30.9.09

இன்றய புரட்டுச் செய்திகள், நாளைய போலி வரலாறு

இளம் புரட்சியாளர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சாப்பிட்டார் என்பதை தினமலர் நாளேடு புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதைப்படித்த பக்கத்து வீட்டுப்பாட்டி " ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் சாப்டறதெல்லாமா போடுவாங்க, என்னடா இது எழவாப்போச்சு" என்று நாளேடை மடித்து வைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். அம்பானிகளின் வீட்டிலும், ஐ எம் எஃப் போடுகிற எச்சிலிலும் கைநனைக்கிறவர்களுக்கு உழைக்கும் மக்களின் வீட்டில் சாப்பிடுவது கட்டாயம் புரட்சிதான் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது உழைக்கும் மக்கள் உழுது பயிரிட்டு வேர்வை கலந்து கொடுக்கிற தாணியங்கள்தான் ஆள்பவகளுக்கும் உணவாகுது, ஆண்டவனுக்குக் கூட நெய்வேத்தியம் ஆகுது என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டியதிருக்கிறது. அவரது தந்தை ஓய்வெடுக்க அந்தமான் தீவுகளுக்குப் போனபோது திருவணந்தபுரத்திலிருந்து பாயாசமும், தஞ்சாவூரிலிருந்து நெய்யும் விமானம் மூலம் தருவிக்கப்பட்டது என்பதை தினமலர் அப்போது வெளியிடவில்லை. அல்லது ராகுல் காந்தியின் ஒரு நாள் செலவு என்ன, ஒரு நேரச் சாப்பாட்டின் விலையென்ன என்பதையும் சேர்த்து புள்ளிவிபரத்தோடு எழுதியிருந்தால் கூட தினமலர் போன்ற நாளேடுகளுக்கு ஓரளவு ஒட்டியிருக்கிறது என்று நம்பலாம். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் உதுத்தவர்கள். உதுத்தது ஊருக்கெல்லாம் பெருசு.


இன்றைய செய்தி நாளைய வரலாறு. இன்றைய செய்திகளில் வராத எத்தனையோ நல்ல செய்திகள் நாளைய வரலாற்றில் இடம்பெறாமல் போகும். அப்படிப்போன ஒருவர்தான் தோழர் சீனிவசராவ். சுதந்திரப் போராட்டத்தோடும், உழைக்கும் மக்கள் எழுச்சியோடும், விவசாயிகளின் ஒற்றுமையோடும் அவரது வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. வெண்மணிப் படுகொலைகளில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் ஆதர்சமாகவும், அரணாகவும் இருந்தவர். ஆந்திரத்திலிருந்துவந்து பொதுவுடைமையை விதைக்க வந்த அவர், அதை விவசாயிகளின் மனதிலும், விவசாயக்கூலிகள் மனதிலும் ஆழமாக ஊன்றிவைத்தார்.தனது தலைமறைவுக் காலம் முழுக்க ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் மக்களின், தலித்துகுகளின்குடிசைகளில் மட்டும் தங்கியிருந்தார் என்பது இந்த நேரத்தில் அவரது நினைவுநாளில் நினவு கூறவேண்டியது.


அதுபோலவே 1946 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் வத்திராயிருப்பில் விவசாயிகள், விவசாயக்கூலிகள் இணைந்துஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பது படிக்கிற போது ஆச்சரியமும் வியப்பும் கூடவே பெருமிதமும் அளிக்கிறசெய்தி. வத்திராயிருப்பு காவல் நிலையத்தை முற்றுகை செய்து மாநிலத்தை உலுக்கியது அந்த எழுச்சி.அதற்குப்பெயர் ''சுத்தவாரப்போராட்டம்'' என்பதும், ஜாதிகடந்து பல்லாயிரம் தோழர்களை ஒருங்கினத்த அந்தப் போராட்டத்தில் சங்குப்பிள்ளை சோனைத்தேவர் ஆகிய இருவரும் களப்பலியானார்கள் என்பதும் புல்லரிக்கச் செய்யும் பக்கத்து வீட்டுக்கதை. வீரபாண்டியக் கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ உசி , திருப்பூர் குமரன், என்கிற பட்டியலோடு முடிந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழக சுதந்திர வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் பங்கு வெகுவாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. சிவகாசிக்குப் பக்கத்திலிருக்கும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தியாகி பி.ராமச்சந்திரன் என்பவர் சுத்தவாரப் போராட்டதில் தலைமை தாங்கியர்களில் ஒருவர் என்பதையும், அவர் தோழர் சீனிவாசராவோடு பெரும்பகுதி தலைமறைவாய் அலைந்தவர் என்பதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிஜ வரலாறு.

12 comments:

தமிழ் நாடன் said...

தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எல்லாம் வெகுசன ஆதரவு பெற்றிருப்பது தமிழன் இன்னும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இவர்கள் எழுதுவது எல்லாம் வரலாறு ஆவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

மண்குதிரை said...

dinamalar eppavum eppatiththaan.

intha pakirvukku unmaiyilee nanri sir.

ttpian said...

dinamalar ramesh is a pimp(maamaa)

ஈரோடு கதிர் said...

அழுத்தமாக பதியப்பட்ட ஆதங்கம் நண்பரே

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை...நிறைய தெரியாத விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!!

/ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் உதுத்தவர்கள். உதுத்தது ஊருக்கெல்லாம் பெருசு./

:-)

velji said...

தியாக வாழ்க்கைக்கு காலம் கடந்த பிறகாவது கிடைக்கும் அங்கீகாரத்தையும் 'மறைக்கப்படும் வரலாறுகள்' மறுத்துவிடுகின்றன.தியாகிகள் இன்னொருமுறையும் கொல்லப்படுகிறார்கள்.

ramgopal said...

இங்கே புரட்சி என்கிற சொல் எப்படி மலினப்படுத்தப்பட்டு விட்டதோ, அது போன்ற புரட்சியான செய்கைகளும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது, ஊடகங்களின் பெரும் உதவியால். ஒரு பக்க உண்மையை திரை போட்டு மறைத்து பிம்பங்களை வைத்தே கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

க.பாலாசி said...

இன்றைய நாளேடுகளில் புரட்டப்படும் பக்கங்களின் மிகைந்திருப்பது மிகைப்படுத்தப்பட்ட விடயங்களே. மாறாக வேறெந்த தியாகங்களும் அதில் இடம்பெறுவதில்லை. தாங்கள் குறிப்பிட்ட நாளேடும் இதற்கு விதிவிலக்கல்ல.

//தமிழக சுதந்திர வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் பங்கு வெகுவாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.//

உண்மை...

தேவையான சிந்தனை இடுகை அன்பரே...

அன்புடன் அருணா said...

:(

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை தோழர்...... ஊடகங்கள், வலைப்பூக்களின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவதே இந்த பதிவுகள் தான். நம் பாட்டன், பூட்டன் இப்படி நிகழ்வுகளை பதிவு செய்திருந்தால், இன்று சரித்திரங்களை நாம் தேட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சரித்திரத்திலிருந்து மறைக்கப்பட்டது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, பல காரணங்களுக்காக,பலரும் இருட்டடிக்கப்பட்டது உண்மை.

நல்ல பதிவு

தொடருங்கள்

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

//தமிழக சுதந்திர வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் பங்கு வெகுவாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.//

சரி. அவைகளை வெளிக்கொணர தற்கால கம்யூனிஸ்டுகள் செய்தது என்ன? மாறி மாறித் தாவிக்கொண்டிருக்கிறார்கள்.
அதை விடுங்க. மற்றப்படி இந்தப் பதிவு அருமை & உண்மை.

Deepa said...

//பக்கத்து வீட்டுப்பாட்டி " ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் சாப்டறதெல்லாமா போடுவாங்க, என்னடா இது எழவாப்போச்சு" என்று நாளேடை மடித்து வைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். //

:-)))))) பக்கத்து வீட்டில் அம்மு தானே.. சரி சரி.. சொல்லி விடாதீர்கள் அவளிடம்!

தோழர் சீனிவசராவ் பற்றிப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
நிஜ வரலாற்றைத் தேடித் தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது கசக்கும் நிஜம். :-(