8.1.12

நக்கீரன் அலுவலகத்தில் எறியப்பட்ட கல்ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது.

எதைச் செய்தியாக்குவது எதை இருட்டடிப்பு செய்வது என்பதில் ஒரு சாரார் இன்னும் காலம் கடந்த  விற்பன்னர் களாகவே இருக்கிறார்கள். செப் 11- 2011 ல் ஆறு தமிழர்கள் மன்னிக்கணும் ஆறு சக மனிதர்கள்  கொல்லப் பட்டார்கள். அப்போது தமிழகம் ஒரு கனத்த மௌனத்தோடு கடந்து போனது.இதே சமூக வலைத் தளத்தில் கூட அதைப்பற்றி பேசியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மனிதாபிகள் மட்டுமே. வாச்சாத்தி  வன்கொடுமை யின் தீர்ப்புகள் வெளியானபோது ஒரு கட்சிமட்டும் அதை செய்தியாக்கியது. அதனோடு  தொடர்புடை யவர்கள் அதுபற்றி எழுதினார்கள். அந்த தீர்ப்பு வெளியான கொஞ்சநாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட  மலை மக்கள் அதே பானியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

இவையாவும் தமிழகத்து மக்களின் மனிதாபிமானத்தை, இன உணர்வை, புரட்சிசெய்யும் வீரத்தை உசுப்பி விட முடிய வில்லை. தமிழகத்து செய்திக் கலாச்சாரத்துக்கு தீனி போட வும் முடியவில்லை. ஒரு மனிதர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று எழுதிய செய்தியால் தூங்கமுடியாத தமிழகம் கொதித்தெழுந்து வந்து பத்திரிகை அலுவலக த்தை சூறையாடுகிறது. ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் என்று சும்மா இருக்க முடியாத  அறிவுத் தமிழகம் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது சரியா என்று எதிரும் புதிருமாக களத்தில் இறங்குகிறது.

இப்பொழுதல்ல இது வரலாற்று நெடுகிலும் கல்வெட்டுக்களால் எழுதப்பட்ட நமது வீரம். நாட்டில் பஞ்சம் பசி பட்டினி,கொலை கொள்ளை நடந்து கொண்டிருப்பதை அறியாத மன்னன் மனைவியின் கூந்தலில் மணம் எப்படி வந்தது என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைந்தான். அதை பட்டிமன்றப் பொருளாக்குவான். பொண்ணுபிறந்து கல்யாண வயதானால் மணம் முடித்து வைப்பதை விட்டுவிட்டு ஊரைக்கூட்டி போட்டிகள் நடாத்துவான்  புற நானூற்றுத் தமிழன். குடும்பம் நடத்த விளையாட்டும் வீரமும் தெரிந்திருந்தால் போதுமென்று நினைத்த அறிவுத் தமிழகம் அடித்துக்கொண்டு சாகும். உலகம் உருண்டை என்று கண்டுபிடித்துக்கொண்டு  விவாதித்துக் கொண் டிருக் கையில் இமயமலையில் கல்யாணக்கூட்டம்.கூட்டத்தின் சுமை தாங்காமல் தென்பகுதி தராசு போலத் தூக்கியது என்று சரடு விட்டுக் கொண்டலைந்தான். பரிணாமக் கண்டுபிடிப்புகள் தர்க்கமாகிக் கொண்டிருக் கையில் உயர்ந்த கடவுள் ஹரியா சிவனா என்று மயிர்பிளந்து மல்லுக்கட்டிக் கொண்டலைந்தான்.

இப்படித்தான் வெள்ளையன் வந்து அறுநூறு ஆண்டுகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போதும் பொழுது போனது. ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமையாகிக் கிடப்பதை மறந்து அவனவன் மொழி பெரிதா,சாதி பெரிதா சடங்குகள் பெரிதா என்று சண்டையிட்டுக் கொண்டலைந்தார்கள். அப்போதும் டவாலிகளில் இருந்து  ஜில்லாக் கலெக்டர்கள் வரை. சிப்பாய்களில் இருந்து ராணுவ உயரதிகாரிகள் வரை அவனுக்குச் சேவகம்  செய்யப் போட்டி கள் போட்டுக்கொண்டோம். அதற்கு நால்வகை வர்ணக் கோட்பாட்டை துணைக்கழைத்துக்கொண்டோம்.

நான் ஆரியன் எனக்குமட்டும்தான் எல்லாம் தெரியும் எனவே நான் ஆட்சியதிகாரத்துக்கு துணைநிற்கிறேன் என்னைத்தவிர வேறெவனும் அறிவாளியில்லை. நான் வைசியன் எனக்குமட்டுமே வியாபாரம் செய்யத் துப்பிருக் கிறது உனது நாட்டு பொருட்களை என்னிடம் கொடு, நானுனக்கு விற்றுத்தருகிறேன்.நான் சத்திரியன் எனக்கு மட்டுமே சண்டைபோடத்தெரியும் என்னை மட்டும் சிப்பாயாகச் சேர்த்துக்கொள் உனக்காக நான் என்  இந்திய மக்களைக் கொன்று குவிப்பேன் என்று மீசை முறுக்கிக்கொண்டு அலைந்தது இந்தியா.

இதில் என்ன கொடுமை என்றால் அவன் கொண்டுவந்த துப்பாக்கி யாரைக்கொல்ல என்று தெரியாமல் அதன் தொழில் நுட்பத்தில் வியந்து மயங்கிக் கிடந்தான் தமிழன் உட்பட அணைத்து இந்தியனும்.அந்த துப்பாக்கியில் தடவும் கொழுப்பு எதிலிருந்து வந்தது என்று தெரியாமலே அறுநூறு வருடம் பிழைத்துச் செத்தான். இறுதியில் அதில் பன்றிக்கொழுப்பு தடவியிருக்கிறதென்று புரளி கிளப்பிய பிறகு ஒரு பிரிவினர் அடடா என்மதம் இழிவு படுத்தப்பட்டுவிட்டது என்றும். மாட்டுக் கொழுப்பு தடவி இருக்கிறதென்று சொன்ன பிறகு அடடா என் ஜாதி இழிவு படுத்தப்பட்டு விட்டது என இன்னொரு பிரிவும் கலகம் செய்ய ஆரம்பித்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடுகளொடு சண்டைவேண்டாம் என்கிற பஞ்சசீலக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் உள்ளுக்குள் உள்ளுக்குள் நடக்கும் சாதிமதச்சண்டைகல் உரம்போட்டு வளர்க்கப்பட்டது.

வரலாறு திரும்புகிறது..

ஆம் இப்பொழுதும் கூட மாட்டுக்கறிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. தோழர் சிந்தன் தனது முகநூலில் மாட்டுக்கறி உண்பது ஒரு சமூகத்தின் உணவு முறை என்கிறார். அது பெரிய்ய தகவல் பிழை. இருக்கிற இந்தியப் புலால் உணவுகளில் அது மலிவானது. வரலாற்று வழியான தகவல்களின்படி அது கற்காலத்தோடு மிகத் தொண்மை யானது. கால்நடைகள் பண்டையக் காலத்தில் சாமி கும்பிடுவதற்காக மட்டும் வளர்க்கப்பட்டது என்கிற குறிப்பு எந்தவரலாற்று சுவட்டிலும் இல்லை.வெறும் பாலுக்காகவும் அது கூட்டம் கூட்டமாக  வளர்க்கப் படவில்லை.அப்போது கெலாக்சும்,ஓட்சுக்கஞ்சியும்,நூடுல்சும் அப்போது உணவுப்பழக்கத்தில் இல்லை.
ஆகையால் ஆடு மாடுகள் உணவுக்காகவும்  தோலுக்காகவும், மயிருக் காகவும் மட்டுமே வளர்க்கப்பட்டது. மிகமுந்திய காலத்து யாகங்களில் மாடுகள்தான் யாககுண்டங்களில் பலியிடப்பட்டுப் பின்  பரிமாறப்  பட்டிருக்கிறது என்பது நமது தேவைக்காக மறைக்கப்பட்ட வரலாறு. ஒரு சமுதாய மக்கள் மட்டும்தான்  இதைச் சாப்பிடு கிறார்கள் என்பது பெரும் தவறு. சேரிமக்கள் உழைப்பில் விளைகிற எல்லாம் சேரிமக்கள் மட்டும் உண்பதில்லை. அது போலவே சேரிகளில் வெட்டப்படும் மாடுகள் சேரிகளுக்குமட்டும் உணாவாவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலக கணக்கெடுப்புகளில் கூட மனிதர்களுக்கிணையான ஜீவராசிகளில் மாடுமட்டும் தான் பெரிய ஜனத் தொகை. அதுபோலவே உலக புலால் உணவில் எண்பது சதமானத்துக்குமேல் பீஃப்  எனப் படுகிற மாட்டுக்கறியே. மாடு சாப்பிடுவதால் மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாகிறது என்றால் உலகமக்கள் தொகை அணைத்தும் கீழ்சமுதாயம் என்றாகிவிடுமா ?. உணவு முறையால் மேல் கீழ் என்பது வேதாந்திக்கப் படுவது எப்படியோ அதுபோல ஒரு சமுதாயம் மட்டுமே சாப்பிடுகிறதென்பதும் தவறு. ஆயிரக் கணக்கான தானி யங்கள் அழிந்து வெறும் ஒற்றை நெல்லே உணவானதுபோலவே இந்தியாவில் பலதரப்பட்ட புலால் உணவு வகைகளின் உபயோகமும் குறைந்து கறிக்கோழிக்கு மாறி வருகிறது.

அரிசியும் கறிக்கோழியும் திண்ண வக்கில் லாத ஜனத் தொகையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் யாரும் கணினி முகநூல் வைத்திருக்கவில்லை. இதுபோன்ற விவாதங் களில் முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட முகஞ் சுழித்துக்கொண்டு தன்னை ஆட்டுக்கறி மட்டும் தின்னும் மேட்டுக்குடியாக பாவித்துக்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. மாட்டைப்போலவே ஆடும்,கோழியும்,பன்றியும் வளர்த்து பின் உணவுக்காக கொல்லப்படுகிறது என்பதை இந்திய அறிவாளிகள் லாவகமாக மறந்துபோகிறார்கள். இந்த மறதி அதை உண்கிற ஜனத்தொகை ஜாஸ்த்தி என்பதால் ஆதலாலே அவை ஒஸ்த்தி வகையாக உருமாற்றம் அடைகிறது. இன்னும் ஒரு காரணம் பெரும்பான்மையைக் கைவைத்தால் எதிர்ப்பு வேறுவகையாக இருக்கும் என்கிற பயத்தாலும் கூட இருக்கலாம்.

கடைந்தெடுத்த முதலாளித்துவ நாடுகளினாலும் சரி ,இன்னும் க்ரீடத்தையும் பழம்பெருமையையும் தூக்கிப் பிடிக்கும் மன்னராட்சி நாடுகளிலும் கூடக்காணமுடியாத மிகப்பிற்போக்குத் தனமானது சாதீய அடுக்குமுறை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிற பெரும்பான்மை நிறைந்த இந்தியாவில் இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் தாண்டினாலும் அறிவியல் பூர்வமான மாற்றம் கனவிலும் நிகழாது. ஆண்டுக்கு நூறு சாதிச் சண்டைகள் வேண்டுமானல் கட்டாயம்  நிகழும். எனில் நக்கீரன் அலுவலகத்தில் வீசப்பட்ட கல் ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. அது, சூது வாது வன்மம் குடிகொண்ட சாதியத்தாலானது.

27 comments:

Dr. சாரதி said...

"well said"

காமராஜ் said...

நன்றி டாக்டர்

காமராஜ் said...

kanaththa maunam

காமராஜ் said...

//////?

காமராஜ் said...

.....

kashyapan said...

மிக அருமையான பதிவு காமரஜ் அவ்ர்களே!--- காஸ்யபன்

vimalanperali said...

மிக அழமான பதிவு,எறியப்பட்ட கற்களின் வெறுப்பு யார்மீது என்பதல்ல,சாப்பிடப்பட்ட மாமிசம் கொச்சை படுத்தப்பட்டதற்குபின்னால் ஒரு நோக்கம் இருப்பதாகவே/

veligalukkuappaal said...

1)கோமாதாவின் கறியா? ஐயோ குடிமுழுகி போச்சே என்று கும்மரிச்சம் போடுபவர்கள் கேரளாவுக்கு போகட்டும், அங்கே இறைச்சி என்றால் மாட்டிறைச்சிதான், ஆட்டுக்கறியின் பயன்பாடு குறைவே. புரியவில்லையா? அங்குள்ள இந்துக்களின் பெரும்பான்மையோர் உண்பது மாட்டுக்கறிதான். கேரள அரசு அலுவலக கேண்டீன்களிலும் மாட்டுக்கறி உண்டு! கேரளா! Gods Own Country! அதாவது கடவுளர்களின் தேசம் என்பதறிக!
2)இந்தியர்களாகிய நாம் உபயோகிக்கும் அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் மாட்டுக்கறி சாப்பிடும் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்தவைதான்...மின்சாரம்,மின்சாரபல்பு,கார்,சைக்கிள்,ரயில்,ஆகாயவிமானம்,வானொலி,தொலைக்காட்சி... போக்ரானில் வெடிக்கப்பட்ட 2 அணுசக்தி (சோதனை), தற்போது ‘வேணுமா வேண்டாமா’ என்று பேசப்படும் அணுசக்தி,கார்கிலில் பாரத்மாதா கீ ஜே என்று முழங்கும்போது நமது வீரர்களின் கையில் இருந்த துப்பாக்கி...இன்னபிற சமாச்சாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்! மன்மோஹன் சிங், சிதம்பரம் கும்பல் தினசரி காலையில் வழிபடும் அமெரிக்க அதிபர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்தான்!
3)நாங்க சுத்த்த்த்த சைவம், காய்கறி மட்டும்தான் சாப்டுவோம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களை நடுவீதிகளில் கத்திகளால் கட்டாரிகளால் பிளந்து உயிரை எடுப்பவர்கள் மனிதர்களா? மாட்டுக்கறியும் சாப்பிட்டுக்கொண்டு சகமனிதர்களின் துயரம் கண்டு வருந்தி கசிபவர்கள் மனிதர்களா?

4)இறுதியாக:ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்த தலித்துக்களை உயிரோடு கொளுத்தியவர்கள் சைவமா அசைவமா?
...இக்பால்

காமராஜ் said...

வணக்கம் தோழர் காஸ்யபன்.நன்றி.

காமராஜ் said...

நன்றி மூர்த்தி.

காமராஜ் said...

நன்றி தோழர் இக்பால்.

ராவணன் said...

இது மாட்டுக்கறி பற்றி அல்ல, ஜெயலலிதாவைப் பற்றி. நக்கீரன் கோபால் உத்தமன் என்றால் விட்டுவிடலாம். அவனை நீர் உத்தமர் என்றால் விட்டுவிடலாம். இல்லாவிட்டால் காமராஜ் நாடார் வரை கதை நீளும். காமராஜ் நாடார் பற்றி கருணாநிதி என்ற நபர் கூறியதுவரை சுருக்கமாக எழுதலாம்.

காமராஜ் said...

அன்பின் ராவணன் நான் எந்த இடத்திலும் நக்கீரன் கோபால் உத்தமர் என்றோ,இல்லை முதல்வர் ஜெயலலிதா மோசம் என்றோ கூறவில்லை. சரிபார்க்கவும் கூறவில்லையா? இப்பொழுதுகூட நீங்கள் சம்பந்தமில்லாமல் காமராஜ் நாடார்,கருணாநிதி அவர் என்ன, அதுவரைக்கும் போனது அரசியலா இல்லை ஜாதியாலா ? உங்கள் ஆதிக்கச்சண்டையில் வசைபடுவது தாழ்த்தப்பட்ட மக்களின் பிறப்பு என்பது குழாயடிச்சண்டை தொடங்கி நக்கீரக்கட்டுரை வரை ருசுவாகிறது.

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

\\பரிணாமக் கண்டுபிடிப்புகள் தர்க்கமாகிக் கொண்டிருக் கையில்\\ பரிணாமக் கொள்கையில் கண்டுபிடிப்புகள் எல்லாம் நடந்துச்சா..!!!! இது நீங்க சொல்லித்தான் தெரியும். எங்கேயோ எப்பவோ தமிழன்/இந்தியன் செய்ததை விடுங்க, தமிழகத்தை ஐந்து முறை ஆட்சிக்கு வந்த நாத்திக தலைவர் தமிழகத்தை சுபிட்சமான இடமாகவும் தமிழர்களை அதி புத்திசாலிகளாகவும் மாற்றினாரா? சாராயத்தை ஊற்றினார், பல லட்சம் கோடிகளை சுருட்டினார். நல்லது எங்கேயும் நடக்கப் போவதில்லை என்னும்போது அப்புறம் எந்தக் கருமாந்திரக் கொள்கையை பின்பற்றினால் தான் என்ன?

காமராஜ் said...

நன்றி ரத்னவேல் ஐயா.

காமராஜ் said...

வாருங்கள் அய்யா ஜெயதேவ்தாஸ்.
உங்கள் கடுங்கோபத்தைப்பார்க்கும்போது ஹெகல்,புருனே,டார்வினின் ஆகியோர் நேரில் வந்து சொன்னாலும் நம்பமாட் டீர்கள்.

அதுசரி இந்தவிவாதத்தில் கருணாநிதி எப்படிவந்தார் அவர் ஆதரித்து ஏதும் கமெண்ட் போட்டாரா தெரியலயே.

Pradeep said...

Good one sir !!!

riris said...

மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் - விவரிக்கிறார் ஜெயலலிதா என்ற தலைப்பில் இருக்குது சூட்சுமம்..!! ஜெயா நக்கீரனுக்கு நேரடியாக பேட்டியளித்தது போல அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிட்டுவிட்டு, அப்புறம் கோர்ட்டுக்கு போ அல்லது சட்ட நடவடிக்கை எடு என்பதெல்லாம் ஜனநாயகத்தை அதிகபட்சமாக துஷ்பிரயோகம் செய்வதுதானே..?
நக்கீரன் கும்பலின் நோக்கம் நிறைவேறி விட்டது..ஜெயா ஒரு பிராமணத்தி..அதுவும் மாட்டுக் கறி தின்னும் பிராமணத்தி.. என்று சொல்வதன் மூலம் அவருக்கிருக்கும் இமேஜை சர்ச்சைக்குள்ளாக்குவதன் மூலம் யாருக்கெல்லாம் அரசியல் லாபமோ அவர்கள் எய்த அம்புதான் நக்கீரன்.. இது கருனாநிதியாகவும் இருக்கலாம்.. ம நடராசனாகவும் இருக்கலாம்..

riris said...

நக்கீரன் அலுவலகத்தில் கல் எறிந்தவர்களில் பலர் மாட்டுக்கறி உண்ணுபவர்களே.. ஆனால் இந்தச் செய்தியின் நோக்கமே அவர்களைத் தூண்டி கலாட்டவை ஆரம்பித்து வைப்பதுதான்..

riris said...

சாதீயத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிற வரையில் சாதீயம் எப்படி ஒழியும்? ..

Anand said...

சிறப்பான கட்டுரை.

everestdurai said...

அருமையான விளக்கம் நன்றி

selva said...

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் மறுக்கிறேன்
ஆனால் அதை சொல்லும் உரிமை உனக்கு இருக்க வேண்டும் என்பதற்காக என் உயிரையும் கொடுத்து போராடுவேன் என்றான் பிரெஞ்சு எழுத்தாளர் ரூசோ.தனி மனித கருத்து சுதந்திரத்திற்க்காக போராடியவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கருத்து சுதந்திரத்திற்கு அழகான வரையறை வழங்கினர் ஆங்கிலேயர்.
கைத்தடி வீசி நடக்க உனக்கு உரிமை உண்டு ....
அது அடுத்தவன் மூக்கை பதம் பார்க்காத வரை....
நம்மவர்கள் பலரும் கருத்து சுதந்திரத்தை தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக முதல்வரது செயல்பாடுகளில் பல முரண்பாடான முடிவுகள் உண்டு..... சமசீர் கல்வி .தலைமை செயலக மாற்றம், அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம் என்று....
சிலர் அவரது முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம்..
சிலர் மறுதலிக்கலாம்.அம்மாதிரி பல விசயங்களில் நக்கீரன் முதல்வரது கருத்துக்களை விமர்சித்தது உண்டு .....அதற்காக யாரும் கல்லை கையில் எடுத்துக்கொண்டு வரவில்லை.ஆனால் அவரது தனிப்பட்ட விசயங்களை விமர்சிக்கும்போது மாட்டுக்கறி தின்னும் பிராமணத்தி ...என்று எழுதுவது எந்த வகையில் நியாயம்.
கள்ளுண்ணாமை புலால் உண்ணாமை என தனிமனித ஒழுக்கத்திற்க்கென்று ஏராளமாய் எழுதி சென்றுள்ளார் திருவள்ளுவர்.அதில் புலால் உண்ணாமையை விடாப்பிடியாக கடைப்பிடிக்கும் சில சமூகத்தில் பிராமண சமுதாயமும் ஒன்று ...
கறியில் ஆட்டுக்கறி என்ன ..கோழிக்கறி என்ன ....மாட்டுக்கறி என்ன..
இது அப்பட்டமான ஜாதி துவேசமில்லையா. வேறு ஒரு சமூகத்தை சார்ந்தவரை மாட்டுக்கறி தின்னும்.......என்று எழுதியிருந்தால் வன்கொடுமை என்றெல்லாம் பாய்ந்திருக்கும்.
எழுதுவதற்கு தமிழகத்தில் விசயங்களா இல்லை ....நியாயமான விசயங்களை நியாயமான முறையில் விமர்சனம் செய்வது தான் பத்திரிக்கையின் தார்மீக கடமை.அதை விட்டு விட்டு உண்மையை எழுதுகிறேன் என்ற பேரில் நடிகையின் சொந்த வாழ்க்கையை எழுதுவது அரசியல் வாதியை அசிங்கமாய் விமர்சிப்பது அதிகாரிகளை மிரட்டுவது என்பதெல்லாம் முறையற்ற செயல்.
அதற்காக சிலர் நேரடியாக சென்று கல்வீசி அந்த அலுவலகத்தை தாக்குவது கண்டிக்க தக்கது.பாதிக்கப்பட்டிருந்தால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பதே முறையானது.

காமராஜ் said...

புலால் உண்ணக்கூடாது,மாட்டுகறி திண்ணக்கூடாது, விவசாயம் செய்வது இழிவு,வியாபாரம்செய்வது கீழ்மைத்தனம்,கீழோரைபடிக்கச்செய்வதுபெரும்பாவம் என்கிற மிக உயர்ந்த விழுமியங்கள் மீது கல்லெறிந்தால் கோபம்கட்டாயம்வரும் என்பதை தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுஇன்னொரு புறம் அவர்களை நேரிடையாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்துகிறது என்பதை சிந்திக்கக்கூடாது.ஏனெனில் சிந்திக் உரிமையும்மறுக்கப்பட்ட சனங்கள் அவர்கள்.ஊரில் சண்டைநடந்தால் வாதிபிரதிவாதி என இரண்டுதானே இருக்கவேண்டும்/?.கூடவே இழிவைஏற்ருக்கொள்ள தாழ்த்தப்பட்டவர்களை வம்புக்கிழுப்பதுஎப்படி ஞாயம்?

கறுத்தான் said...

அய்யா உங்களது கட்டுரை மிக சரியானது !ஆனால் அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்தால்இன்னும் நம் மக்கள் எவள்ளவு பின் தங்கி இருகிற்ரர்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது .பார்பனியத்தையும் அதன் கட்டமைப்பையும் பற்றி மேலும் விரிவாகவும் எளிமையாகவும் எழுதுங்கள்

கறுத்தான் said...

அய்யா உங்களது கட்டுரை மிக சரியானது !ஆனால் அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்தால்இன்னும் நம் மக்கள் எவள்ளவு பின் தங்கி இருகிற்ரர்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது .பார்பனியத்தையும் அதன் கட்டமைப்பையும் பற்றி மேலும் விரிவாகவும் எளிமையாகவும் எழுதுங்கள்