கடல் மணலில் தொலைந்த
குண்டூசி போல
காணாமல் போயிருந்தாள்
வனப்பேச்சி.
குறுக்கும் நெடுக்கும்
அலையும் அன்றாடங்களில்
அமிழ்ந்து போனது அவளின்
உருவமும் நினைவுகளும்.
பொங்கலும், கலவரமுமாக
நல்ல சினிமாவும்,
செல்லமுத்து பொறணியுமாக
பொழுதுகள் கறைந்தது.
இரு சக்கர வாகன விபத்து
ஒருமாதம் வீட்டோ டு கட்டிபோட்டது
எழுந்து நடந்தபோது இன்னும்
கொஞ்சம் மாறிப்போயிருந்தது.
ஒரு முன்மாலையில்
மரங்களில் கூவும் பட்சிகளோடு
சளச்சளச்சத்தம் கேட்டது
வந்தாள் வனப்பேச்சி.
வேலியும் கஞ்சாவும் கூட
வளரும் பூமியில
மனுசரு பொழைக்கவா
எடமில்ல எங்கேயோ கெடக்கேன்.
கீழ உழுந்திட்டிகாளாமில்ல
எனக்கேட்டுவிட்டு
சூதானமா இருங்க
சொல்லிவிட்டுப்போனாள்.
கடல் மணலோ ஆழ்கடலோ
நினைவுகள் அழிவதில்லை.
17 comments:
நான்தான் பஸ்ட்டு...
//வேலியும் கஞ்சாவும் கூட
வளரும் பூமியில
மனுசரு பொழைக்கவா
எடமில்ல எங்கேயோ கெடக்கேன்//
நினைவுகளை கடந்து வாழத்துடிக்கும் கவிதை...அருமை...வாழ்த்துகள் அண்ணா...
அருமை
சுமதி அக்காவின் (தமிழச்சி தங்கப்பண்டியன்) வனப்பேச்சி போல உங்களின் வரிகளும் அருமை.
அவசரம் புதைந்து இருக்கும் இந்நகரத்தின் எந்த வீட்டில்
எந்த வீட்டில் குழந்தைக்கான தூளிச் சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கானா சுருக்குப் பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினராக வருவேன் என்ற அடம் பிடித்த வனப்பேச்சிக்கு ,
சாப்பாட்டு மேசையில் அமரக் கூடாது
கறுத்த கெண்டைக்காலினை ஆட்டிக்கொண்டு அடுத்தவரோடு பேசக் கூடாது
என ஏகப்பட்ட முஸ்தீபுகளுடன் நான் அழைத்து சென்ற அந்த வீட்டின்
முன் தின்னையில்லை வெற்றிலை எச்சிலை எப்படி துப்ப என்ற
பிலாக்கனத்துடன் திரும்புகையில் வாசல் கூர்க்கா மட்டுமே
பிடித்திருப்பதை சொன்னாள் பீடிக்காவும், காவலுக்க்காகவும்.
உண்மைதான்....ரொம்ப நல்லா இருக்குங்க...
"பிசிராந்தையயும் ஆண்டாளையும் விட."
ஆமாம்.:)
எவ்வளவு அன்பு பாருங்க.. இந்த அனுசரனை எங்க கிடைக்கும்னு ஏங்கதான் வேணும்...
அருமையான கவிதை...
ரொம்ப நல்லாருக்கு மக்கா. சில நேரம் காமுன்னு அழைக்க வருது. சில நேரம் இந்த மக்கா. வர்றது போல வந்தால்தானே வார்த்தை, வனப்பேச்சி, அன்பு எல்லாம்.
ராம்ஜி_ யாகூ-வின் கவிதை பகிர்வும் மிக அருமை.
தலைப்பில் கொஞ்ச நேரம் லயித்துக்கிடந்தேன்.
நெகிழ்வான வார்த்தைகளில் வடித்தெடுத்த வனப்பேச்சியின் அன்பான நினைவுகளில் இன்றைய விடுமுறை நாள் இனிதாகும்.
நன்றி அண்ணா.
நல்லாருக்கு காமு சார் :-).
//குறுக்கும் நெடுக்கும்
அலையும் அன்றாடங்களில்
அமிழ்ந்து போனது அவளின்
உருவமும் நினைவுகளும்.
//////////
நினைவுகள் வார்த்தைகளில் கசிகிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
பா ரா அது சுமதி அக்காவின் வனப்பேச்சி கவிதை வரிகள்-
முழுவதும் இங்கே
http://www.thamizhachi.in/Books/vanapetchi.pdf
தலைப்புக்கும் கவிதை பொருளுக்கும் என்ன தொடர்பு ?? (எனக்கு புரியல அதான் கேக்கறேன் )
ரொம்ப அருமையா இருக்கு
பூங்கொத்து!
அன்பு காமராஜ்,
உங்களின் கதை சொல்லும் பாங்கு அலாதி தான் காமராஜ்... கவிதையிலும் கதை சொருக உங்களால் இயல்பாய் முடிகிறது. வனப்பேச்சி, எனக்கு மிகப்பிடித்தமான பெயர், குறியீடு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். வனப்பேச்சி வரும்போதே ஒரு பேரோசையுடன் தான் வருவாள் என்று நினைக்கிறேன். தமிழச்சியின் வனப்பேச்சிக் கவிதைகளும் அவரின் மிக சிறந்த படைப்பு. செல்லமுத்து பொறனியுமாக... மிகப்பெரிய கதை சொல்லி காமராஜ் நீங்கள்.
உங்கள் அனுபவங்களில் வரும் மாந்தர்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறார்கள், எனக்கு ஒவ்வொருவரையும் பார்க்க வேண்டும் என்று தோன்றும்... சாத்தூர் வரவேண்டும்... குயில் தோப்பில் நுழைந்து கூவுதிகாள் என்று ஆண்டாள் போல புலம்ப வேண்டும்...
அன்புடன்
ராகவன்
ஆனா ஏன் அந்த தலைப்பு புரியலையே அண்ணா
Post a Comment