24.5.10
ஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத, புரட்சிக்காரனைப் பற்றிய திரைப்படம்
எண்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்".
ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து.
முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான் 'சே' யின் நண்பன். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன்.
சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம்.
ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது.
அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை தயாரிப்பாளர் வால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம்.
" மோட்டார் சைக்கிள் டைரீஸ் "
இதுவும் கூட ப்ளாக் டைரியிலிருந்து மீளப்பதிவிட்டது
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
படத்தின் dvd கைவசம் இருக்கும் டைம் இல்ல பார்ப்பதற்கு. உங்கள் விமர்சனம் படத்தை பற்றி ஒரு நல்ல அறிமுகமாக இருக்கு, நன்றி .
இதனுடைய தொடர்ச்சியாக che என்ற பெயரில் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.
பிடியுங்க ஸ்டார் *****
நெஞ்சம் நிறைந்த நட்சத்திர வாழ்த்துகள்... மிகுந்ந்ந்ந்ந்ந்த மகிழ்ச்சி அண்ணா...
ஆஹா...! வாழ்த்துக்கள் தோழனே! பத்து பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் பிளாக் பக்கம் வருகிறேன். வந்து பார்த்தால், நீ நட்சத்திரம்! இந்த வாரத்த்தை உன் எழுத்துக்களால் அலங்கரி!
வாழ்த்துக்கள் காமு சார்.
anpulla kamaraj- the film is not based on their novels. their latin american travelugue or you can call their memories. the main source of the film is motorcycle diary by che himself.yamuna rajendran
நட்சத்திர வாழ்த்துகள் காமு சார்
Congrats for star blogger award. Walter Salles did not direct City of god but he is the director of most famous Central Station. MCD was directed by a brazilian with a Mexican lead actor and produced by a capitalist American are the interesting facts abt this movie. Lot of misinterpretation about the movie, please watch one more time
cheers
நட்சத்திர வாழ்த்துக்கள்!
நல்ல பகிர்வு காமு!
நட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துகள்...
நட்சத்திர வாழ்த்துகள் தோழர்! போன முறை இந்த பதிவினை வாசித்த பின்தான் படத்தினை தரவிறக்கம் செய்து பார்த்தேன். அருமையான படம். கப்பலில் வருகிற எல்லா காட்சிகளுமே அருமை. கப்பலின் பின்னால் கயிற்றால் இணைக்கப்பட்ட போட்டில் வருகிற மக்களை காட்டுகிரபோது வரும் பின்னணி இசையை ரிங்டோன் ஆக வைத்திருந்தேன்.
\\கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான்\\ அது சேவின் நண்பன்.
வாழ்த்துக்கள்!
எனது கலெக்ஷனில் இருக்கும் முக்கியமான திரைப்படம். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் காமராஜ் அண்ணா.
நட்சத்திர வாழ்த்துகள்,அண்ணா!
படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி! பார்க்க முயற்சி செய்கிறேன்!
நட்சத்திர வாழ்த்துகள்
நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே
கொஞ்சம் லேட்டுதான் இருந்தாலும் பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!
Post a Comment