இப்படித்தான் இவனுகள்ளாம் நல்ல நேரம் பாத்துக் கழுத்தறுப்பானுக.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மாடன் வராத கோபத்தில் அலுத்துக்கொண்டார் எஞ்சினியரின் மனைவி.
இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடிகாலையிலேயே ஒட்டைச் சைக்கிளில் வந்துவிடுவார்.
காத்திருந்த நாட்டுக் கோழியை கழுத்துத் திருகுவார்,மயிர் பறிப்பார் பிரதேசம் முழுக்க ரெக்கை பறக்கும்.
சுள்ளிகள் எடுத்து சூட்டாம் போடுவார் மஞ்சள் தடவித் துண்டம் போடுவார்.செத்த நேரத்தில் பிரதேசம் முழுக்க கோழி மணக்கும்.
வாருகால் சுத்தப் படுத்த வாட்டர் டேங்கை கழுவிவிட,தேங்காய் பிடுங்க தென்னம்பாளை சீவி விட
சேர்த்து வைத்துக் காத்திருந்த வேலையெல்லாம்,வீட்டைச்சுற்றிச் சுற்றிச் சுத்தமாகும்.ஒரு சொம்புத்தண்ணியை
வாங்கி மடக்கு மடக்கென்று குடிப்பார்.சட்டையை உதறும்போது கோழிச் சிறகுகள் பறக்கும்.சைக்கிளைத்திருப்பி புறப்படுகையில் பிள்ளைகளின் கோரிக்கையும்,பெண்டாட்டியின் கோபமும் மிதக்கும்.
இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வந்து போனார் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாள் வேலு.இப்போது மாடன்.
இன்னைக்கும் கூட எல்லாம் காத்துக்கிடந்தது.எரிச்சலோடு கேட்டாள் மாடன் வீடு எங்கேயென்று.அப்போதும்கூட தோணவில்லை எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவருக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்.
12 comments:
அருமைங்க. ஆமாம். இது மாதிரி கழுத்தறுப்பா தான் படுமே தவிர, நிறைய பேர் செய்யும் உதவின்னு அறியத் தெரியாத மக்கள். காரணம் அவர்களை விட அதிக வசதியுள்ள வாழ்க்கை.
“எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவனுக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்”
வசதியும்,பதவியும் கொடுத்த பண்பு.
super sir
இங்க தான் தோழர் நிக்கிறீங்க ..
மாடன் மனது வாழ்த்தும்
அசத்தல் கலக்குறிங்க .
அருமை காமராஜ். இதப் படிக்கையில எங்க அதிகாரி ஒருத்தர் அனுபவம் கவனம் வருது. அவங்களுக்கு சொந்தமான டீ எஸ்டேட்டுல படிப்பு முடிச்ச லீவுல மேனேஜர் வேலை பார்க்க போயிருக்காரு. அதென்ன தினக்கூலி குடுக்கறது. வாங்கறது திங்கவும் குடிக்கவுமே சரியாப் போனா அவன் கையில காசு சேர வேணாமான்னு வாரக்கூலின்னு சொல்லிட்டாரு. வெள்ளிக்கிழமை கூலி வாங்கி சனி, ஞாயிறு ஃபுல்லா குடிச்சி, திங்கள் காலையில தோட்ட வேலைக்கு ஆளுங்க பாதிக்கு மேல வரலை. இவரை விரட்டி விட்டாரு அவங்க அப்பா:))
வணக்கம் அண்ணா.!
வழக்கம்போல் உங்களோட டச்.!
:) :)
நல்ல இருக்கு அண்ணா...!
உணர்வுகளை ஊடுருவியது நண்பா..அருமை
ஆண்டான், அடிமைத்தனம் இந்திய ரத்ததில் கலந்து விட்டது.
அந்நிய நாடுகளில், கிளாஸ் 4 ரக வேலயாட்கள், போர்ட்டர்கள், ஸ்டார் ஹோட்டல் பேரர், போன்றவர்கள் கிடையாது. மனிதம் இங்கே பர்ஸ் கனத்தாலும், அரசியல் பலத்தாலும், ஜாதித் திமிராலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது.
அருமைங்க
ம்ம்ம்....மற்றுமொரு சுயநலம்!
//இன்னைக்கும் கூட எல்லாம் காத்துக்கிடந்தது.எரிச்சலோடு கேட்டாள் மாடன் வீடு எங்கேயென்று.அப்போதும்கூட தோணவில்லை எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவருக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்//
அருமை
Post a Comment