கோழிகளுக்கு பஞ்சாரம்,
ஆடுகளுக்கு கூடாரம்,
மாடுகளுக்கு ஒருகம்பும் கயிறும்.
பாட்டிலில் தண்ணீர்,
பையில் கட்டுச்சோறு,
அலுவலக நாற்காலி.
சூ..சூச்சு சொற்கள்
சாட்டைக் கம்பு,
பொக்குத்தாணியம்.
அலுவலக அறநெறிகள்
எச்சரிக்கை விதிகள்
மாசக்கடைசியில் கவர்.
எல்லாம் சரி...
எங்கிருந்து வந்ததிந்த
கோள் மூட்டிப்
போட்டுக் கொடுக்கும்
பழக்க வழக்கம் ?
19 comments:
குழந்தை அப்பாவிடம் "அப்பா அம்மா அடிச்சுட்டாங்க....."அப்படீன்னு ஆரம்பிக்கும் போதே கோள் மூட்டிப் போட்டுக் கொடுப்பது ஆரம்பித்து விடுகிறதோ????:)
தோழர் காமராஜ் அவர்களே !
அப்படி என்ன
கோவம் சகாக்கள்
மீது !!
அன்புடன் கிச்சான்
கோழிகளுக்கு பாஞ்சாரம்,
ஆடுகளுக்கு கூடாரம்,
மாடுகளுக்கு ஒருகம்பும் கயிறும்.
பாட்டிலில் தண்ணீர்,
பையில் கட்டுச்சோறு,
அலுவலக நாற்காலி.
சூ..சூச்சு சொற்கள்
சாட்டைக் கம்பு,
பொக்குத்தாணியம்.
அலுவலக அறநெறிகள்
எச்சரிக்கை விதிகள்
மாசக்கடைசியில் கவர்.
அருமையான comparison தோழர் !!
///எல்லாம் சரி...
எங்கிருந்து வந்ததிந்த
கோள் மூட்டிப்
போட்டுக் கொடுக்கும்
பழக்க வழக்கம் ?///
அதுதானே! எப்படி வந்தது இந்த பழக்கம்.....?
அந்த ஒப்பீடு செம...:-) கடைசியில் நச்-ன்னு முடிச்சு யோசிக்க வைச்சீட்டீங்க..கோள் மூட்டுறது எல்லா லெவல்லேயும் இருக்கு போல!
அதானே...
:-)
நல்லவே யோசிக்கிறீங்க"வாரக் கடைசி'காமராஜ்.(குழிதாடி குறிப்பிடாமல் போயிட்டீங்க மக்கா. :-))
மாது வீட்டு மாடியில் இருப்பதாக நினைச்சுக்கிறேன்.
:-))
இலகுவான வார்த்தைகள்.ஆழ தைக்கிறது!
:-))
நல்ல கேள்வி அங்கிள்!
பள்ளிக்கூடத்துல குலவிச்சை கல்லாமல் பாகம்படும்னு ஒரு செய்யுள் படித்த ஞாபகம். ஒருவேளை இதுவும் ஒரு குலவிச்சையாகக்கூட இருக்கலாம். ஆயினும் போட்டுகொடுப்பதென்பதும் ஒருவித பொறாமைக்குணத்தின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன்.
நல்ல சிந்தனைக்கவிதை...
\\அன்புடன் அருணா said...
குழந்தை அப்பாவிடம் "அப்பா அம்மா அடிச்சுட்டாங்க....."அப்படீன்னு ஆரம்பிக்கும் போதே கோள் மூட்டிப் போட்டுக் கொடுப்பது ஆரம்பித்து விடுகிறதோ????:)\\
வயதாக ஆக அது டெவலப் ஆகி விடுகிறது. நல்லசிந்தனை.
அருணா என்ன ஒரு ஆராய்ச்சி.
அதுக்குத்தான் ஆசிரியரா இருக்கனுங்கறது.
சீரியஸ்ஸான பக்கத்துக்கு இழுத்துப்போகிறது இந்தச்சிந்தனை.
நன்றி அருணா.இது நான் எதிர்பாரதது.
வாங்க கிச்சான் நலமா ?
சகாக்கள் என்பது சகாவு எனும் மலையாளத்திலிருந்து கொண்டுவந்தது. அர்த்தம் = தோழன். தோழமையும் நட்பும் வேறு வேறல்ல உயிர்காப்பான் தோழன். எனவே கொல்லிக்ஸ் நாட் அட் ஆல் சகா.
என்ன கிச்சான் தல சுத்துதா. நட்பு ரொம்ப பவித்ரமானது.
அப்படி இல்லைன்னா அது நட்பாகாது.
வாங்க பாரா ரொம்பத்தான் சிரிக்கவச்சுட்டீங்க குழுதாடி க்கு ரெண்டாவது அர்த்தம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
சரியா. சாயங்காலம் தான் ஆச்சு.
வாங்க தோழர் ஞானசேகரன்,அன்புக்கு நன்றி.
நன்றிப்பா முல்லை.
நன்றி தீபா
பாலாஜி புது விஷயமா இருக்கே?. நன்றி.
ஆமாம் அம்பிகா, அப்படியும் இருக்கலாம்.
நல்ல கேள்வி. யோசிக்க வைக்கும் கவிதை
Post a Comment