' ரெண்டுதரவெ போட்டேன் பிஸி பிஸின்னே வருது '
......
' என்ன பிள்ளைக ஒரு போன் பண்ணத் தேரமில்லாம என்னதான் படிப்போ'
வெங்காயம் உறிக்கும் போதும், வீடு கூட்டும் போதும் அங்களாய்த்தவாறே பொழுதுகடத்தும் தாய்க்காரி.இனிப்புக்கடையில், எதேச்சையாய்,மிக்சர் வாங்கப்போன போது கூட பால்கோவவைப் பார்த்ததும் நிழலடுகிறது பிள்ளை முகம்.விளம்பரத்தில் வரும் இளைஞனைப் பார்த்ததும் இதே கலரில் அவனுக்கொரு சட்டை எடுக்கவேணும் என்று குறிப்பெழுதிக்கொள்கிறாள்.
இதே தவிப்பு அங்கும் இருக்குமா ?.பெரு நகர வீதியில் எதிர்ப்படும் தாய்மார்களின் நடையில்,விடுதித்தேநீரில் இல்லாத சுவையில், அழுக்குத் துணியைத் துவைக்கிற பொழுதில் நிழலாடுமா தாயின் முகம்?.
இந்தக் கேள்விகளைத் தகப்பன் கேட்டான் தாயிடம்.
அவளும் ஒரு எதிர்க் கேள்வி வைத்திருந்தாள், பேருந்தில் பணியிடத்தில் எதிர்ப்படும், மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம் எதற்காகவென.
ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பிப் போனார்கள் ஊருக்கு.பேருந்துப் பயணத்தின் பாதியில் கனமழை கொட்டியது.ஓட்டுனர் அழைத்து எஞ்சினுக்கு அருகில் உட்காரச்சொன்னார்.குளிருக்கு இதமாக இருந்தது.ஓட்டுனரிடம் கொஞ்சம் அம்மாவின் சாயல் தெரிந்தது.அது கதகதப்பில உபசரிப்பிலா என்று பிரித்துப்பார்க்க முடியவில்லை அவனுக்கு. கைப்பையில் கனத்தது அம்மாவின் நினைவுகளும் அவள் பல்லுக்கு இதமாக மெள்ள கொஞ்சம் இனிப்புகளும்.
இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம்.
25 comments:
"இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்"
ஆமாங்க. காலம் பூரா பம்பரமா நம்ம காலை சுத்தி வரும் நினைப்புங்க இது. மறக்க முடியுமா.
அருமைங்க உங்க பதிவு.
அருமையான பதிவு அண்ணா! பார்க்கும் அனைத்து பொருட்களும் பிரியத்துக்குரியவர்களின் நினைவே!
\\"இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்"\\
ரொம்ப அருமை அங்கிள். ஆமாம் பழகியறியாதவர்களிடமிருந்து வெளிப்படும் திடீர் அன்பை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
//இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம்.// அருமை!
நல்ல,அருமையான பதிவு
உறவின் வாசங்கள் நேரடியாக மனதை நிறைக்க கூடியது..
நன்றி..
www.narumugai.com
மிக நல்ல பகிர்வு..
நன்றி காமு அண்ணா.
//எதிர்ப்படும் மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம்// அதுதானா?
யாவகப் படுத்துனதுக்கு நன்றி!
அன்பு காமராஜ்,
பிரியங்கள் நிறைய. எப்படி இருக்கீங்க! அறுந்து அறுந்து தொடரும் அன்பு அலைபேசியில் தந்தியில்லாமல் கடத்துகிறது. விக்கும் போதும், பொறைக்கேறும்போதும் தலை தட்டும் தண்ணீர் தரும் விரல்களின் நகக்கண்களில் வழியும் கருணை, அன்பு இன்னும் பெயரிடப்படா வரைவிலக்கணங்களில் சிக்காத உணர்வுகள். அபாரம்
அன்புடன்
ராகவன்
நன்றி சேது சார்.
இடுகையை வெளியிடுமுன்னமே
அன்பை பின்னூட்டமாக்கிவிட்டீர்கள். நன்றி.
அம்பிகா, கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
அதேதாங்க... ஒவ்வொருநாளும் எதிர்படுகிற ஏதோவொன்றில் அம்மா தெரிந்துகொண்டேயிருக்கிறாள். அவளுக்கும் அப்படித்தான் இருக்கும்...
நன்றி தீபா
நன்றி தியா.
நன்றி மதன் செந்தில்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடரலாம் .
சரவணன் வாங்க அன்புத்தம்பி. நலமா.
rajasundararajan said...
//எதிர்ப்படும் மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம்// அதுதானா?
யாவகப் படுத்துனதுக்கு நன்றி!//
வாருங்கள் அண்ணா.
உங்களின் வருகை எனக்கு நிறைய்ய குதூகலம் தருகிறது.
ஆஹ்ஹா.. ராகவன்.
வந்தாச்சா..களைகட்டுகிறது எனது பதிவு.நன்றி நன்றி ராகவன் கூப்பிடுகிறேன்.
க.பாலாசி said...
// அதேதாங்க... ஒவ்வொருநாளும் எதிர்படுகிற ஏதோவொன்றில் அம்மா தெரிந்துகொண்டேயிருக்கிறாள். அவளுக்கும் அப்படித்தான் இருக்கும்...//
வாங்க பாலாஜி. இது
அன்பின் அலைவரிசையல்லவா.
அடடா...
அழகான பகிர்வு
பூத்தேனாய் வார்த்தையில் ஒளிந்திருக்கும் ப்ரியம்.:)
//இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம். //
ஆமாம்... எங்கும் வழிந்து கிடக்கிறது நமக்கான பிரியங்கள்... தேடுவோர் கண்டடைவர்!
இம்மாதிரியான ஈரமான மனிதர்களை நானும் சந்தித்து இருக்கிறேன்...
ஓட்டுனர் அம்மாவின் சாயல் என்றதுதான் அருமை ....
நன்றி கதிர்.
பாலாண்ணா நன்றி.
விந்தை மனிதனுக்கும் நன்றி.
செந்தில் வாருங்கள்.
உங்களின் ஈரம், இளமை (youthful) விகடனை (vikatan) யும் நனைத்திருக்கிறது
http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp
வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் பயணத்தை
Post a Comment