28.9.10

ஆகாசத்துப் பறவைகளுக்கும் கூடுகளுண்டு.

மழைக்காலப் பேருந்துப் பயணத்தின்
மணித்துளிகளைப்போல கதகதப்பும் குளிரும்.
மேற்கூரையினின்றும் பிதுங்கி விழுந்த
மழைத்துளியின் ஒரு சொட்டுப்போல
சிலிர்ப்பும் அசூயையுமானது வாழ்வு.

பயந்தோடித்திரும்பிவரும்வேப்பமரக் கரிச்சானின்
கத்தலும் கூடலும் காணக்கேட்க இதமளிக்கும்
சட்டைமேல் விழுந்த எச்சத்தை புறந்தள்ளி.
பகல் முழுக்க இறைந்த வயிற்றின் முன்னிரவு
பருக்கைகள் போல நீள்கிறது வாஞ்சையின் கை.

தகர இரைச்சலிலும் வந்து விழுகிற இசைபோல
நகரப் புழுதிக்குள்ளிருந்தும் நாசி நுழைகிற பூவாசம்போல
அவரவர்க்கான ஆசுவசமும் அலாதி இடம் சேர்கிறது
வாழ்ந்துகெட்ட ஆல்பர்ட்டும் வளர்ப்புப் பிராணியும் போல.

9 comments:

பவள சங்கரி said...

அருமையான தலைப்பு.....தகர இரைச்சலிலும் வந்து விழுகிற இசைபோல
நகரப் புழுதிக்குள்ளிருந்தும் நாசி நுழைகிற பூவாசம்போல.........எத்துணை அழகான உவமானம்....... வாழ்த்துக்கள் சார்.

Unknown said...

ரசிக்க முடிகிற பேருந்துப் பயணம் ..

jothi said...

அருமையான தலைப்பு..

அருமை,..

மழையின் தூறலில் பச்சை வேர்க்கடலையை சூடாக சாப்பிட்டுக்கொண்டே கூட வறக்காப்பியை குடிக்கணும்,.. அட அட,.. அதுதானே வாழ்க்கை,..

thiyaa said...

அருமை,..
எப்பிடிதான் யோசிக்கிறிங்களோ!!!

அன்புடன் அருணா said...

இன்னும் கொஞ்சம் அழகு படுத்தியிருக்கலாமோ???

க.பாலாசி said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க...

//பகல் முழுக்க இறைந்த வயிற்றின் முன்னிரவு
பருக்கைகள் போல நீள்கிறது வாஞ்சையின் கை //

எப்பா... அருமையான சொல்லாட்சி..

vinthaimanithan said...

நுணுக்கமாய் அழகாய்ப் பதிகின்றது உணர்வுகளை!

//அவரவர்க்கான ஆசுவசமும் அலாதி இடம் சேர்கிறது//

ஆமாமில்ல!

Unknown said...

அப்பா என்ன அருமையான உவமை. விழும் மழை துளிகளை பார்த்துகிட்டே இருக்கலாம். சுகமே தனி. நன்றி நண்பரே!
அருமையான ப்ரவாகம்.

vasu balaji said...

எப்போதும் போல் அற்புதம்:)