தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையாக நெடுங்காலம் எதிர் நீச்சலடிக்கும் செம்மலர் மாத இதழ்.
மேலண்மை பொன்னுசாமி, தமிழ்செல்வன், கந்தர்வன்,உதயசங்கர், ஷாஜகான், ஆதவன்,மாதவராஜ் போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு களமும் தடமும் அமைத்துக்கொடுத்தது. சாமான்யக் குரல்களுக்கு ஒலிபெருக்கித்
தந்ததும் ஒளிவட்டமில்லாத நீங்களும் எழுதலாம் என்கிற உத்வேகம் கொடுக்கிற கிரியா ஊக்கியுமானது செம்மலர். அப்படி எழுத்தை எளிமைப்படுத்திய சமகாலப் பெரும் ஊக்கி இந்த வலைக்கு முன்னாள் விரல் பிடித்து நடத்திச்சென்ற செம்மலர் இதழில். தோழர் ந.பெரியசாமியின் கவிதை.கண்ணெதிரே நெருங்கி வரும் பேரிடர் இந்த
விவசாயம் அழிதல். கட்டுரையாய்,கோஷமாய்,போராட்டமாய் பெரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறு கவிதையாய் ஒரு பாடலாய் மக்களுக்கு அறிமுகமாகிப்பதியச்செய்யும் பெருங்கைங்கர்யம் இந்த கவிதை.
விரவும் கங்குகள்.
தட்டு நிறய்ய நாணயங்கள்
தொட்டுக்கொள்ள கிண்ணத்துள்
கலவையாகச் சில்லறைகள்
கூடவே ரூபாய்த் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...
விலைச்சலைத் தரும் நிலம்
வெப்பமாகிக் கொண்டிருக்க
நினைவில் கொள்வோம்
எங்கள் தெருவில் மழைகொட்டியது
உங்கள் தெருவில் பெய்ததாவென
வினவும் காலம்
வெகு நெருக்கத்திலிருப்பதை.
ந.பெரியசாமி.
10 comments:
இதைப் பற்றி மிக நீளமான ஒரு கட்டுரையே இடலாம்...! வெகு அழகாக நான்கு வரியில் சொல்லிவிட்டார்...!
இருக்கும் இடமெல்லாம் செங்கர்க்களை அடுக்கிவிட்டால் பின்பு சோற்றுக்கு எங்கே போவது???
யார் எப்படி போனால் என்ன என்று ஆற்று நீரும் ஆற்று படுகையும்...விலை நிலங்களும்.. வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது..!
மாதம் ஒரு லட்சம் சம்பாதித்து என்பதனாயிரதிர்க்கு ஒரு மூட்டை மான்சாண்டோ அரிசி வாங்கும் காலத்திற்கு வெகு அழகாக நம்மை இட்டுச் செல்கிறது தற்கால அரசு...!
என்ன ஒரு தீட்சண்யம். இப்போல்லாம் சென்னையில் ஒரே தெருவில் பாதி மழையும் பாதி வெய்யிலும் அடிக்குது:(
செம்மலரிலேயே படித்தேன். இவருடைய கவிதைகளை, அண்மையில் இவரைச் சந்தித்தப்பிறகுதான் ஓரளவு இணையத்தில் மட்டும் தேடிப்படித்தேன். இயற்கைச் சீரழிவைப் பற்றி தொடர்ந்தும், நிறையவும் என்றும் எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
நல்லாருக்கு கவிதை.ஆனால் கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனிக்கவும்.இயல்பாக ரசிக்க விடாமல் சோற்றில் கல்லாக நெருடுகிறது காமராஜ்.
கவிதை அருமை, பகிர்தலுக்கு நன்றி.
ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை , காடு அளிக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தான் செம்மலர் தோழர்கள் கூட்டணி வைத்து இருந்தனர் என்பதை நாம் மறக்க வேண்டாம் .
அண்ணே சிங்கப்பூரில் இப்படிதான் பெய்யும்.. மிக அற்புதமான கவிதை ...
//தட்டு நிறய்ய நாணயங்கள்
தொட்டுக்கொள்ள கிண்ணத்துள்
கலவையாகச் சில்லறைகள்
கூடவே ரூபாய்த் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...//
அற்புதமாய் செதுக்கி இருக்கிறாய் வயல்+காடு=வயக்காடு...இரண்டுமே நம் சந்ததிகளுக்கு கணவாய் போகுமே என்ற அச்சம் வருது அண்ணே...
//வானம்பாடிகள் said...
என்ன ஒரு தீட்சண்யம். இப்போல்லாம் சென்னையில் ஒரே தெருவில் பாதி மழையும் பாதி வெய்யிலும் அடிக்குது:(//
அப்பப்ப ஈரோட்டுலையும்தான்...
நல்ல கவிதை. பகிர்ந்தமையும் அருமை...
நல்ல கவிதை.
சென்னையில இப்பவே அப்படித்தான்.
கே.கே.நகர்ல மழை பெஞ்சா, மயிலாப்பூர்ல வெயில்.
என்னத்த சொல்ல?
Post a Comment