
நேர்மை,எளிமை, அர்ப்பணிப்பென்னும் ஆடம்பர அரசியலில் காணக்கிடைக்காத அரிய குணங்களோடு இரண்டு முறை மதுரை தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினராயிருந்த தோழர் பொ.மோகன் அவர்கள் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார். கடந்த இருபது வருடங்களில் பலமுறை தொழிற்சங்க நிகழ்வுகளில் சந்திக்க நேர்ந்த தலைவர். பாராளுமன்ற உறுப்பினராவதற்குமுன்னாள் அவரிடம் இருந்த எளிமையில் ஒரு சிறு துரும்பளவுகூட மாற்றம் இல்லாமல் காணக்கிடைப்பது இன்றைய இந்திய அரசியலில் அரிதானது. உழைக்கிற மக்களுக்காக, அடித்தட்டுமக்களுக்காக, போராடும் தொழிற்சங்கங்களுக்காக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இருக்கும் குறைவான நம்பிக்கைகளில் ஒன்று மறைந்து போயிருக்கிறது. தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. |
6 comments:
:((
ஆழ்ந்த வருத்தங்கள்! அஞ்சலிகள்!
He was a good person, correction, he was M.P for madurai, not madurai east. u can delete this comment, once its corrected.
-:(
நல்லவர்களை காலன் விரைவில் அழித்துவிடுவான்
நல்ல நாடளுமன்ற உறுப்பினர் தான் , ஆனால் ஒரேயடியாக தூக்கி வைத்தும் கொண்டாட முடியாது.
அவர் ஒன்றும் மதுரையை மான்செச்டேர் ஆக மாற்ற வில்லை. மதுரையில் இன்னமும் சாலைகள் , குடிநீர் அதே நிலை, உடனே பதில் சொல்ல வேண்டாம் அவை மாநில அரசு சார்ந்தவை என்று.
தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி.
Post a Comment