முன்னதாக என் அன்பு நண்பன் ஞானசேகரன் அழைத்திருந்தார்.
அப்புறம் அருணா மேடமும் அழைத்தார்கள்.
பின் வரும் நான்கு பதம்பற்றி எழுதச்சொன்ன வீட்டுப்பாடம் இது.
சரிபார்த்து மதிப்பெண் தரலாம்.
காதல்
காதலெனும் ஆப்பிளைக்கடித்த பிறகுதான்,
ஆதாமும் ஏவாளும் மனிதர்களானார்கள்.காதலில்லா தேசத்தில் பூக்களுக்கு இடமில்லை.
காதலற்ற பாலையில் கலைகள் முளைக்காது.காதலில்லா பாடலுக்கு ஓசையில்லை, இசையுமில்லை.
தன்னைத்தானே அழகாக்கிக்கொண்டு,இந்த உலகத்தையும் அழகாக்கும்,
அற்புதக் கிரகம் காதல்.
அழகு
தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்.
அழகு கண்டுபிடிப்புகளைத் தேவதையாக்கும்.வாழ்க்கையின் தேவைகள்
உணவும், உடையும், கட்டிடமுமானகச்சாப் பொருள்களைத் தருகிறது.
அழகுணர்ச்சி அதைருசியாக்கி, வண்ணங்களாக்கி, வீடாக்குக்கிறது.
அது
தேவைகளுக்கும் சந்தைக்கும்
இடையில்பயணமாகும் இடைத்தரகர்.பணம்
அவர்
சாத்தான்களை ஒழிக்க வந்தவர்
சாத்தான்களிடம் சிக்கிக்கொண்டவர்.
கோயில்களுக்குள் இல்லாதவர்.
9 comments:
நன்று நண்பரே
சரி... கலைகள் (அ) களைகள்????
முதல் பொருள் மிக அருமையாக வந்திருக்கிறது உன் கைவண்ணத்தில்.
நல்லாருக்கு!!
"அவர்" அருமை
இது, இவர்களுக்கு எப்பொழுதுதான் புரியுமோ?
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆருரன்
அருமையாக உள்ளது வாழ்த்துகள்
/தன்னைத்தானே அழகாக்கிக்கொண்டு,
இந்த உலகத்தையும் அழகாக்கும், அற்புதக் கிரகம் காதல்./
உங்களைக் கூப்பிட்டதறகுக் காரணமே இப்பிடி அழகா வாசிக்கக் கிடைககுமேன்னுதான்!உங்களுக்கு மதிப்பெண் போட என்னால முடியுமா????
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கதிர்,
மாது,
சந்தனமுல்லை,
ஆரூரான்,
தியாகு,
அருணா மேடம்.
வலைப்பக்கத்தில் இணையும்
அரூர்,
முத்துகுமார்,
செய்யது,
பால்பழனி,
சந்தனமுல்லை.
நன்றி.
படித்தேன்....ரசித்தேன்...
Post a Comment