பயணங்களால் நெய்யப்பட்ட இந்த வாழ்கையில் உலக சுவாரஸ்யங்களில் ஏதேனும் ஒரு பகுதியை நேரடியாகக்காணும் நெடும்பயணம் அலாதியானது. இந்த முறை பண்டிச்சேரி. அங்கிருந்து சென்னை. புதுவை பாரதியார் கிராமவங்கியில் புதிதாக ஒரு ஊழியர் சங்க அமைப்பை உருவாக்க முயற்சி நடந்தது. எங்கள் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் மூன்று முறை அலைந்து ஒரு சங்கம் உருவாக்கி ஒருங்கிணைத்திருந்தார். செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த துவக்க விழாவுக்கு நானும் ஆண்டோ கால்பட்டும் கிளம்பிப் போனோம். இறுதி நேரத்தடங்களால் தோழன் மாது வர இயலவில்லை.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இரவு பணிரெண்டு மணியிலும் பகல் போல்,சுறு சுறுப்பாயிருந்தது. தன்னந் தனியாக அந்த நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருக்கும் இளம் யுவதிகளைப் பார்க்கையில் சற்று தெம்பு வருகிறது. இது பன்னாட்டு நிறுவணங்களின் வருகையால் ஏற்பட்ட பல கெட்டதிலும் ஒரு நல்லது. வேளாங்கண்ணி விழாவினால் சென்னை செல்லும் பேருந்துகள் முற்றிலும் அங்கே திருப்பிவிடப்பட்டதால், ஒரே ஒரு லொடலொடா பேருந்துக்கு நூறு பேருக்குமேல் போட்டிபோட்டு ஏறவேண்டிய சூழல் உருவானது, சென்னை வரை நின்றுகொண்டே பயணம் செய்ய பயனிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். விழுப்புரம் போகவேண்டிய நாங்கள் தஞ்சை சென்று அங்கிருந்து புதுவை செல்ல முடிவெடுத்து ஆறு பேரோடு கிளம்பிய வேளாங்கண்ணி சொகுசுபேருந்தில் பயணமானோம்.
தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், கொள்ளிடம் என தமிழகத்தின் நெற்களஞ்சியங்களும், திருத்தலங்களும் நிறைந்த பகுதிகளெங்கும் பயணம். கூடவே எண்பதுகளின் திரைப்படப் பாடல்கள். இரவு ஏழு மணிக்கு சால்ட் அண்ட் பெப்பர் விடுதியில் துவக்க விழா அங்கும் கூட சரிபாதி பெண் தோழர்கள் வந்திருந்தபோது விடிவுகாலம் தொலைவில் இல்லை எனும் நம்பிக்கையின் வேர்கள் ஆழ ஆழமாக பயணித்தது. விழாவில் இந்தியன் வங்கி ஊழியர்சங்க பொதுசெயலாளர் தோழர் க.கிருட்டிணன் துவக்கப் பேருரையாற்றினார். அங்கிருக்கிற தனியாருக்கு சொந்தமான விடுதிகள் ஆலைகள், கட்டிடங்களில் சரிபாதி அரவிந்தர் பெயர் தாங்கி நிற்பதுவும், அரசுக்குச் சொந்தமான பல நிறுவணங்கள் பாரதியின் பெயர் தாங்கி நிற்பதுவும் கவனம் பெறக் கூடியவை.
இரவு தனலட்சுமி விடுதியில் நானும் ஆண்டோவும் பின்னிரவுவரை விழித்திருந்தோம். இரவு நேர மதுவிடுதிச் சலசலப்பில் ஒரு ஓரத்தில் ஒரு ஆஸ்திரேலிய இளைஞனும் யுவதியும் அமர்ந்திருந்தனர். எந்தப் பார்வையாளரையும் சலனப்படுத்தாமல் இரண்டு பியர் பாட்டிலோடு வெகு இயல்பாய் சாவகாசமாய் பொழுது கழித்தனர். காலை பத்துமணிக்கு மதுக்கடையில் ஒரு ஏழைப்பெண் வங்கியக் கொள்ளையடித்து திரும்புதல்போல் ஒரு கால்புட்டி வாங்கி மறைத்துக்கொண்டு திரும்பியதை சிலர் பார்த்து எள்ளினர்.
இந்த காலத்தின் இளைஞர் உலகத்தின் பேசு பொருளாய் விளங்கும் புதுவை சென்னை கடற்கரைச் சாலையில் ஒரு முறை பயணம் செய்யவேண்டும் என்கிற எனதாசை நிறைவேற அங்கிருந்து சென்னை பயணமானேன்.
பேருந்து கிளம்புகையில் முன்னிருக்கையில் இருந்த பெண்மனி தனது இணை வராததால் அடைந்த கலக்கமும், பரபரப்பும் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. பரபரப்பின் உச்சக்கட்டமாக அவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழிறங்க எத்தனித்தார். சிலநொடி அவகாசத்தில் அவரது இணை வந்து சுபமாக்கினார். அவரது கையில் திண்பண்டங்களும், பாணங்களும், மலையேறிக் குறிஞ்சி கொண்டுவந்தது போன்ற களிப்பும் அன்பும் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் கொண்டு வந்த பாணக்குவளை, பெப்சி வண்ணத்தில் இருந்தது. அது பெப்சியல்ல என்பதை உணந்துகொள்ள எனக்கு ஒரு மணிநேர அவகாசமானது. அவர்கள் பரிமாறிக் கொண்டதில் கலப்படமற்ற அன்பும் முன்னதாகவே கலப்படமாகிய மதுவும் இருந்தது.
விடுதலைக்கு மகளிரெல்லாரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடமனத்தின் மதுக்கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கிணை செய்வோம்.
உடையவள் சக்தி ஆண்பெண்ணிரண்டும்
ஒருநிகர் செய்துரிமை சமைத்தாள்.
21 comments:
nalla pakirvu niingkalum mathavaraj sir-m ennai viyakka vaikkireerkal
//எந்தப் பார்வையாளரையும் சலனப்படுத்தாமல் இரண்டு பியர் பாட்டிலோடு வெகு இயல்பாய் சாவகாசமாய் பொழுது கழித்தனர். காலை பத்துமணிக்கு மதுக்கடையில் ஒரு ஏழைப்பெண் வங்கியக் கொள்ளையடித்து திரும்புதல்போல் ஒரு கால்புட்டி வாங்கி மறைத்துக்கொண்டு திரும்பியதை சிலர் பார்த்து எள்ளினர்//
இவை மீறல்கள் என்பதைத் தாண்டி பல வருசமாச்சு
வெறும் கட்டுடைப்புக்களாக மட்டுமே புலப்படுகின்றன
இதுதான் நகர , உலக மயமாதலா? ஹி.. ஹி.. ஹி..
மிகவும் நல்ல இடுகை! ECR ride மிகவும் விரும்பும் ஒன்று -நான் மட்டுமல்ல..என் ஆயாவும்!! :-)
//"மீறல்களையும் பொதுவில் வைப்போம்."//
நானும் இதைப் பற்றி ஒரு இடுகை எழுதி முடிக்காமல் ட்ராஃப்டில் வைத்திருக்கிறேன். எங்க அலுவலக கட்டிடத்தில் ஒரு பெண் - தினமும் காலையில் கையில் காஃபி கப்புடன் சிகரெட் பிடிக்கச் செல்லுவாள். அங்கேயேதான் - வெளிநாட்டு பெண்கள் சிலரும் வருவார்கள்! ஆனால், இந்தப் பெண் புகைக்கச் செல்வதை பார்த்தாலே லிஃப் ஆபரேட்டர் முதல் அலுவலகம் செல்பவர் வரை நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொள்வர்!!
புகைப்பது தவறென்றுச் சொன்னால் இருவருக்கும் ஏன் பொதுவாக வைப்பதில்லை?!!!
ரசனையான இடுகை நண்பரே
//பெப்சியல்ல என்பதை உணந்துகொள்ள எனக்கு ஒரு மணிநேர அவகாசமானது.//
சரி கடைசியாக எப்படித்தான் உணந்தீர்கள்
//அவர்கள் பரிமாறிக் கொண்டதில் கலப்படமற்ற அன்பும் முன்னதாகவே கலப்படமாகிய மதுவும் இருந்தது.//
ச்சே என்ன கொடுமை இது
.
.
.
.
.
.
.
.
.
.
என்று எல்லாம் சொல்ல மாட்டேன்!
படிக்க படிக்க சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்
ஆஹா... அற்புதமாக எழுதியிருக்கீங்க
யோசிக்கத் தூண்டும் பதிவு
வாருங்கள் மண்குதிரை வணக்கம்.
கருத்துக்கு நன்றி.
வணக்கம் தியாகராஜன்.
நகரம், கிராமம் எல்லாம் பொருளாதார வித்தியாசம் மட்டுமே.
பான்பராக் பொட்டலங்கள் அதிகம் விற்கிற இடம் கிராமங்கள் தான்.
குறிப்பாக உழைக்கும் பெண்கள் மத்தியில் இது இயல்பானதாகிவருகிறது.
பிரச்சினை அதுவல்ல.
மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே
மது வாங்கவேண்டும் என்கிற சட்டமில்லை.
இருப்பினும் இந்த சமூக முறைமைகள் மிக வலுவானதாக இருக்கிறது.
சாத்தூரில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் இருந்தார் கொஞ்சம்
கண்டிப்பான பெண். அதை சிதறடிக்கிற மாதிரி "காலை எழுந்ததும் ஒரு
ரெண்டு பெக் போட்டுவிட்டுத்தான் ஸ்டேசனுக்கு கிளம்புமாம்" என்று
வதந்தியக் கிளப்பிவிட்டு மகிழ்ந்தது ஆண்சமூகம்.
அலுவலகங்களிலும் நீங்கள் இப்படி பாலியல், மதுப்பழக்கம் குறித்த
வதந்திகளை இலகுவாக பரப்பிவிடுதை அவதானிக்கலாம்.
எனினும் மதுக்குடிப்பதுதான் பெண் விடுதலை என்று கூறுவதாக
கருதமாட்டீர்கள் என நம்புகிறேன்.
நன்றி சந்தனமுல்லை. ஆஹா அப்படித்தான் சந்தனமுல்லை.
தவறு என்கிற பட்சத்தில் இரு பாலருக்கும் பொருத்தவேண்டும்.
நல்ல வெயிலில் ECR ஐக்கடந்து வந்தேன்.
அன்புத்தோழா கதிர் வணக்கம். எப்படி இருக்கீங்க.
காலையில் தான் வந்தேன். ரெண்டு மணிநேரம்
கரண்ட் கட். ஒரு சுற்று சுற்ற வேண்டும்.
திரும்ப உங்கள் பக்கத்தில் சந்திப்போம்.
வணக்கம் அமித்தம்மா கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
வணக்கம், தோழர். எங்க ஊருக்கு வந்தும் எனக்கு தகவலே சொல்லல்லியே. ஆண்டோ தோழரையும், உங்களையும் நேரில் பார்த்திருப்பேனே. அடுத்த முறை வரும்போது சொல்லிவிட்டு வாங்க.
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
தோழா இரவு நிகழ்ச்சி முடியும் போது befi முருகன் தோழரிடம் உங்களைப்பற்றிக்
கேட்டேன். அப்போதே நேரம் இரவு பத்து மணி இருக்கும். இரண்டு விஷயங்களை
இழந்து விட்டேன் ஒன்று உங்களைப்பார்க்கிற, இரண்டு அந்த கடற்கரையின் பெருங்கற்களில்
உட்கார்ந்து அலை பார்க்கிற இரண்டு சந்தோசங்களை இழந்துவிட்டேன். வருந்துகிறேன்.
வாருங்கள் பிரபு வணக்கம்.
அந்தி சாயும் நேரம் சாலையோர விளக்குகளின் நடுவில் ECR பயணம் போய்ப் பாருங்கள்...சொர்க்கம் கண்ணருகே!
கிராமங்களில், வயதான கிழவிகள் சுருட்டும், புகையிலையும் ஏன் மது பயன் படுத்துவதை பார்க்கமுடிகிறது.
அந்த சமூகம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
சமூக கட்டமைப்புகளும், கட்டுப்பாடுகளும் எப்பொழுதும் பெரும்பாண்மை உயர் நடுத்தரவர்க்கத்திற்குத்தான். சிறுபான்மை உயர்மட்டத்திற்கல்ல...
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
நல்ல வெயிலில் போனேன் இருந்தும் கடற்காற்று எனைத் தூங்கப்பண்ணியது.
சாலையோர உணவு விடுதிகளுக்கென மாறாத விதி இருக்கிறது.
மீன் பொரியல் கேட்டேன். பழைய்ய மீன். ரொம்பப் பழசு. போன வருசத்து மீன்.
அவனிடம் சண்டை போட மனமில்லை. ஆளுக்குப்பாதி சாப்பிடுவோம் என்றுதான் சொன்னேன்.
முறைத்துக்கொண்டு திரும்பி எடுத்துப்போய்விட்டான்.
வாருங்கள் ஆரூரான்.
நன்றி.
வாஸ்தவம். கஸ்டம் கக்கத்தில் இருக்கும் போது
தலைமேல் கடவுளிருந்தாலும் தூசி எனத்தட்டிவிடும்
உழைப்பாளர் உலகம்.
பசியோடிருப்பவனுக்கு ஒரு பிடி சோறுதான் கடவுள்
இப்படித்தான் காவிக்கம்யூனிஸ்ட் சொல்லுகிறார்.
நானே இது சம்பந்தமாக ஒரு பதிவிடலாம் என்று எண்ணித்தான் பளாக்கை log-in செய்தேன்.ஆனால் நீங்கள் முந்திவிட்டிருந்தீர்கள் மாமா...
ரசனையாக பதிவு செய்துள்ளீர்கள்...
நன்றி மாமா...(அப்புறம் ஓட்டு போட்டுட்டேன் மாமா..)
காலையில்தான் வந்தேன்.
போன் பண்ணினேன் தம்பி எடுத்தான்.
அப்றம், ரொம்ப எழுதி கொஞ்சமாய் பதிவு
போட்டிருக்கிறேன். ஓட்டுப்போட்டதுக்கு நன்றி.
" என்னத்துட்..டு குடுக்க வச்சிர்வீங்க போல்ருக்கு "
நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html
நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Post a Comment