திடீரென்று எங்காவது எதிர்ப்படுவாள்.
கையில் வைத்திருக்கும் சாப்பட்டு இலை
ஒழுகும் வேளை ரெண்டு தரம் புழுங்கும் மனசு.
பூவிருக்கும்,பொட்டிருக்கும்,பவுடர் கூட
சில நேரம் சுடிதார், பல நேரம் சேலை
இருந்தும், அலங்கோலம் தரித்து நடப்பாள்.
விடியாத வேலையில், மூடிய கடைவாசலில்
துணி ஒதுங்க சுருண்டுகிடப்பாள், வாசத்தெளிக்கும்
முனியம்மா மூஞ்சில் தெளித்து எழுப்பி வைப்பாள்.
வெடிச்சிரிப்பும் வேடிக்கைப்பேச்சும்
நல்ல பாடல்களும் கெட்டவார்த்தைகளும்
சேர்த்துக்கட்டிய மூட்டை கையிலிருக்கும்.
எதிர்ப்படும் எல்லோரையும் ரகரகமாய் உறவாக்குவாள்
டிரைவர் மாமா,போலீஸ் அண்ணே,பூட்டுக்காரத் தாத்தா
எரிச்சல் படும் மக்களுக்கு ஒரே உறவு லூசுக்கழுத தான்.
பள்ளிக்கூடப் பொட்டலில் ஊர் கூடியிருந்தது கலை இரவு.
பாடினார்கள்,பேசினார்,விகடம்,நடனம் என ஊர் லயித்தது
இடைவேளைகளின் வெற்றிடத்தை வெடிச்சிரிப்பில் நிரப்பினாள்.
22 comments:
பார்த்திருக்கேன் சிலரை. மதுரையில் யாரோ இவர்கள் மாதிரி ஆட்களுக்கு இலவச உணவு தினமும் அளிப்பதாக rediff இல் படித்த ஞாபகம். உண்மையில் பாவம் இவர்கள்.
அன்பு காமராஜ்,
அழகான கவிதை இது... இது போல பொக்கிஷம் அல்லாதவைகளை(நமக்கு) பொக்கிஷமாய் சுமக்கும் உயிர் சித்திரங்கள் எல்லோர் சுவற்றிலும் கிறுக்க பட்டிருக்கும்... மயிற்பீலிகள், பழைய செருப்புகள் என்று வாழ்க்கையின் இரு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க தெரிந்தவர்கள் அவர்கள். இவர்களை பற்றி எழுதாதவர்கள் இல்லை. மிக அழகாக முடித்திருந்தீர்கள் இந்த கவிதையை, எனக்குள் ஒட்டி கொண்டது காமராஜ்.
அன்புடன்
ராகவன்
சிலதை எல்லாம் சிலர் எழுதும்போது ஒரு தார்மீக நியாயம் இருக்கும் . அந்தசத்தியத்துக்காக மன்சுல ஒட்டிக்கும் அப்படியான பேனா அப்படியான கவிதை பாத்துக்கிடுங்க
நடை கொஞ்சம் செறிவா இருக்கலாமோன்னும் தோணுது :)
அழகிய வரிகள்..அருமையானக் கவிதை..சிந்தனைமிக்க கருத்து
ம்ம்ம் நானும் இதுபோல பார்த்துள்ளேன்....வரிகளும் அருமையா இருக்கு
கவனிக்கவிடுகிற அனைத்திலும் ஒரு சிறப்பு மண்டிக்கிடப்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. லேபிளில் குறிப்பிட்டதுபோல சிறப்புப்பெண்தான்.
:(.சென்றவாரம்தான் இப்படி ஒரு பெண்ணை புறநகர் ரயிலில் பார்த்தேன்.
கனமான கவிதை ...
வாழ்வின் புரியாத புதிர்கள் இம்மதிரியான மனிதர்களைப் பார்க்கையில் அதிகமாகிவிடுகின்றன ...
எரிச்சல் படும் மக்களுக்கு ஒரே உறவு லூசுக்கழுத தான்.
-------------
வாழ்ந்திருக்கிறேன் அந்தோணி என்ற பெண்மணியோடு எங்கள் தெருவில்...
:((
நானும் போன வாரம் இப்படி ஒரு பெண்ணை பார்த்து ரொம்ப நேரம் யோசித்து கொண்டே இருந்தேன் ..ஒரு சமயம் பார்க்க போனால் கவலையில்லா உயர்ந்த நிலை என்று கூட தோன்றியது
அருமையான கவிதை சார்
ஆஹா என் அருமை நண்பா இப்படி ஓடி வந்து வாஞ்சையாய் அள்ளிக்கொள்ளும் நாட்கள் இல்லாது எவ்வளவு கடந்து போய்விட்டது.முகமறியா ஈர்ப்பில் வார்த்தைகளின் ஸ்பரிசத்தில் குளிர்ந்த கணங்கள் எத்தனை.
வந்த நாட்களை விட வராத கணங்கள் உறுத்த குறுகுறுத்த சஞ்சலம் ஏன்.பெங்களூரு என்றால்
எங்களுக்கு கப்பன் பார்க் பின்னாடிப்போய் ராகவன் வந்து நின்ற நாட்களை என்ன சொல்ல?
இனி மாம்பசாவும் முகம் காட்டும்.
நன்றி நேசன்.
இன்னும் கூட வார்த்தைகளை செதுக்கியிருக்கலாம்.இதை எதிர்காலக்கவித்தைக்கான எச்சரிக்கையாக்கிக்கொள்வேன்.நல்லது.
வாங்க அன்பு padaippali பாலாJ.
உங்களின் அன்புக்கு நன்றி.
நண்பா ஞான்ஸ்.
தேங்ஸ்.
அன்பின் பாலசி.
அன்பின் செந்தில்.
உங்களிருவர் குவிமையமும்
ஒரே இடத்தில் சந்திக்கின்றன.
ஒரே குரல் தொனிக்கிறது.
எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
பாலாண்ணா.
நேற்றுத்தான் கவனித்தேன்.எத்தனை பெரிய மனசு உங்களுக்கு. அதை நீங்கள் பின்னூட்டமிடும் அளவில் கண்டேன். அவர்களோடு நானும் பெற்றேன் பேறு. நன்றிங்கண்ணா.
Journey and Thought said...
எரிச்சல் படும் மக்களுக்கு ஒரே உறவு லூசுக்கழுத தான்.
-------------
//வாழ்ந்திருக்கிறேன் அந்தோணி என்ற பெண்மணியோடு எங்கள் தெருவில்..//
வணக்கம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் சேர்த்து அன்பும் நன்றியும்.
வாங்க சேதுசார்.
ஓரிடத்தில் நில்லாத நடை.யாரிடத்தும் நிலைக்காத் பர்வை.நாய்கள் பூனைகளோடு இறுக்கமான அன்பு.இப்படியே தெரு முழுதும் அலையும்,கேட்பாரில்லாத பெண்.
பத்மா மேடம்.
வாங்க. கருத்துக்கு நன்றி.
சிறப்புப் பெண்ணை லூசாக மதிக்காதவர்கள் லூசாக நடிப்பவர்களை சிறப்புப் பெண்ணாகப் போற்றுவார்கள்.இதுதான் நாங்கள்.
இப்பதான் பத்மா மேடம் கவிதைய படிச்சிட்டு இங்கிட்டு வந்தாக்க...... என்னங்க எல்லாரும் இன்னிக்கு நாளை இவ்வளவு கனமாக்குறீங்க?! ஹூம்.... வேறொண்ணும் சொல்லத் தோணலைங்க... பேனாவுக்கு முத்தங்கள்!
Post a Comment