எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
வீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்
எதாவது சில எட்டாவது அதிசயங்கள்.
மஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்
அரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்
ஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை
அம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு
கிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்
ஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக
எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
விறகு வெட்டப்போன அப்பனின் தூக்குச்சட்டிக்குள்.
ஆனால் அம்மைக்கு மட்டுமே தெரியும்
அப்பனின் உடம்பெங்கும் எழுதிவைத்த
வேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்
வட்டிக்குகொடுத்த வைரமுத்துவின் வசவும்.
15 comments:
அண்ணா ! நன்றாக இருக்கிறது
புது முயற்சி என்று நினைக்கிறேன் !?
அண்ணா தூக்குச்சட்டி அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று
அன்புடன் கிச்சான்!
நன்றி கிச்சான்
அண்ணா சூப்பர்
பிரமிக்க வைக்கிறது கவிதை...
ஒருவருக்கு மகிழ்ச்சி கெர்டுக்கு அத்தனை சம்பவங்களுக்கு பின் இருக்கும் ஒரு வலியை அழகாக சொல்லியிருக்கீறிர்கள்...
கிராமத்து தந்தையின் வாழ்க்கை கவிதையில்...
அழகு...
நன்றி சதீஷ்
நன்றி சௌந்தர்
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
ஆனி முத்து:)
அருமை தோழர்.
அம்மைக்கு மட்டுமே தெரியும்
அப்பனின் உடம்பெங்கும் எழுதிவைத்த
வேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்
வட்டிக்குகொடுத்த வைரமுத்துவின் வசவும்.//
அருமை...அழகு!!
valikkirathu..
அப்பனின் மனது தெரிந்தது மகனின் பார்வையில்.
மகன் அறியாத அம்மை மட்டுமே அறிந்த வலியை மகனும் ஒருநாள் அறிவான்.
அற்புதம் காமராஜ்.
thanks to all
Arumai. Nice.
ரொம்ப அருமைங்க சார்...
Post a Comment