31.5.10

மிச்சமிருக்கிற நம்பிக்கை.

கேள்வி பலவுடையோர்,கேடிலா நல்லிசையோர்
மேலோரிருக்கின்றார் வெஞ்சினமேன் கொள்கிலரோ?
..
மண்டபம் நீர் கட்டியது,மாநிலத்தைக் கொள்ளவன்றோ ?
பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர்,
..
பெண் பாவமன்றோ பெரியவசை கொள்ளீரோ?
கண் பார்க்கவேண்டு மெனக் கையெடுத்துக் கும்பிட்டாள்
..
அம்பு பட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
தேவி கரைந்திடுதல் கண்டே சிலமொழிகள்.

இது மிகநீண்ட வருடங்களுக்கு முன் மகாகவி பாரதி எழுதியது.
மகாகவிக்கும்,யுகங்கள் பழமையான திரௌபதைக்கும் மனிதர்கள்ளென்கிற
பந்தத்தைத்தவிர வேறெதுவும் இருக்கவாய்ப்பில்லை.
ஆனால் அவனது கோபம் மனிதாபிமானத்தை உலகுக்கு நினைவூட்டுவது.
உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும் அதைக்கண்டு கொதிக்கிற சேவுக்கும்
அவருக்கும் கட்சிரீதியாகக்கூட பந்தமில்லை.
அந்த பொதுத்தன்மை நிறைய்யத்தேவை இருக்கிற சூழல் இது.

கட்டிய கணவனே பெண்ணைத்தெருவில் போட்டு அடித்தால்
நீதிகேட்கும்  மனிதாபிமானம் இன்னும் நீடிக்கிறது.
அதுதான் வாழ்வின் சகலமுரண்களூடாகவும் ஒளிரும் நம்பிக்கை.
அதுதான் ஜீவிதத்தை முன்னிழுத்துச்செல்லும் கிரியா ஊக்கி.
அப்படியொரு அசலான ஜீவித நம்பிக்கையை முனவைக்கிற
பதிவர் செந்தழல் ரவியின் எழுத்து இந்த அதிகாலையில் என்னை
வெகுவாக உலுக்கிக் கவர்ந்தது.எல்லோரது மனசாட்சியையும்
லேசாகவேணும் அசைக்கும்.

மனிதாபிமானத்தை மீட்டெடுக்க இங்கே பதிவெழுதிய,
பதறிப்பின்னூட்டமிட்ட, படித்துச் சினங் கொண்ட
அணைத்து அன்புள்ளங்களுக்கும். நன்றி.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

எனக்கு தனிப்பட்ட முறையில் X மீதோ Y மீது கோபம் வர வில்லை, வருத்தம் வர வில்லை.

இந்த தனி மனித கிண்டல், கேலி, பகடி, வன்முறை, பொறாமை, கத்திக்கு கத்தி, எழுத்துக்கு எழுத்து என்னும் மனோபாவம் மீது தான் வருத்தம், கோபம் எல்லாம்.

நம் தமிழ்ப் பதிவுலகம் அடுத்த நிலை எட்ட இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் போல, அதுவரை தனி மனித கிண்டல், தனி மனித துதி பாடல் என பொழுதை களிப்போம்.