5.9.10

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.


ஒரு ஆர்வத்தில் கூகுளில் தேடியபோது தென்பட்டது புதைந்து கிடக்கிற ஆச்சரியங்கள்.கதைகளால் மண்மூடிப்போன கனிம வளங்கள். அதுவும் எனது தேசத்தில்.தொழில் நுட்பம் விரல் நுனியில் உலகைக் கொண்டுவருகிற இந்தக் காலத்திலேயே இருட்டடிப்பு நடந்தால் மன்னராட்சிக் காலத்தில் என்னென்னவெல்லாம் புதைக்கப்பட்டிருக்கும்.இது அரசியலுக்கு அப்பாற்பட்ட என்தேசத்தின் இயற்கை பற்றிய செய்தி. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.


92500 சதுர கிலோமீட்டர்கள் விரிந்துகிடக்கும் அந்த மலைப்பகுதிகளில்தான் லட்சக்கணக்கான மரம் செடிகொடிகள் வாழ்ந்து வருகிறது.இந்தியாவின் தட்ப வெப்ப சமன்பாட்டை பாதுகாக்கிற மிகப்பெரிய பசுமைப் பிரதேசம். அங்குதான் மஹாநதி மற்றும் கோதாவரி நதிகள் ஊற்றெடுத்து சமப்பரப்புக்கு ஓடிவருகிறது.அங்குதான் அள்ளஅள்ளக் குறையாத இந்த தேசத்தின் மாசுபடாக் கனிம வளங்கள் கிடக்கிறது.இரும்புத் தாதுக்களும்,பாக்சைட் நிலக்கரி வளமும் இன்னமும் சொல்லப்படாத கனிம வளங்களும் கிடைக்கிறது. மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தண்டகாரண்யத்தில்  புதைந்து கிடக்கிற 1.1 பில்லியன் டன் இரும்புத்தாது தான் இந்தப் பூமிப்பந்தில் கிடைக்கிற ஆகப் பெரிய இரும்பு வளம்.அதுவும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை சாமான்யன் அல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஏற்பாடு இங்கிருக்கிறது.

இதை சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிநாடுகள் கண்டுபிடித்துவிட்டன.இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நமக்குத்தெரியாததை அவன் கண்டுபிடித்துவிட்டான்.வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான்.அப்றம் அங்கிருக்கிற முதலீட்டாளர்களின் கண்களை அது உறுத்திவிட்டது. இத்தனை யுகங்கள் மனிதக்காலடி படாமல் கிடந்த அந்தப்பகுதியில் கிடைக்கிற  கனிம வளங்களை வெட்டி எடுத்து உலகத்துக்கு விநியோகிப்படுவதை அரசும் ஊடகங்களும் சொல்லவில்லை.சொல்லப்போவதும் இல்லை. சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள் எந்த ஒப்பந்தமாவது மக்களைக்கேட்டுப்போடப்படிருக்கிறதா என்ன ?.அதற்கு அவசியமுமில்லை.

முன்னதாக அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ஊளை மோர் விலைக்கு விற்றுவிட்டார்கள். அப்படி விற்றதொன்றும் தரிசு நிலமோ,இல்லை ஒரு தனிநபருக்குச் சொந்தமான விலை நிலமோ இல்லை.லட்சக்கணக்கான மலைமக்கள் வாழ்ந்து வருகிற வனப் பகுதி.எஸ்ஸார் என்கிற அந்நிய நிறுவனம் 2005 ஆம் ஆண்டே மத்திய இந்தியாவில் உள்ள அந்த பலைடல்டா மலைப்பகுதியில் ஒரு இரும்புத்தாது வெட்டியெடுக்கும் தொழிற்சாலையை நிறுவிவிட்டது.அங்கிருந்து மும்பைக்கு இரும்புக் கனிமத்தைக் கடத்திக்கொண்டுவர 267 (திருநெல்வேலியிலிருந்து திருச்சி வரையான தூரம்.பேருந்தில் போனால் ஐந்து மணிநேராப் பயணதூரம்)கிலோமீட்டர் நீளத்துக்கு  குழாய்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.




வெள்ளைக்காரன் ஆண்ட நாட்களில் வெட்டிக்கொண்டுபோன நமது விலையுயரப்பெற்ற மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.அதன் பிறகும் நமது கொள்ளைக்காரர்கள் வெட்டியெடுத்தவையும் அப்படியே.அதையெல்லாம் சரிசெய்ய அங்கே நூற்றுக் கணக்கான சிறு இயக்கங்கள் இருக்கின்றன. பசுமை இயக்கங்கள்.இதுவரை லட்சோப லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்திருக்கின்றன.அவற்றைச் செய்பவர்கள் இயற்கை ஆர்வளர்கள்,காந்திய வாதிகள், விவசாயிகள், காட்டுப்பற்றாளர்கள், அறிவுஜீவிகள்,அறிவியல் வல்லுநர்கள்.அவர்களின் இந்த இயற்கைப் புணரமைப்பு வேலைகளை யெல்லாம் தூக்கிக்கடாச வருகிறது ஜப்பான்,சீனா ஆகிய நாடுகளின் பொக்லைன் எந்திரங்கள்.

ஒரு மரம் வெறும் இலையல்ல,
ஒருமரம் வெறும் கனியல்ல,
ஒருமரம் வெறும் பூவல்ல,
ஒருமரம் வெறும் கூடுகட்டும் இடமல்ல
கூடவே மனிதகுலத்துக்கான
ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும்
ஜீவ விருட்சம் அது.
மரம் செடி கொடிகள் இல்லாத மண்
தரிசெனச் சொல்லப்படும்.
மரம் செடிகொடிகள் இல்லாத மண்
உயிர்கள் வாழத் தகுதியற்றதாகப்படும்.
 மரம்இல்லாத மண்திங்கள் செவ்வாய்
புதனெனும் வெற்றுருண்டைகளாகும்.

ஒரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகக்கலகம் செய்ததாக விடுதலை வரலாறுகள் இருக்கின்றன.ஆனால் ஆயிரக்கனக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிய கிளம்பிவருகிறது அந்நிய முதலீட்டாளர்களின் எந்திரக் கைகள்.அதற்கு ஒத்து ஊதுவது தான் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்.அவை வேரோடு பிடுங்கப்போவது மரங்களையும்,கனிம வளங்களை மட்டும் இல்லை இந்தியாவின் சீதோஷ்ணத்தயும் சேர்த்துத்தான்.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க ஆரம்பித்ததும் அதில் வருகிற தகவல்களும்,தரவுகளும் இந்திய நிலப்பரப்புகளோடு நம்முன் காட்சியாகிறது.


நன்றி: விக்கிப்பீடியா,வெப் இமேஜ்,

12 comments:

பத்மா said...

நெஞ்சு பொறுக்குதில்லையே ..
சரியான ஏமாளிகள் நாம்

லெமூரியன்... said...

முற்றும் அடிமையாகிவிட்டனர் நமது அரசியல்வாதிகள்.
கொஞ்சமாக அடிமயாகிக்கொண்டிருக்கிரார்கள் ஆயுத குழுக்களின் தலைவர்களும்....
மக்களை ஊடகம் எப்பொழுதோ அடிமைப்படுத்திவிட்டது....
இதுல எத போராடி எதை தடுத்தாளபோகிரோம்னு ஒரு பட்டியலே தயாரிக்கணும் முதலில்..!

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

vasu balaji said...

வெள்ளைக்காரனே சொந்த வீட்டு மரமானாலும் ஒரு மரம் நட்டாதான் இன்னோரு மரம் வெட்டலாம்னு பார்த்து பார்த்து காக்குறான். மண்ணுக்கு மேலையும் மொட்டை, அடியிலையும் சுரண்டினா வெளங்கிரும். எளவெடுத்தவனுங்க கிட்ட விடியவே விடியாதா.

Unknown said...

தோழர்,
இப்போது புரிகிறதா, தண்டகாரண்யாவில் நமது மாவோயிஸ்ட் தோழர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்று....
அறுபதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடதுசாரிகளுக்கு இருந்தபோதும் அணு ஆயுத ஒப்பந்தத்தை தடுக்கமுடிந்ததா இடதுசாரிகளால்?
இப்போது அதைவிடவும் எண்ணிக்கைகுறைவு....
என்ன செய்யப்போகிறீர்கள் தண்டகாரண்யா கொள்ளை தடுக்க?
அந்த மலைவாழ் மக்களின் எண்ணங்களை கேட்க உங்களது பாராளுமன்றம் தயாராக இருக்கிறதா?

க.பாலாசி said...

கேட்கவே வருத்தமாக இருக்கிறது. மரங்களும், அங்கு வாழும் மனிதர்களும்கூட இனி அரசுக்கு கிள்ளுக்கீரைதான்...

hariharan said...

சமீபத்தில் ஆப்கனில் கனிமவளங்கள் தோண்டப்படாமல் அதிகமாக உள்ளன என்ற செய்தியை அமெரிக்கா உலகுக்கு அறிவித்தது, அதைவிட பல மடங்கு தண்டகாரண்ய பகுதிகளில் உள்ளன. இந்திய அரசு தாராளமயமாக்கலின் ஒரு பகுதியாக இயற்கை வள்த்தை பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் பெருமுதலாளிகளும் கொள்ளையடிக்க ஏதுவாக தனியார் துறையை சுரங்க வணிகத்தில் ஈடுபட அனுமதித்த்து. கடந்த பத்தாண்டுகளில் அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் தண்டகாரண்யப் பகுதி மட்டுமல்லாது பெல்லாரியிலும் சுரங்கங்களை வைத்திருக்கிறார்கள். வேதாந்த என்ற நிறுவனத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பாக்சைட் சுரங்கத்திற்கு சுற்றுச்சூழல் விதிகளின்படி அனுமதி மறுத்ததுடன் ஏற்கனவே அலுமினிய சுரங்கதாலும் அலுமினிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததிலும் வனப்பாதுகாப்பு சட்டங்களையும் மீறியதாக தெரிவித்தது.

எதியுரப்பா கூறியடிபடி கர்நாடக்த்தில் மட்டும் அனுமதியில்லாமல் 30 லட்சம் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இயற்கை வளம் இருந்தாலும் அதை அனுபவிக்கிற உரிமை இந்தியருக்கு இல்லை.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சமூக ஆர்வலர்கள் சட்டவிரோத சுரங்கங்களை அம்பலப்படுத்த முயன்றவர்கள் மாபியாக்களால் “பலி” கொடுக்கப்பட்டார்கள்.

ஈரோடு கதிர் said...

என்ன சொல்றது???

காமராஜ் said...

நன்றிங்க பத்மா மேடம்.

காமராஜ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லெமூரியன்.

காமராஜ் said...

நன்றி.

சரவணன்,
பாலாண்ணா

காமராஜ் said...

நன்றி

தோழர் தியாகு.
பாலாஜி,
ஹரிகரன்
கதிர்