16.3.11

போடுங்கம்மா ஓட்டு ஏழைகளின் அடிவைத்தப்பாத்து.


அவராண்டார் இவராண்டார் எனினும் மக்களே மாண்டார்.இது மன்னராட்சி பற்றிய புதிய புரிதல்.எண்ணிக்கையில் எந்தக்கட்சி ஜெயித்தாலும் தோற்கப்போவது ஜனங்கள் என்பது மக்களாட்சியின் மீதும் நிகழ் அரசியலின் மீது கிடக்கும் கனத்த விமரிசனம். நடுவே கோடிருப்பது போன்ற மாய எல்லைக்கு இருபுறமும் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறு பிள்ளைகள் விளையாட்டில் கடைப்பிடிக்கப்படும் குறைந்தபட்ச நியதிகள் கூட இல்லாமல் குளம்பிக்கிடக்கிறது ஆதரவும் எதிரும்.

விஷமருந்திச்சாவது,தூக்குக்கயிற்றில் தொங்குவது என இரண்டே இரண்டு நிர்ப்பந்தங்கள் மட்டும் சந்தையில் தேரக் கிடைக்கும். எதைத் தேர்ந்தாலும் இருட்டு. அந்தரத்தில் ஆள்  தொங்கினாலும் நிழல் எதாவது ஒரு பக்கத்தில் விழுந்து தொலைக்கிறது. ஜெயித்து உட்காருகிற வரை அவர் நல்லவர். தோற்றுத் திரும்பும் வரை இவர் கெட்டவர் இதுதான் அரசியல்.
புரட்டிப்போடும் நெம்புகோல்களை கண்டுபிடிக்கவேண்டும். எச்சரிக்கை. அது லத்திக்கம்புகளாக மாறிவிடும் அபாயத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

கேரளா, மேற்கு வங்கத்தில் இடது சாரிகள் தோல்வியுற்றால், விரைவில் மாநிலங்கள் அவையிலும் இடது சாரிகளின் பலம் குறையும். முழு தனியார் மயமாக்கல்களுக்கு அது பெருமளவு உதவி செய்யும். குறிப்பாக சில்லறை வணிகம், காப்பீடு துறைகளுக்கு.

அம்மா எப்போதுமே தனியார் மயமாக்கலுக்கு எதிரி இல்லை.

வினோ said...

இங்க விசயமே, ரெண்டு தானே இருக்கு.. ஒன்னு போய் இன்னொன்று வந்து கொண்டு தானே இருக்கு.. மாற்றாய் நினைத்தது கூட தொத்திக் கொள்(ல்)கிறது.. :(

ttpian said...

ஆஹா மஞ்சள் துண்டு மனம் மகிழ குஷ்பு நாட்டியம்

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா என்ன ஆக போகுதோ....

ரோஸ்விக் said...

காரமான கடுகுப் பதிவு.

லெமூரியன்... said...

எரிகிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளினு
பாக்க வேண்டியதுதான்..!