நேற்றிரவே வீடுகளில்,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும் அவியத்தயாராக இருந்திருக்கும். விடிந்தும் விடியாமலும் அவையெல்லாம் நார்ப்பெட்டியில் ஆவிபறக்க விழுந்துகிடக்கும்.ஊரின் நாக்கில் ஒட்டுமொத்தமாக தண்ணீர் கொட்டும்.ரக ரகமான பயறுகளின் மணம் தெருக்களில் வழிந்து ஓடும். அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதைப்பிளக்கும்.
பாரிவேட்டை,மாசிப்படப்பு,என்று சொல்லும் குலதெய்வங்களை நினைத்துப் பார்க்கும் திருநாள் இது.ஒட்டு மொத்த தமிழகமே எட்டுத்திசையிலும் நகர்ந்து கொண்டிருக்கும்.ரயில்,பேருந்து வேன் தொடங்கி ஆட்டோ க்கள் வரை கூட்டம் கூரையில் உட்கார்ந்து பயணம் செய்யும்.நெல்லும் கரும்பும் செழித்துக்கிடக்கும் கோவை மாவட்டக்குக்கிராமத்திலிருந்து வேலிக்கரடுகள் பரவிக்கிடக்கும் ராமநாதபுர குக்கிராமத்துக்கு கூட்டமாக வருவார்கள். எதாவதொரு பொட்டக் காட்டில் கேட்பாரற்றுக் கிடந்த நடுகல்லைச் சுற்றி பந்தலிட்டு படையல் வைத்து, பொங்கி, குலவையிட்டு கும்மாளமிட்டுச் செல்லுவார்கள். இது ஒரு சுற்றுலாவெனக் குதித்துக் கூட வரும் சிறார்களிடம் இது ஒங்க முப்பாட்டன் வாழ்ந்த கிராமம் வாய்மொழி வரலாறு சொல்லிவைப்பார்கள்.
பழைய வாழ்வைத் தோண்டி பூர்வீகம் தேடி,வேர்காணும் மக்களிடத்தில் அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் அடி ஆளத்தில் உறங்கிக்கொண்டே இருப்பதற்கான அடையாள நாள் பாரிவேட்டை. இதற்கு பின்கதை,புனைவு வரலாறு,பிற்சேர்க்கை பல வந்து வேறு வண்ணங்கள் பூசப்பட்டாலும். ஒட்டுமொத்த தமிழகத்தின் முப்பாட்டன்களின் பெயர்கள் மொத்தம் பத்து அல்லது இருபதுதானிருக்கும். கருப்பன், மாடன், கந்தன், இசக்கி,சாயலுள்ள பெயர்கள் தவிர ஏதும் இருக்கச் சாத்தியமில்லை.அப்படி இருந்தால் எழுதுங்கள்.
24 comments:
எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண்டியில் குலுங்கி குலுங்கிச் சம்மாது கும்பிடப் போனது,ஆட்டம் போட்டது போக சூடம் காட்டும் ஒரு நிமிடம் அமைதி காத்தது என்று இப்பவும் நினைவடுக்குகளில் இருப்பவற்றை உருவிக் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள் காமராஜ்!
பாரிவேட்டை,மாசிப்படப்பு ரெண்டுமே கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், அடிக்கிற வெயில்,மழை அத்தனையையும்தாங்கிக்கொண்டு, பிடித்த அரிவாளோடு பொட்டல்காட்டில் நிற்கிற என்னோட குலசாமியை ஞாபகப்படுத்திட்டீங்க.
தெரிந்து கொண்டேன். அருமையான பகிர்வு.
அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் குறித்து பாரதி கிருஷ்ணகுமார் உரையில் ஒரு முறை கேட்டிருக்கிறேன்
நன்றி தோழரே
fantastic post
அனுகுண்டுச் சத்தம் ?
****************
முப்பாட்டன்களின் பெயர்கள் மொத்தம் பத்து அல்லது இருபதுதானிருக்கும். கருப்பன், மாடன், கந்தன், இசக்கி,சாயலுள்ள பெயர்கள் தவிர ஏதும் இருக்கச் சாத்தியமில்லை.அப்படி இருந்தால் எழுதுங்கள்
*******************************
அட சாமி எவ்ளோ பெரிய விஷயத்தை அசால்டா சொல்லிட்டு போறீங்க காமராஜ் ?
திராவிடம், ஆதி தெய்வங்கள்,எந்த வந்தேறி ராசாக்களாலும் மத திணிப்புகளாலும் மாற்றங்கள் மசித்து விடாதிருந்த கலாசாரம் விரைப்பைகளில் குரொமோசொம்களில்
கலந்து விடாமல் இருந்த கைபர் புழுதி எல்லாமும் //
ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை வாசித்திருப்பீர்கள் தானே ?
இல்லாவிடில் வாசியுங்களேன்
:)
மாமா...புதிய உலகிற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!!!!
(குறிப்பு:இதில் சிலேடை ஏதும் இல்லை)
//எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண்டியில் குலுங்கி குலுங்கிச் சம்மாது கும்பிடப் போனது,ஆட்டம் போட்டது போக சூடம் காட்டும் ஒரு நிமிடம் அமைதி காத்தது என்று இப்பவும் நினைவடுக்குகளில்//
நல்லாருக்கு அருணா.
காலையிலிருந்து ஒரு அமளி.
ஊர்ந்து போகிற எல்லாவற்றிலும்
மனிதக்கூட்டம்.
சாத்தூர் தூசிக்காடா இருக்கு.
நாளைக்கு நாங்க.
பங்காளிகள், தூரத்து சொந்தம் ,ஒரு கோயில் கும்பிடுகிற வேறு வேறுமக்கள், எல்லாம் ஒன்றிப்போய் குசலம் விசாரித்து திரும்பி வரும் நாள்.
அது மக்கள் சாமி அவர்களோடு தானே இருக்கும்.
வாங்க வித்யா.
அன்புக்கு நன்றி.
dear kathir
ஆமா அந்தப் புத்தகத்தை
அவர்தான் வாங்கிக்கொண்டுவந்தார்.
அவர் படிப்பதற்குள் நானும் மாதுவும் படித்துவிட்டோம்.
அப்போது அவரே எங்களுக்கு மிகப்பெரிய நடக்கும் புத்தகமாக இருந்தார்.
நன்றி குப்பன் சார்
நேசமித்ரன்,
ரொம்பநாள் ஆசைப்பட்டு தேடி அலைந்து
படித்த புத்தகம் அது.
ரெண்டு முறை படித்துவிட்டேன்.
கிட்டத்தட்ட அதே சாயலில் இருக்கும்
world of destiny ஐ த் தொடராக தூர்தர்ஷனில்
ஒலிபரப்பிய காலங்களில் தவறாமல் பார்க்கவும் செய்தேன்.
வா மாப்ளே.
உங்களின் எழுத்து பல நேரங்களில் பிரமிக்க வைத்து விடுகிறது...மிக ஆழமான ஒரு விசயத்தை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக சொல்லி விட்டு உங்களின் அடுத்த பதிவிற்கு சென்று விடுக்ரீர்கள்...ஆனால் வெகு நேரம் என் தலைக்குள்ளேயே அந்த விஷயம் சுற்றி வருகிறது. உங்களின் சில கட்டுரைகள் பல நேரங்களில் என் வாழ்க்கை பாதையை வழிமறிக்கிறது...நான் சொல்ல வந்ததை எப்படி சொல்வது என்று தெரியாமல் வந்த வழியிலேயே திரும்பி போகிறேன்...உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...( உங்களின் கவிதைகளும் மிக நன்றாக உள்ளது )
காமராஜ் மக்கா,
விடுபட்டிருந்த மூன்று இடுகையும் வாசித்தேன்.உங்கள் மற்றும் மாது தளம் ஒரு பயிற்சிக் களம்.எழுத விரும்புவர்களுக்கு எல்லாம்.அதை மீண்டும் உணர்ந்தேன்.
யார் உங்களுக்கெல்லாம் இவ்வளவு அழுத்தங்களை தருவது?
காலமா?
ஆம் எனில் அதற்க்கு ஒரு ராஜ வந்தனம்! தட்டி தொடுங்க மக்கா.
(பஹ்ரைன் போயிருந்தேன்.திறந்த தளம். பாடித்திரிந்தேன்..பலிங் கபடிக் கபடி என.. :-))
ஒரு மௌனத்தேடலில் எல்லாம் தொலைந்திருக்கும் நகரவாழ்வில் இவைகளை செவிவழி மட்டுமே கேட்கமுடிகிறது...
நன்றி...
அன்பு அண்ணா, நான் சொல்ல வந்ததை கமலேஷ் சொல்லிவிட்டார். ரொம்ப சாதாரணமாக சொல்கிறீர்கள..ஆனால், இந்த இடுகை நேற்றிலிருந்து எனக்குள் நினைவாக இருந்தது...சின்ன வயதில் ஒரு முறை உறவினர்களோடு சென்றிருக்கிறேன்...மொட்டைக்காக! அலெக்ஸ் ஹேலியின் தேடுதலுக்கு முன்பாகவே தொடங்கியிருக்கவேண்டும்..நமது தேடல்கள்!
அப்புறம், /மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்/ சென்னைக்கு ஒரு பார்சல்ல்ல்ல்! :-)
வாருங்கள் கமலேஷ்,
இதில் பெரிதாக ஏதும் இல்லை.
உங்களைப்போன்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்
விஷயங்களின் மிச்சசொச்சம்தான் எனது பதிவுகள்.
எனினும் அன்புக்கு நன்றி.
பாரா....
பஹ்ரைன் போனீர்களா.
கட்டறுத்து அலைவது பெரும்ஸ்லாக்கியம்.
பாலாஜி வாருங்கள்
அன்புக்கு நன்றி
முல்லை,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்
அனுப்பி வைத்தால் போச்சு.
பப்பு சாருக்கு அன்பு.
~~அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதைப்பிளக்கும்.~~
தோழர் காமராஜ் அவர்களே !
இந்த வரிகளை படித்து முடித்தவுடன்
என்னால் சிரிப்பதை கட்டு படுத்த முடியவில்லை!!
அன்புடன் கிச்சான்!
Post a Comment