6.9.10

தரையிறக்கும் இயல்புகள்.

எப்படியோ தப்பித்துவிட்டது
வழிதப்பிய வண்ணத்துப்பூச்சி.
சுழலும் மின்விசிறியைப்பார்த்து
பதைபதைத்துக்கொண்டிருந்த என்
இலக்கிய கொமட்டில் இடித்தபடி
விசைப் பொத்தானைஅணைத்தது விட்டு
அடுக்களைக்குப் போனாள் காரியக்காரி.

வீட்டைக் கடக்கிற போதெல்லாம்
படபடக்கிற படபடக்கவைக்கிற
பெயர் தெரியாத வண்ணத்துப்பூச்சி
டீச்சர் இல்லையாவென நடுக்கூடத்தில்
வந்து நின்றுகொண்டு கேட்டபோதும்
திகைத்திருந்தேன் செய்வதறியாது.

வெக்கையும் மௌனமுமாக
வியர்த்திருந்தது வீடு
காத்தாடி போடக்கூட முடியாம
அப்படியென்ன யோசனையென்று
இயல்பாக சுழலவிட்டாள் சூழ்நிலையை. 

12 comments:

சீமான்கனி said...

Me the 1st....

சீமான்கனி said...

//வெக்கையும் மௌனமுமாக
வியர்த்திருந்தது வீடு
காத்தாடி போடக்கூட முடியாம
அப்படியென்ன யோசனையென்று
இயல்பாக சுழலவிட்டாள் சூழ்நிலையை.//

மிக அருமை அண்ணே சுருக்கென முடிந்து போன சூழ்நிலைக் கவிதை..
ஆமாம் டீச்சர் இப்போ எங்கே???

லெமூரியன்... said...

\\வீட்டைக் கடக்கிற போதெல்லாம்
படபடக்கிற படபடக்கவைக்கிற
பெயர் தெரியாத வண்ணத்துப்பூச்சி....//

ரசித்த வரிகள் அண்ணா...! :-) :-)

\\இயல்பாக சுழலவிட்டாள் சூழ்நிலையை....//
மூச்சை இறுக்கிப் பிடிக்கும் சூழ்நிலை.....

மேலும் ஒரு முறை படித்து பார்த்து சூழ்நிலையை கற்பனை செய்து கொள்கிறேன்..! :-)

சூப்பரா இருக்கு..! :-)

கோடிட்ட இடம் உங்க குறும்புத்தனத்தை காட்டுது... ஹா ஹா ஹா..!

லெமூரியன்... said...

படபடக்கவைக்கிற

இந்த வரியைதான் கோடிட்டு காட்ட முயற்சித்தேன்..! :-)

பா.ராஜாராம் said...

:-))சூப்பர் காமு!

டீச்சர் கவனியுங்கள் பையனை.

Anonymous said...

//அப்படியென்ன யோசனையென்று
இயல்பாக சுழலவிட்டாள் சூழ்நிலையை. //

கனவுலகிலிருந்து நினைவுக்கு மீட்டு வருகிறது..
நைஸ்...

காமராஜ் said...

கனி அன்புக்கு நன்றி கனி.

காமராஜ் said...

கனி அன்புக்கு நன்றி கனி.

காமராஜ் said...

இளங்காலை வணக்கம் பாரா.

ஈரோடு கதிர் said...

அழகு

உயிரோடை said...

தலைப்பும் கவிதையும் அழகு.

பாவம் வண்ணத்துப்பூச்சியும் அதற்கு இரக்கப்படும் அண்ணனும்.

பத்மா said...

படபடக்கிற படபடக்கவைக்கிற
பெயர் தெரியாத வண்ணத்துப்பூச்சி


அது என்ன நிறம் கொஞ்சம் நினைவிருந்தால் சொல்லுங்கள்..:))

அருமை சார் ...ரசித்து ரசித்து படித்தேன்