5.9.09

தடயமில்லாத முத்தம்.








காய்ச்சலின் உக்கிரம் கூடியபோது வாசலுக்கு வருவதே பெரும் தூரமானதாக இருந்தது. பழய்ய போர்வை முழுக்க விக்ஸ் தைலத்தின் வாசனையும் மாத்திரையின் நெடியும் தங்கிவிட்டது. கோரப்பாயில் எடுத்து வைத்த வாந்தியின் நாற்றத்தை அம்மாவின் அன்பு விரட்டிவிட்டிருந்தது. தூக்கத்தில் யார் யாரோ நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்கள் பேசுகிற விடயங்கள் அவன் கனவினுள் இணைந்துகொண்டது.



ஞாயிற்றுக்கிழமை எதிர்வீட்டில் கொதித்த கறிக்குழம்பின் வாசம் கொமட்டிக்கொண்டு வந்தது. சுடுகஞ்சியும் மல்லித்துவையலும் தான் அப்போதைய விருப்ப ஆகாரம். "இந்நேரம் நல்லாருந்தான்னா வெந்தும் வேகாம சுடுசட்டிக்குள்ள கையோட்டிக் கறித்திங்கும் எம்பிள்ள" இப்படித் தளுதளுக்கும் வார்த்தைகளோடும் அம்மாவின் நாலு நாள் கழிந்தது. " எய்யா எந்திரி இந்தக் காப்பித் தண்ணியவாவது குடிச்சிட்டுப்படு, எறங்கவே மாட்டுக்கே, எதாச்சும் காத்துக்கருப்பாயிருக்குமோ '' அங்களாய்ப்பின் தொடர்ச்சியாக பூச்சச் சின்னைய்யா வந்து கிழவன் கோவில் திண்ணீரு போட்டுவிட்டுப் போனார்.



வேலவரும், எம்ஜியும் வந்திருந்தபோது நல்லவேலை அம்மையில்லை காய்ச்ச மாத்திரை வாங்கப் போயிருந்தாள்." ஒன்னுந்தெரியலடா அவிங்க வீடு ஆளரவமில்லாமக் கெடக்கு, தைரியமா இரு என்ன நடந்தாலு சந்திப்பம் " " மாப்ள நாங்கூட அவ என்னத்த ஒன்ய ஏர்ட்டுப்பாக்க போறான்னு நெனச்சே, உசுராக் கெடக்காடா "வள்ளிமுத்துவின் கண்ணில் நீர் கோத்திருந்தது. அம்மை வருகிற சத்தங்கேட்டு பேச்சை மாத்தினார்கள். பேருக்கு ரெண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பிப் போனார்கள். மூஞ்சை உற்றுப் பார்த்து விட்டு அம்மையும் வெளியே போனாள்.
இத்தோடு ஆறுநாள் ஓடிப்போனது எதோ குருட்டுத் தைரியத்தில் நடுராத்திரியில் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து அவளது வீட்டுக்குள் போய் நெடு நேரம் பேச்சில்லாமல் கிடந்து இறுக்கி அணைத்துக் கொண்ட நினவுகள் வந்துபோனது. ஆளரவம் கேட்டு அவளது அம்மா கதவு திறந்ததும், தப்பித்து மழையோடு ஓடிவந்ததும் காய்ச்சலுக்கு காரணமானது.



எதேதோ பயமும் சந்தோசமுமான நினைவுகளோடு நல்ல தூக்கம். யாரோ மீண்டும் இறுக்கிப் பிடித்ததுபோல் இருந்தது. எழுந்தபோது கண்களுக்குள் மத்தாப்பு பொறிகள் பறந்தது. ஆசுவாசப் படுத்திக்கொண்டு தெருவுக்கு வந்தான். செவலை நாய் மட்டும் மாரி வீட்டு கூழைக் குடித்துவிட்டு தப்பியோடிக் கொண்டிருந்தது. கிறுகிறுப்போடு மீண்டும் பாயில் உட்கார்ந்தான் கன்னத்தில் ஈரம் மிசமிருந்தது.

15 comments:

மண்குதிரை said...

-:) nice sir

ஈரோடு கதிர் said...

அருமையான கதை நண்பரே

சந்தனமுல்லை said...

:-) ரொம்ப நல்லாருக்கு!!

மாதவராஜ் said...

:-)))))))

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான நடையில் கதை சொல்கிறீர்கள்.

சூழலிலேயே இருப்பது போன்ற உணர்வை வாசகனுக்கு ஏற்படுத்தி தரும் உங்கள் எழுத்துக்கள்....நன்று.

அன்புடன்
ஆரூரன்

Deepa said...

அருமையான கதை.
:-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ரௌத்ரன் said...

//"இந்நேரம் நல்லாருந்தான்னா வெந்தும் வேகாம சுடுசட்டிக்குள்ள கையோட்டிக் கறித்திங்கும் எம்பிள்ள" //

அழகான மொழி உங்களுடையது...அழகான கதையாகி இருக்க வேண்டியதை மிக சுருக்கமாக முடித்து விட்டீர்கள்...வாசிப்பவர்கள் வாசித்து கொண்டு தான் இருப்பார்கள்...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கதை நண்பா,.. அருமையான போக்கு இருக்கு

குடந்தை அன்புமணி said...

நல்ல கதை.

அன்புடன் அருணா said...

எதாச்சும் காத்துக்கருப்பாயிருக்குமோ ???என்று நினைக்க வைத்தது...

காமராஜ் said...

மண்குதிரை,
கதிர்
சந்தன முல்லை
மாது
ஆரூரான் சார்
தீபா
உலவு
ரௌத்ரன்
ஞானசேகரன்
அன்புமணி
அருணாமேடம்.

எல்லோருக்கும் நன்றி

காமராஜ் said...

சூரியக்கண்ணன், ப்ரதீப், எனது வலைப்பக்கத்தில் இணைந்தமைக்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான கதையோட்டம், சட்டுன்னு முடிவுக்கு கொண்டு வந்து போட்டாலும் நல்லா இருக்குது:)

ஆரூரன் விசுவநாதன் said...

தலைவா....வணக்கம்......

ஆரூரன் சார் ல்லாம் இல்லை,

ஆரூரன் மட்டும்தான்...