19.7.10

ஆவிகள் இருக்கிறது. அடுப்பில், இட்லிச்சட்டியில்.


அனந்தபுரத்து வீடு திரைப்படத்தின் அறிமுகம் நேற்று சன் தொலைக் காட்சியில் நடந்தது.ஈரம் படத்தில் நடித்த அதே நந்தா தான் இந்தப்படத்திலும் கதாநாயகன்.இரண்டு படத்திலுமே கதை ஆவியைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும்.ஆவி இருக்கிறதா இல்லையா என்கிற தத்துவார்த்த கேள்விக்கு நான் இருக்கிறதென்றே பதில் சொல்லுவேன்.ஏனெனில் ஆவி நமது அன்றாடங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது.எவ்வளவு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்.ஆவியில்லை என்றால் சாப்பிட்டதெல்லாம் போய்யாவியாகிவிடாத?.

ஆனால் பாருங்கள்,ஆவிப்படங்கள் எடுக்கிற எல்லா மொழி திரைப்படத்துக்கும் தந்திரக்காட்சிகள் வடிவமைக்கிற தொழில் நுட்பம் கைவரவேண்டும். இன்னொன்று பிரம்மாண்டமான வீடுகள்,பங்களாக்கள்,பெரிய பெரிய கதவுகள்,திரைச்சீலைகள் கட்டாயம் வேண்டும்.இதுவரை வந்த தமிழ் ஆங்கில,தெலுங்கு,இந்திப்படங்கள் எல்லாவற்றிலும் இதே இலக்கணம் பிசிறில்லாமல் வரையறுக்கப்பட்டிருக்கும்.சாதாரண குடிசை வீடுகளைச்சுற்றிப்படம் எடுக்க முடியாது.உங்கள் திரைப்பட அனுபவத்தை பின்னோக்கி கொண்டு போனால் யரும் இந்த இலக்கணத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இயல்பு இதற்கு நேரெதிரில் இருக்கிறது. பேய் பிடித்திருப்பதாக,அருள்வந்து ஆடுவதாக தங்களை கற்பிதப்படுத்திக்கொள்ளும் ஜனங்கள் எல்லாரும் கஞ்சிக்கில்லாத அடித்தட்டு மக்களாகவே இருக்கிறார்கள்.பிரபலமான அம்மன் கோவில்களில்,பிரபலமான அந்தோணியார்,மைக்கேலாண்டவர் கோவில்களில்,பிரபலாமான தமிழகத்து தர்ஹாக்களில் தங்கிக்கும்பிட கட்டாயம் ஒரு ஏற்பாடு இருக்கும். அங்கு வந்து வயனங்காக்கிற( residential worship) மக்களைப் பார்த்தவுடனேயே இந்தப் புள்ளி விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

கடவுளோ அல்லது பேயோ தங்களை இரண்டு வகையாக வெளிப்படுத்திக்கொள்கிறது. மேல்தட்டு மக்களிடம் ரொம்ப பதவிசாகவும் அடித்தட்டு மக்களிடம் அகோரியாகவும் அவதாரம் கொள்கிறது.இந்த இரட்டை வேஷம் போடுவது ஏனென்று தான் இன்னும் விளங்கவில்லை.ஒண்ணுந் தெரியாத காளியம்மா மதினியைப் பிடித்துக்கொண்டு 'நாந்தா கெனத்துல உழுந்து செத்துப்போன பால்ராஸ் வந்திருக்கேன்' என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது. ஆனால் ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பானி குடும்பத்திலோ,ஐஸ்வர்யாராய் குடும்பத்திலோ பேய் பிடித்து ஆட்டுவதில்லை.

பொருளாதார ரீதியான உத்திரவாதம் அற்றுபோன மக்களுக்கு பெரிய பிடிமானம் மனிதர்கள் மேலிருக்கிற பிரியமும் தெய்வங்களின் மேல் இருக்கிற நம்பிக்கையும் தான். இந்த இரண்டும் பொய்த்துப்போகிற போது மனம் பேதலித்துப் போகிறது.அடிகொப்புமில்லாமல் பிடி கொப்புமில்லாமல் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குகிறது. விஞ்ஞானம் இதை நரம்புத் தளர்ச்சி,மனப்பிறழ்வு,ஹிஸ்டீரியா என்று பெயரிடுகிறது.விஞ்ஞானத்தை காசுகொண்டு நெருங்கமுடியாத ஜனங்கள் 'பேய்க்கும் பாரு நோய்க்கும்பாரு' என்று நம்பிக்கைகளின் பின்னால் அலைகிறது.


சரி கதைக்கு வருவோம்.

அம்மா,அப்பாவை,நீச்சல் குளத்தோடு பங்களாவை,முப்போகம் விளையும் கிராமத்தை உதறித்தள்ளிவிட்டு சென்னைக்குப்போகும் பையன் கடனாளியாகி.கலங்கினார் பாலா என்று ஊர் திரும்புகிறார்.செத்துத்தெய்வமான அம்மாவும் அப்பாவும் ஆவியாக வந்து இவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது கதை.நீதி, அம்மா அப்பா என்பவர்கள் எவ்வளவு மகோன்னதமானவர்கள் என்பதை ஆவிகளின் மூலம் தெரிந்துகொள்வதுதான் நீதி. ஆவிகள் உதவுகிற ட்ரீட்மெண்ட் புதுசு என்கிற முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைக்கேட்கும் போது பட்டணத்தில் பூதம்,அதற்குமுந்தைய விட்டலாச்சாரியார்களின் ஆவிகள் சிரிக்கிற சத்தத்தை சன்னமாகக் கேட்கமுடிகிறது.

20 comments:

ராம்ஜி_யாஹூ said...

என்னால் ஐந்து வினாடிகள் கூட இந்த ஆவி, பே, பூதம் போன்ற படனகளை பார்க்க முடிவதில்லை, பொறுமையும் இல்லை, மனதும் லயிப்பதில்லை.
ஈரம், பிரசாந்த் மீனா நடித்த ஒரு படம் எல்லாம் இணையத்தில் ஆரம்பித்து ஐந்து வினாடிகளிலேயே அனைத்து விட்டேன்.


இன்னமுமா இந்த ஊர்ர் நம்பிகிட்டு இருக்கு

Karthick Chidambaram said...

//பட்டணத்தில் பூதம்,அதற்குமுந்தைய விட்டலாச்சாரியார்களின் ஆவிகள் சிரிக்கிற சத்தத்தை சன்னமாகக் கேட்கமுடிகிறது.//

:)))))

Unknown said...

ஆனால் ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பானி குடும்பத்திலோ,ஐஸ்வர்யாராய் குடும்பத்திலோ பேய் பிடித்து ஆட்டுவதில்லை.//

பிடரில உரைக்கிற மாதிரி சொன்னீங்க சார் :)))

vasu balaji said...

என்னா ஒரு வில்லத்தனமான விமரிசனம்:)).எனக்கு இந்த வெள்ளிக்கிழமை விரதம், அன்னை அபிராமி எல்லாம் வந்தப்ப இன்னைக்கு இந்த தியேட்டரில் இவ்வளவு பேருக்கு சாமி வந்தது. அருள் வந்தவருக்கு மலையேற்ற வசதிகள் உண்டு என்று வந்த திரைப்பட விளம்பரங்கள் கவனத்துக்கு வந்தது=))

வவ்வால் said...

Enakku therinthu innoru "aavi" irukku every week news paper kadaila thalai kizhaa thongittu irukkum!

15 rs kodutha "aaviya" kaila pudikkalam!

எஸ்.கருணா said...

ஆவியப்பத்தி இவ்வளவு விவரணையா எழுதியிருக்கீங்க...ரொம்ப பழக்கமோ.. //பொருளாதார ரீதியான உத்திரவாதம் அற்றுபோன மக்களுக்கு பெரிய பிடிமானம் மனிதர்கள் மேலிருக்கிற பிரியமும் தெய்வங்களின் மேல் இருக்கிற நம்பிக்கையும் தான். இந்த இரண்டும் பொய்த்துப்போகிற போது மனம் பேதலித்துப் போகிறது...// என்ன காமராஜ்..ஆவிஉலக சந்தேகத்த இவ்வளவு சாதாரணமா தீர்த்துவச்சிட்டீங்க // ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பானி குடும்பத்திலோ,ஐஸ்வர்யாராய் குடும்பத்திலோ பேய் பிடித்து ஆட்டுவதில்லை.// நல்ல பதிவு.

Unknown said...

அண்ணே ஆவி அமுதாகிட்ட கேட்டு பாருங்க.. FAX- ல ரெண்டு ஆவி அனுப்பும்...

ரவி said...

சரி. ஆவியை நம்பலைன்னா அப்ப கடவுளையும் நம்பலை. நீங்கள் நாத்திகரா ?

சி.பி.செந்தில்குமார் said...

the sixth sense படம் ஹிட் ஆனதுக்கு காரணம் ஆவியை மக்கள் நம்பியதால் அல்ல.making style பிடித்ததால்.anyway உங்க விமர்சனம் நல்லாருக்கு

அன்புடன் அருணா said...

எனக்கு ரொம்பப் பிடித்த படம் பட்ட
ணத்தில் பூதம்!!!!:)

Deepa said...

ஜாலியான விமர்சனம்!
//ஆவி நமது அன்றாடங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது.எவ்வளவு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்.//
:)))

பா.ராஜாராம் said...

:-))

நடத்தும்.

hariharan said...

ஆவிகள் இல்லையென்று யார் சொன்னது. வெள்ளைக்காரன் நம்மூரில் இயக்கிய ரயிலை, இயக்கியது ஆவி தான் அது நல்ல ஆவி..நீராவி.

VELU.G said...

நல்ல விமர்சனம்

எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு

ஆவின்னா என்னங்க பேய்ன்னா என்னங்க

க ரா said...
This comment has been removed by the author.
க ரா said...

//ஆவி இருக்கிறதா இல்லையா என்கிற தத்துவார்த்த கேள்விக்கு நான் இருக்கிறதென்றே பதில் சொல்லுவேன்.ஏனெனில் ஆவி நமது அன்றாடங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது.எவ்வளவு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்.ஆவியில்லை என்றால் சாப்பிட்டதெல்லாம் போய்யாவியாகிவிடாத?.//

சிரிச்சுகிட்டே இருக்கேன் சார். சூப்பர் விமர்சனம் :)

சீமான்கனி said...

பணக்காரவங்களுக்கு ஏற்கனவே நிறையா பேய் பிடிச்சிருக்கு அதனாலவோ என்னவோ இந்த பேய்கள் அவர்கள் பக்கம் போவதில்லையோ??இந்த மாதிரி படங்களில் வரும் சத்தம்தான் ரெம்ப எரிச்சலா இருக்கும்...ஆவிகளோடு சேர்ந்து நானும் நல்ல சிரிச்சேன் அண்ணே...வாழ்த்துகள் அண்ணே...

பனித்துளி சங்கர் said...

இந்த மாதிரி ஆவிகளை வைத்துதான் இப்ப பலரின் வாழ்கையே ஓடுகிறது . என்ன பண்ணுவது முதல் முதலில் ரயிலை பார்த்து பயந்து இது சாத்தானோட வேலை என்று சொன்னவர்கள்தானே நம்ம மக்கள் .

ஹேமா said...

குட்டிப்பிசாசுன்னு ஒரு படம்.
கார் ல ஆவியாம் எழும்பி எழும்பி அடிக்குதுங்க.
அட...உண்மையா !

வவ்வால் said...

Nalla ennam kondavarka agaala maranam adainthaal "aavi" aavarkal(spirit),

theeya ennam kondavarkal agaala maranam adinthaal "pey" aavarkal.(ghost)

p.t.samy, endamuri veerendra nath kathaikal ellam padichathu illaiyo?

But enakku Azhagana pen peykal mattume pudikkum! :)