19.1.12

சொந்த வீட்டிலே ஒளிந்து வாழும் அந்தோணி.

                                              (  photo: anton- sattur )

குளிர்ந்து ரெண்டுநாள் ஆன அடுப்பையும்
விழுந்து காய்ந்துபோன கண்ணீர்த்துளிகளும்
வீடெங்கும் விரவிக்கிடக்கும் இல்லாமையும்
கயிற்றால் இழுத்துக்கட்டிய கதவு வீட்டையும்
ஒரு முப்பதுவருட வாழ்க்கையையும்
விட்டுவிட்டுக்கிளம்பினான் அந்தோணி.
ஒருசாக்குப்பையில் அடங்கிப்போன
சாமான்கள் உடன் எடுத்துக்கொண்டு.

பல்லாவரத்தில் கல்லுடைக்கப்போனவனுக்கு
பூர்வீக வீட்டை விடப்பெரிய குடிசை கிடைத்தது.
முற்றமும் கொல்லையுமாக விரிந்து கிடந்த வீடு
கொட்டாரத்தில்குச்சல் கட்டி குளிக்க
கழிக்கப் பழகிக்கொண்டது குடும்பம்.
முப்பது வருட வாழ்வில் முதல்முதலாக
முற்றத்தில் நட்டுவைத்தான் ஊரின் நினைவாக
ஒரே ஒரு சொந்த வேப்பங்கன்று.

பத்துவருடச் சம்பாத்தியத்தில் பரம்பரைக்
கூலி தொலைத்து பெட்டிக்கடை முதலாளியானான்
கடையைப்பூட்டும் போது கல்லாவையும்
கடையைத்திறந்திருக்கும் போது ஜாதியையும்
ஒளித்து வைத்து ஒரு தலைமறைவு வாழ்ந்தான்.

இரண்டு தலைமுறைக்கு முன்னாள்
ஊருக்குள் ஒளிந்து வாழ்ந்த
அம்மாசி என்கிற யோசியப்பும் இப்போது
சொந்த வீட்டுக்குள்ளே ஒளிந்து வாழும்
அந்தோணி என்கிற அந்தோணிநாடாரும்.
சொந்த தேசத்துக்குள் புலம் பெயர்ந்ததற்கு
சத்தியமாய் வேறுயாரும் காரணமில்லை

7 comments:

காமராஜ் said...

////

Rathnavel Natarajan said...

மனசை நெகிழ வைக்கும் பதிவு.

ELANGO T said...

நிறைய அந்தோணிகள் எல்லா டவுனிலும் உண்டு.

காமராஜ் said...

வணக்கம் அய்யா வருகைக்கும், கருத்துக்கும்,மேலான அன்புக்கும் நன்றி.

காமராஜ் said...

T.T.E said...

// நிறைய அந்தோணிகள் எல்லா டவுனிலும் உண்டு //

வாருங்கள் ..மிகச்சரி.

ஓலை said...

Wow. Mutrilum unmai.

பத்மா said...

pesuvoma ithai patri ?konjam purila !