சம்பாதித்தவன் கெட்டவன்" என்பது கொஞ்சம் "செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல இல்லை?

அமர பாரதி said...

பந்து, சரியாகச் சொன்னீர்கள்.

காமராஜ்,

பாபா ராம்தேவ் எங்காவது நான் ஒரு அன்னாடங்காய்ச்சி என்று சொல்லியிருக்கிராரா? சொந்தமாக விமானம் வைத்திருப்பவர் இவர். அவர் தியானம் சொல்லிக் கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பது தவறா?

//இப்போது களத்தில் இருக்கிற எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் வாதியும் சுத்தமானவர்கள் இல்லை என்பது போலொரு தோற்றத்தை உண்டு பண்ணவே திட்டமிட்டு இந்த திசை திருப்பல்கள் நடந்துகொண்டிருக்கின்றன//

சரி, அதனால் என்ன, நல்லதுதானே? யாராவது மணி கட்ட ஆரம்பிப்பது நல்ல விஷயம் தானே? ராம்தேவின் மீது சேற்றை நீங்கள் வாரி இறைப்பதன் நோக்கம் என்ன?

காமராஜ் said...

வணக்கம் பந்து சார்.
எனக்கு பிடிக்கவில்லை என்பதானல் இதை எழுதவில்லை.உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக இப்படி நீங்கள் நக்கல் பண்ணவில்லை.
ஆனால் பணம் சம்பாதிப்பது எவ்வளவு வரைக்கும் சரி எவ்வளவுக்குமேல் தவறு என்று சட்டம் இருக்கிறது.செவப்போ கறுப்போ பொடி அறைத்துக்கொடுக்கும்பொம்பளப்பிள்ளைகளுக்கு மாசத்துக்கு ஆயிரம் சம்ப்ளம் கொடுத்து விட்டு ஒருமணிநேர பீஸ் ஆயிரம் வாங்குவது பசையாய் இருப்பவர் செய்தாலும் தப்பு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

காமராஜ் said...

மணிகட்ட வேண்டிய இன்னும் ஆயிரம் ஆயிரம் புரையோடிப்போன விஷயங்கள் இருக்கிறது அன்பின் அமர பாரதி. அதைச்சரிசெய்யாமல் என்ன கூட்டம் கூட்டினாலும் அது இன்னொருவர் கைக்கு குத்தகை மாற்ரிவிடுவதாகவே அமையும்.

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா,
பாலாசி, சேதுசார்,ராகவன்,அப்துல்,அப்புறம் ஆஹா மணிஜி...

Sridhar Vasudevan said...

நல்ல இடுகை.