ஒளிந்து கொள்ள அறைகளில்லா
ஒரு பத்தி வீடு.
கதவிடுக்கில் பதுக்கி வைத்திருக்கும்
நமது சந்தோசமும்,
கள்ளமிலா பிள்ளைகளின் சாகசமும்.
கைவேலையாயிருக்கும் அவளுக்கு
ஒளித்து ஜெயிப்பதா
காட்டிக்கொடுத்து வெல்வதா எனும்
கயிறு இழுப்பில்
மூன்றாவது தீர்ப்பாய்க் குடும்பத்தைக்
கோர்த்து வைப்பாள்.
இப்போது அப்பா ஒளிந்து கொள்ள
அம்மாவின் நிழல்
வியர்வைப்பூவின் வாசம் வெளிச்சமிட
மூலை முடுக்கெல்லாம் பட்டுத்தெறிக்கும்
முன்னிரவு
பிள்ளையிடம் ஒளிந்து கண்ணாமூச்சியாடும்
பின்னிரவு.
அலுவல்,கோபம்,ஆற்றாமையாகிய
புறத்தின் வெப்பத்தை
தற்காலிகமாய் ஒழியக்கட்டும்
அகக்குளிர்ச்சி.
15 comments:
Me the 1 st.....
//கைவேலையாயிருக்கும் அவளுக்கு
ஒளித்து ஜெயிப்பதா
காட்டிக்கொடுத்து வெல்வதா எனும்
கயிறு இழுப்பில்
மூன்றாவது தீர்ப்பாய்க் குடும்பத்தைக்
கோர்த்து வைப்பாள்.//
கவிதையின் மொத்த அழகை இந்தவரிகள் ஒளித்து வைத்திருக்கும் அழகு...அருமை அண்ணே...வாழ்த்துகள்...
அருமை ..வந்து எழுதுகிறேன்
பேச்சேயில்லை. சூத்திரம் இது:)
பிள்ளைகளுடனும், மனைவியுடனும் கழிக்கும் முன்னிரவு பொழுதுகள்தான் என் நாட்களை கட்டியெழுப்புகிறது..
நல்லா இருக்குங்க அண்ணா கவிதை
அருமையான கவிதை... குடும்பத்துக்குள் நடக்கும் சின்னச் சின்ன போங்கு ஆட்டங்கள் அழகு...
//அலுவல்,கோபம்,ஆற்றாமையாகிய
புறத்தின் வெப்பத்தை
தற்காலிகமாய் ஒழியக்கட்டும்
//
உண்மைதான்
பொருள் நிறைந்த கவிதை
இப்படிப்பட்ட குடும்பம் அமையபெற வேண்டும்... அதுதான் வாழ்வின் சம்பாத்தியம். :-)
கவிதைக்குள்ள ஒரு அன்புக் குடும்பமே தெரியுது !
இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் அகக் குளிர்வுதானே ஜீவிதத்தின் ஆதாரம்
நன்றாய் இருக்கிறது காமு சார்
ஆஹா!!!
இதுவல்லோ கவிதை! அல்லது வாழ்வு! அல்லது வாழ்வுக் கவிதை! அல்லது...
கவிதை வாழ்வு!
அந்தப் படத்தின் கைகளுக்கு ஒன்றும்,கவிதைக்கு ஒன்றுமாய் இரண்டு பூங்கொத்து!
அன்பு காமராஜ்,
கவிதை வந்து கண் பொத்தும் நட்சத்திரங்களாய் பரவும் இருட்டு. எண்ணெய் இடாத கதவுகளின் இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கும் பெயரறியாப் பறவைகள். ஒருவர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடும் விளையாட்டில் தொலைவதும் கண்டுபிடிக்கப்படுவதும் எப்போது அன்பாய் இருக்கிறது.
என்னமாய் இருக்கு கவிதை...
அன்புடன்
ராகவன்
அன்பை விதைக்கும் குடும்பங்கள்...நமது சமூக அமைப்புகள்...நல்ல கவிதை....
Post a Comment