ரோசாவே சின்ன ரோசாவே என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அதே மெட்டில் அமைந்த ஹிந்தி பாடலைப்பாடிக்கொண்டே அருகே வந்தான்.
அவன் கழுத்தில் தொங்கிய ஹார்மோனியப்பெட்டி ரயிலிறைச்சலைத்தாண்டி வந்து இசை பேசியது. அவனோடு செக்கச்செவேலென்ற சின்னப்பெண் கூட வந்தாள். அவளது கையில் இரண்டு வெள்ளை தகடுகள் இருந்தது அதை வைத்து தாளம் போட்டுக்கொண்டு வந்தாள்.உற்றுக்கவனித்த போதுதான் தெரிந்தது.அது அஸ்பெஸ்டாஸ் தகடுகளை உடைத்துச் செய்யப்பட்ட வாத்தியக்கருவி என்று.roadside stones are prolotariates weapen என்று படித்த பதம் நினைவுக்கு வந்தது.
ஹார்மோனியக்காரனைப் பார்த்து ஒரு பிராயாணி சொன்னார் கண்ணு தெரியலையோன்னு நெனச்சேன்,நல்லாத்தானே இருக்கு ஆளும் தெடமாத்தானே இருக்கான் ஒழைச்சுபிழைக்காலமில்ல” என்றார்.உடனே உடன் பயணித்தவர்கள் அது பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் அவன் ஒரு தேசத்துரோக குற்றவாளிபோல புனையப்பட்டான்.புத்தகம் படித்துக்கொண்டு வந்த இன்னொரு பயணி மூடி வைத்துவிட்டுச்சொன்னார் ஆமா இன்போசியஸ் கம்பெனில டீம் லீடர் போஸ்ட் தர்ரேன்னாங்க இவந்தான் வேண்டமின்னு சொல்லிட்டு வந்து பிச்சையெடுக்கிறான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார்.ஆளாலுக்கு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கொஞ்சநேரத்துக்கெல்லாம் அடுத்த நிறுத்தம் வந்தது புத்தகப்பிரயாணி எழுந்து போய்விட்டார்.திரும்பவும் மெல்ல சபை கலைகட்டியது.
குடிச்சிருப்பானோ,அதான் அப்படி கிருத்துருவமா பேசுறான்,ஆமாமா கவர்மெண்டே கடையத்தொறந்து ஊத்திக்கொடுத்தா இப்பிடித்தான் என்றார்கள்.அதுக்குத்தா அம்மா வைக்கபோகுதுல்ல ஆப்பு என்றார் இன்னொருவர்.அப்ப டாஸ்மாக்க மூடிருவாங்களா என்று கேட்டார்.
மாலை மலர்ல கேள்விக்குறி போட்டாச்சு என்றார்.அப்பாட தமிழ்நாடு இன்னிமே உருப்பட்டுரும் என்கிற நிம்மதிப்பெருமூச்சு வந்தது.
டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டால் தமிழர் நாட்டில் ஒருவனும் குடிக்கமாட்டானா என்றார் கூட வந்தவர்.
இப்போதும் கூட ஒரு சின்ன மௌனம் இடைமறித்தது.
6 comments:
=))). செம
பொதுவெளியில் சார்பு இல்லாமல் எல்லோரையும் விமர்சிப்பவர்கள் அதிகம், அவர்கள் 100% யோக்கியவான்கள்மாதிரி.
Nice observation.
hahahahahaha! super!!
ஹ.. என்னத்த சொல்றது... மனுஷபய புத்தி..
ஒரு குறுங் கதையின் மூலமாக பல் வேறுபட்ட மனித மனங்களை அலசியுள்ளீர்கள். அருமையான படைப்பு சகோ.
Post a Comment