சாலமன், சாலமன் என்கிற மன்னன் ஒருவன் இருந்தானாம். பயங்கரமான நியாயக்காரன், நீதிதவறாதவன்.அவனது அரசவைக்கு ஒரு வழக்கு வந்ததாம். இரண்டு பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயுரிமைகேட்டு கொண்டு வந்த வழக்கு அது.நீதிமான்,பயங்கரமான நியாயக்காரன் குழந்தையை சமமாக பங்கிட்டு க்கொடுக்கச் சொன்னானாம். ஒருத்தி 'சரி அப்படியே ஆகட்டும் அரசே, இது நல்ல தீர்ப்பு' என்று அரசனைப் பாராட்டினாளாம்.
ஆப்பம் பங்குவைக்கப்பட்டதும், யானைக்கும் பானைக்கும் சரி, நரி வடையை பறித்தகதை என பங்கீடு குறித்த நீதிக்கதைகள் நம்மிடம் ஏராளம் இருக்கிறது. அந்த வரிசையில் இன்னும் பல கதைகளை எதிர் சந்ததிகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்போம்
5 comments:
இப்பொழுது இன்னுமோர் கதை....
ஆதி காலத்திலுருந்து நம்ம ஆளுங்களுக்கு நல்லா கதை சொல்லத் திரியும். இதையும் சேத்துகிடுவோம்.
அடுத்த அறுவது வருஷத்துக்கு அப்பீல வச்சி பொழச்சிக்கலாம்.:)
நீதிபதிகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உணர்த்துகிறது.
என்னைபொருத்தவரை இந்த மத குப்பைகளை ஒதுக்கி வைத்தால்தான் மனிதம் செழிக்கும் ...
Post a Comment