9.9.10

ஓசிச்சினிமா

அந்த மடத்து வாசலுக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டோ  நின்று கொண்டோ தான் பீடிகுடித்துக் கொண்டிருப்பார் பிச்சைமுத்து தாத்தா. அவருக்குத்தேவை அப்போதைக்கு காப்பித்தண்ணி குடிக்க ஒரு ஒத்த ரூபா.அதுக்காக நடக்கிற  போராட்டம் அந்த காலை நேரத்து ஓசிச்சினிமாவாக மாறும்.

'நேத்து பாத்திகட்ட ஆளில்லன்னு  தேடிட்டு இருந்தாக ஏ சின்னையா நீ போகலையா'

இப்படிக் கேட்டு விட்டு பால்ராஸ் ஒரு பீடியைப்பத்த வைப்பான்.ஆனால் கருப்பாய்க் கிழவிக்கு கனகனன்னு கொளுந்துவிட்டு எறியும்.

''ஆமா அவுங்கப்பென் ஏலக்கா எஸ்டேட்டு வச்சிட்டு போனா அதச் சுத்திப்பாக்க போயிருப்பாரு.அந்தா அந்தா கட்டியிருக்கிற லங்கோட்டுத் துணிக்கு நா ஒரு வாரம் வேப்பமுத்து பெறக்கியிருக்கேன்''. இப்படி ஆரம்பிக்கிற கச்சேரிக்கு மளமளவென்று ஆள்கூடும்.கூட்டம் கூடக் கூட கருப்பாய்க் கெழவிக்கு சுதி எறும் கெட்டவார்த்த போட்டு பாட்டுப்படுவா.பொறுத்து பொறுத்து பாத்திருந்து விட்டு பிச்சைமுத்து தாத்தா பீடியத் தூக்கி வீசிவிட்டு விருட்டென்று கெளம்பிருவர்.

இது பெரும்பாலும் விடிகாலையில் அல்லது அந்தி சாயும் நேரங்களில் கீழத்தெருவில் ஏதவதொரு வீட்டுமுன்னால் தினம்  நடக்கும். கருப்பாய்க்கெழவி வீட்டுச்சண்டையில் கொஞ்சம் கூடுதலாக கூட்டம் கூடும். சண்டையை ஒரு நிகழ் கலையாக நிகழ்த்திக் காட்டுவாள். சொலவடைகளும், பாட்டும்,கலந்த கெட்டவார்த்தைகள் கேட்கப்பிடிக்காதது போல முகத்தை வைத்துக்கொண்டு கூட்டம் எக்குத்தப்பாகக் கூடும்.

'சரி சரி ஒரு ரெண்டு ரூவாக்கடங்குடு'  சாமிதாசு கேட்பான்

'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்கெ ரெண்டு கொடுமெ ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்',

சொல்லும்போது கெழவி சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு ஆடிக் காட்டுவாள்.

'எலே எம்புருசனுக்கே ஒத்த ரூவா குடுக்க மாட்டனுட்டு ஊரக்கூட்டிருக்கேன் நீ வந்து நோட்டம் பாக்கயா ஓடிப்பிரு ஓடி'

சொல்லவும் சாமிதாசு பொய்யாய் பயந்து கினுக்கட்டி கினுக்கட்டின்னு ஓடுவான். பாட்டிசண்டைக்குக் காரணமான புருசனோ,இல்லை சம்பளம் குடுக்காத மேட்டுப்பட்டி கொண்டக்கார அழகர்சாமி நாயக்கரோ அந்த இடத்தைவிட்டுப்போனப் பிறகும் சண்டை தொடரும்.

போட்டுவச்ச காப்பி தண்ணியக்கூடக் குடிக்க விடாம பெரியன வெரட்டி விட்டுட்டய பெரிம்மே சொல்வதற்கு ஒரு ஆள்வேணும்.சொன்னதும் 

''வீஞ்சாங்க்குண்ண்டி வெறுங்குண்டி போனாப் போறான் பெரிய்ய பெரியன்,சுடவச்சு ரெண்டு தேரங்குடிக்க மாட்டன்,அதுக்காக ஒனக்குத் தந்துர மாட்டண்டி மாக்கரையான் சொத்தென்ன ஆளில்லாச்சொத்தா''

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஏ நாத்து நடத்தேரமாச்சு என்று யாரவது குரல்குடுக்கவும்  தடபுடவென்று ஓடிப்போய் தூக்குச்சட்டியில் கஞ்சியை ஊத்தி, அவிச்ச வத்தல வறுத்து ஒரு துணியில் முடிந்துகொண்டு வீட்டப்பூட்டி பொட்டிக்கடையில சாவியக்'குடுத்துட்டு

''ஏய்யா இந்தா நவராசு,எம்மகனே ஒரு ரூவா அந்தக்கெளவண்ட குடுத்துரு.வேலைக்கி போகாட்டாலு பராவால்ல வீட்டத்தொறந்து போட்றாமய்யா''.

ரெங்ப்பெட்டிக்கு மாட்டுகிற பூட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு பரபரக்க ஓடுவாள்.

11 comments:

செ.சரவணக்குமார் said...

நலமா காமு அண்ணா. பா.ரா அழைத்துச் சொன்னார்.

உங்கள் அன்பிற்கு, என் போன்ற தம்பிகளை நீங்கள் அரவணைத்துச் செல்லும் பாங்கிற்கு மிக்க நன்றி அண்ணா.

ஈரோடு கதிர் said...

||கினுக்கட்டி கினுக்கட்டின்னு ஓடுவான்.||

ஹி ஹி... இத மனசுக்குள்ளே ஓட்டிப்பார்க்கவே தமாசா இருக்கு

நேசமித்ரன் said...

நன்றாய் இருக்கிறது காமு சார்

vasu balaji said...

அட அட!எழுத்தத்தான் படிக்குது கண்ணு. ஆனா காட்சி தெரியுதே எப்படி?

velji said...

ஏறிப்பாடுறதும்..சடக்குன்னு எறங்கிப்பாடுறதும்! கிழவி பொழப்பபாக்க கெளம்பிருச்சு... நமக்கு சுள்ளுன்னு ஒரு நாட்டுபாட்டு பாடலாம் போல இருக்கு!

காமராஜ் said...

அன்புத்தம்பி சரவணன்.
வணக்கம். நலமே நலமே விளைக.

எங்கே எழுத்தவே காணோம்.
சுருட்டி சுருட்டி வைக்கவேண்டாம்.
உதறி விரித்துவிடுங்கள்.

கனம் குறையும்.

காமராஜ் said...

நன்றி ...
கதிர்,
ரொம்ப நன்றி.

காமராஜ் said...

vவணக்கம் மித்ரன்.
கருவிகள் கையிலெடுத்தாச்சா.
நல்ல சுற்று சுற்றியிருக்கிறீர்கள்.
எழுத்து வேகத்துடன் இருக்கும்.
காத்திருக்கிறோம்.

காமராஜ் said...

பாலாண்ணா அன்புக்கு நன்றி,

காமராஜ் said...

Blogger velji said...

//ஏறிப்பாடுறதும்..சடக்குன்னு எறங்கிப்பாடுறதும்! கிழவி பொழப்பபாக்க கெளம்பிருச்சு... நமக்கு சுள்ளுன்னு ஒரு நாட்டுபாட்டு பாடலாம் போல இருக்கு!//

வேல்ஜி இது இன்னொரு பத்தியாய் இருக்கே

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு நண்பா