சிலு சிலுவென முகத்தைத் தடவும் அதிகாலைக் காற்று.தூரத்து ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு கிளம்பும் பெண்களின் பட்டுச்சேலை சரசரப்பும் மல்லிகைப்பூவின் சுகந்த நெடியும்.மெல்லிய ஓசையில் எண்பதுகளின் தமிழ்சினிமாப்படலுமாக அந்தப் பயணம் அவளவு இனிதாக இருந்தது.ஏறும்போதே நடத்துநர் சிரித்துக்கொண்டு சும்மா ஏறுங்கசார் ஒண்ணேகால் மணிநேரத்துல ரிங்க் ரோட் போயிர்லாம் என்றார்.ஐநூறு ரூவா சில்றயில்ல என்று சொன்ன பிறகும் அதே சிரிப்புமாறாமல்,ஏறுங்க சார் ஐநூறு கலெக்சன் ஆகாமலா போகும் என்றார்.இப்படிச் சிரித்துக்கொண்டு பொதுத்துறையில் வேலை பார்க்கிறவர்கள் தேவதூதர்கள் போலத்தெரிவார்கள் அதுவும் பேருந்து நடத்துநர்கள் சிரித்தால் லாட்டரி அடிச்ச மாதிரித்தான்.
மொத்தம் அந்தவண்டியில் பத்துபேர்தன் இருந்தார்கள் விருதுநகருக்கு உள்ளே போகாது ஆத்துப் பாலத் துலதான் நிக்கும் என்று சொல்லிக்கொண்டே இன்னும் நான்கைந்து பயணிகளை ஏற்றிக்கொண்டார்.நான் சின்னப்பிள்ளையாய் இருக்கும்போதிலிருந்து விருதுநகர் ஊருக்குள் இருக்கும்சாலை அப்படியே தான் குட்டிக்குட்டிக் கம்மாய்கள் வழிமறிக்கும் சாலையாகவே இருக்கிறது.திர்மங்கலத்திலிருந்து விருதுநகருக்கு வர இருவது நிமிஷம்தான் ஆகும் விருதுநகருக்குள்ளேபோய் வெளியேற அதுக்குமேல நேரமாகிப்போகும்.ஊருக்கு வெளியே ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள்.அங்கே பன்றிகள் கூட உள்ளே போவதில்லை.அது முன்னாள் எம் எல் ஏ ஒருவரின் சொந்த இடமாம்.பொதுச்சொத்துக்களை நாசமாக்குவதில் இந்தியாக்காரனுக்கு இணையாக எவனும் போட்டி போட முடியாது.அதில் மட்டும் எப்போதும் நாம் தான் ஜாம்பியன்.
தூரத்தில் அப்பாவின் டிவியெஸ்50 வண்டியில் அமர்ந்துகொண்டு வரும் கலூரிப்பெண்ணை கவனித்துவிட்டு நிக்கட்டும்ணே ஒரு டிக்கெட் வருது என்றார்.காமராஜ் காலேஜ் நிக்குமா என்றார் ஏறுங்க டைமாகுது நீங்க வரலயில்ல கம்பிலயிருந்து கையெடுங்க ரைட் என்றார். குளிர்ந்த்காற்று இன்னும் பொதுபொதுவென வர வண்டி வேகமெடுத்தது.வழக்கமாக காலையில் டீக்குடிக்கப்போகும் நைனா கடையில் அப்போதுதான் வாசத்தெளித்துக்கொண்டிருந்தார்கள்.நடைப்பயிற்சிக்கரர்களில் ஓரிரு பெண்களும் கலந்து வந்தது கவனத்தை ஈர்த்தது.கார் ஓட்டினால்,சைக்கிள் ஓட்டினால்,போலிஸ் உடையணிந்திருந்தால்,புருவங்கள் தன்னாடி உயர்ந்துகொள்கிறது.அன்று அதிகாலை ராமநாதபுரம் வீதியில் மூன்று சக்கர சைக்கிளில் நான்கு பீப்பாய்களை வைத்துக்கொண்டு இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போன பெண் மட்டும் யார்கண்ணையும் உறுத்தவில்லை.தலைமுறை தலைமுரையாய் ஆப்பம் விக்கிற மணியம்மா,ஒரு அந்திக்கடையையும் ஊத்தவாயோடு உத்துப்ப்பார்த்துக்கொண்டு சாப்பிட வருகிற லாரிக்காரங்கலையும் சமாளிக்கிற கெங்கம்மா ஹோட்டல் பெண்ணையும் எந்த பத்திரிகையும் புதுமைப் பெண்ணாகப் பார்ப்பதில்லை.
சாத்தூர் தாண்டியது ஆளாளுக்கு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு நினைவுகளினோடு பயணித்துக்கொடிருந்தார்கள்.நடத்துநர் ஓட்டுநரின் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு டெப்போ மேனேஜர் செய்யும் அடாவடிகளை விமர்சித்துக்கொண்டு வந்தார். நேத்துவரைக்கும் கம்முனுகெடந்த அந்த தொழிற்சங்கப்பேரவை க்காரய்ங்கெல்லாம் கரைவேட்டிகட்டிக்கிட்டு டெப்போக்குள்ள உக்காந்துட்டு டூட்டி பாக்காம போயிர்றாய்ங்கப்பா என்று சொல்லிக்கொண்டே வந்தார். எப்படித்தூக்கம் வந்ததோ தெரியவில்லை முழிக்கும் போது ஆத்துப்பாலத்திலிருந்து வண்டி கிளம்பிக்கொண்டிருந்தது.பக்கத்தில் ஒருவர் வந்து உட்கார்ந்தார் திரும்பிப்பார்த்தால் முருகேசனேதான். பேருந்தே திரும்பிப்பார்க்குகும்படிக்கு ரெண்டுபேரும் சத்தம்போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
முருகேசன் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாகப்படித்தவன். முருகேசனைப்பார்க்கும் போதெல்லாம் ஜட்டியைத் தலையில் போட்டுக் கொண்டு பொய்யாக ஒப்பாரி வைக்கும் அந்தச்சித்திரம் தான் நினைவுக்கு வரும். முருகேசன் அப்படி அழும்போது ஒட்டுமொத்த விடுதியே சிரித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் பிரின்ஸ்பல் வந்துவிட்டார்.அவர் இப்படித்தான் ஆகாத நேரத்திலெல்லாம் வந்து தொலைத்து விடுவார். தம்மடிக்கும் போது பெட்டியில் தாளம்போட்டுக்கொண்டு பாட்டுப்படிக்கும்போது,மொட்டக்குண்டி கதைகள் பேசும்போதென்று நினையாத நேரத்தில் திடும்மெனப் பிரசன்னமாவார்.
முருகேசனைப்பார்க்கும்ப்போதெல்லாம் இந்தப்பாட்டு நினைவுக்கு வரும்.இல்லையானால் இந்தப்பாட்டைக்கேட்கும்போதெல்லாம் முருகேசன் நினைவும் சிரிப்பும் வரும். “காட்டன் டுக்கேயிலே மியே மெனிடேசு சீனக் கசின்”.அப்போது இந்தப்பாட்டு அவ்வளவுபிரபலம்.என்ன பாட்டுன்னு தெரியுதா. பருத்தி எடுக்கையிலே என்னப்பலநாளு பாத்த மச்சான்.முருகேசன் நல்ல சிவப்பு பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கொண்டு அகலப்பட்டி, அகலகாலர் சட்டையை டக் பண்ணிக்கொண்டு வந்தால் ஆண்களே ஆசைப்படுவார்கள். அவனுக்கு ரகரகமான பென்தோழிகள் உண்டு. அவனுக்கு தினப்படிக்குத் தொழிலே காலையில் எழுந்து குளித்து திண்ணீறு வைத்துக்கொண்டு இன்பண்ணிவிட்டு நேரே சாத்தூர் பேருந்து நிலையத்துக்குப் போவதுதான்.
அங்கே ஒருநாள் பிரச்சினையாகி அவனுக்கு அடி விழுந்துவிட்டது.கிழிந்த சட்டையோடுவந்தான்.
7 comments:
Innum thodarattum ... Aavaludan ethir paarppom.
நல்ல பதிவு திரு காமராஜ்.
வாழ்த்துக்கள்.
பின்னால் நடந்து போவது ஒருபோதும் அலுப்பதில்லை.
அதுவும் காமராஜ் எழுத்துன்னா சும்மாவா?
நல்ல பதிவு திரு காமராஜ்.
வாழ்த்துக்கள்.
June 9, 2011 6.24pm
joreaana aarambam
இதென்ன சொல்லாமகொள்ளாம முடிச்சிட்டீங்க... அடுத்ததுக்காக நாங்க ஒத்தக்கால்லதான் நிக்கணும்..
ஐயா, வணக்கம்.
முருகேச அண்ணன் அடுத்தாப்ல வருவார்லா...
Post a Comment