இந்தியா முழுமைக்கும் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் போது கேரளம் ஓணம் கொண்டாடுகிறது.இந்தியா முழுவதும் அடிமைப்பட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சுபாஷ் சந்திரபோஸ் களும் சூரியாசென்களும் கல்பனாதத்துகளும் மேற்குவங்கத்திலிருந்து கிளம்பி னார்கள். சிட்டகாங் கிளர்ச்சியும் சூரியா சென்னும் வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட பெயர்கள்.அந்த மேற்குவங்கம் அரவிந்தர் என்கிற புரட்சிக்காரனைக்கொடுத்தது ஆனால் புதுச்சேரி அவருக்கு ஆஸ்ரமம் அமைத்துக் கொடுத்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருக்கவேண்டும் என்பதை இப்போதே சிந்திக்கிற மாநிலம் என்கிற பெயரும் அதற்கு எதிராக எனது எதிரிகளை கல்கத்தாவில் விட்டுச்செல்கிறேன் என்று மவுண்ட் பேட்டன் சொல்லிக்கொண்டு திரும்பிப்போனதும் வரலாற்றில் அழியாத வார்த்தைகள். அவர் திரும்பிப்போகிற நேரத்தில் கூட அடிமை எதிர்ப்பின் உக்கிரமான பகுதியை மேற்குவங்கமே எடுத்துக்கொண்டது. அன்னிபெசண்ட், நிவேதிதா,அன்னைதெரேசா,தாகூர்,சத்யஜித்ரே,மிருணாள் சென், அபர்ணா, நந்திதா போஸ் என்கிற நூற்றுக்கணக்கான ஆளுமைகளோடு ஒரு கால்பந்தாட்டக்காரனுக்கு சிலை வைத்திருக்கிற மாநிலம்.
இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்களை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருக்கிற மாநிலம். இவ்வளவு பெருமை களுக்கும் ஒரே காரணம் ஒரு முப்பத்திநான்கு ஆண்டுகள் அங்கு இடதுசாரி ஆட்சி நடைபெற்றதுதான் எனச்சொல்லமாட்டேன். இவ்வளவு காலம் அங்கு ஒரு செங்கொடி ஆட்சி நடைபெறுவதற்கு இவையெல்லாம் தான் மூலகாரணியாக இருந்தது.இன்னும் இந்தியா இருக்கிற வரை அது அப்படித்தான் தொடரும்.காரணத்தைம் ஒரு சின்ன உத்தாரணத்தோடு சொல்லலாம். இன்றைக்கு இருக்கிற அணைத்து தேசியத் தொழிற் சங்கங்களுக்கும் ஆரம்பகாலத்தில் அங்குதான் முளைப் பிடித்தார்கள். இன்றைக்கும் கூட ஐஎன்டியுசி தொடங்கி புரட்சிகர தொழிலாளர் முன்னணிகள் வரையிலும் பெருவாரியானவை மேற்குவங்கத்திலிருந்தே நிர்வகிக்கப்படுகின்றன.அதனாலேகூட அது எனக்குப்பிடித்துப்போனது எனச்சொல்லமாட்டேன்.
1958 ல் அரச மான்யம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் முதல்வர்களை ராஜராஜ ராஜமார்த்தாண்ட என்று ஒரு முழத்துக்கு நீட்டி புனைப்பெயர் சொல்லி விட்டு நிஜபெயரை மறந்துபோகும் அளவுக்கு துதிகள் பெருகிக் கிடக்கிற தேசத்தில். இருபத்தைந்தாண்டு காலம் முதலமைச்சாராயிருந்த ஒருவரை எல்லோரையும் போலத்தோழர் ஜோதிபாசு என்று அழைக்கமுடிகிற எளிமை குடிகொண்டிருந்தது அங்கேதான். ஒரு ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தால் எவ்வளவு அள்ள முடியும் என்பதை மாறி மாறிவரும் தமிழக ஆட்சியாளர்களும் அவர்களது தோழிகளும் குடும்பத்தினரும் உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முப்பத்துநான்கு ஆண்டுகாலம் பதவியில் இருந்த அந்தக்கூட்டத்துக்கு அவப்பெயர் கிள்ளினான்,முள்ளினான்,குசுவினான் என்பதுதான். அவர்களுக்கென்று சொந்த கொடநாடோ,சன்,கலைஞர் குழுமங்களோ கிடையவே கிடையாது.
கவுஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய கிராமவங்கி ஊழியர்சங்க மாநாட்டுக்கு போகிற வழியில் அந்த ஹௌரா சந்திப்பில் அரைநாள் தங்கவேண்டியிருந்தது. எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளார் தோழர் கிருஷ்ணகுமார் காத்திருக்கும் அறையை விட்டு யாரும் வெளியே போகக்கூடாது என்று கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார். கட்டுப்பாட்டை மீறுகிற மனசு எல்லோர் அடிமனதிலும் குறுகுறுத்துக் கொண்டே இருக்குமல்லவா ? நாங்கள் கட்டுப்பாட்டை மீறிப்போனோம். போகிற வழியெங்கும் சொத சொதவெனச் சகதி. கூடவந்தவர் சொன்னார் பார்த்தாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகிற மாநிலத் தலைநகரில் கூட குடிசைகளையும் சகதிகளையும் ஒழிக்க முடியவில்லை என்று. அப்பொழுது எனக்கு பதில்சொல்லத் தெரியவில்லை ,விமர்சனம் வந்தது,கேட்டேன் .பிழைக்கவே வழியில்லாத பீகாரிகளும் ஒரியாக்காரர்களும் தினம் தினம் கள்ள ரயிலேறி வந்து கல்கத்தாவில் குடிபுகுந்தால் என்ன ஆகும்.இந்தியாவில் உள்ள மொத்தக்குடிசையும் அங்கேதான் இருக்கும் என்று பதில் சொன்னார் ஒருதோழர்.
ஒரு கடைகோடி குடிசைவாசிக்கு இருக்கும் ஜீவாதார நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு பெரிய விஷயம். அங்கெ போன உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற உறுதி வந்ததற்கு அந்த மாநிலம் கொண்டிருந்த மனிதாபிமானம் மட்டுமே காரணம். எனவே தான் இந்தியாடுடே,ஐபிஎன்,என்டிடிவி, தினமலர்,தினத்தந்தி,சன்டீவி ஆகிய ஊடகங்களுக்கு முதல் எதிரியாகவே நீடிக்கிறது. அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.ஆகையால தான் ஜெயித்து பதவிக்கு வந்த மம்தா பானர்ஜியை எப்போதும் காட்டன் சேலை உடுத்தும் எளிமையானவர் என்று முன்னிறுத்துகிறது. இன்றும் கூட ஓட்டுவீட்டில்தான் குடியிருக்கிறார் என்று பெருமிதப்படுகிறது.காட்டன் புடவை உடுத்துவதும், ஜோல்னாப்பை தொங்கவிட்டுக் கொள்வதும்,தங்க நகைகள் தவிர்த்து சில எளிமையான அலங்காரங்கள் செய்துகொள்வதும் வங்காளிகளின் பிரத்யேகக் கலாச்சாரம். அப்படிப் பார்த்தால் அந்த மாநிலத்து ஆண்களெல்லாம் வேஷ்டியை தார்ப்பாச்சா கட்டுவார்கள் அதற்காக அவர்கள் வெறும் கோவணம் தான் கட்டிக் கொள்கிற்றார்கள் என்று சொல்வதா ?.
ஆனலும் அதை ஒரு பெரிய கவர்ச்சி செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளும் அதைப்படிக்கிற தமிழ் வாழ் தினத்தந்தி வாசகன். உள்ளூர் அய்யாவையும் அம்மாவையும்,அவர்களின் கொடிக்குகளான கவுன்சிலர்களையும் அவர்களின் மனைவிமார்கள் அள்ளிப்போட்டுக்கொள்கிற நகைகளையும் நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறான்.அந்த இடியில் சொல்லாமல் விட்டுப்போன முந்தைய முதல்வர்களின் எளிமை விடுபட்டுப்போகிறது.இப்படிக் கள்ள மௌனம் காப்பதிலும் பெரிய்ய அரசியல் இருக்கிறது. அதாவது மனித மனம் எதிர்விதமாகக் கற்பனை செய்யும் குணாம்சம் கொண்டது .
முதன்முதலில் கடலைப் பார்த்த ஒரு கருசக்காட்டு மனிதன் மாப்ப்ள பாத்தியா இந்தூர்க்காரங்க குடுத்துவச்சவங்கடா,வருசம் முழுக்க நல்லாக்குண்டி கழுவுவாங்க என்று சொன்னானாம். அப்படித்தான் இந்த ஊடகங்கள் மக்களுக்கு செய்திகள் சொல்லுகிறது.
எப்ப பாரு ரஷ்யாவப்பாரு மேற்கு வங்கத்தப்பாருன்னு சொல்லிக்கிட்டு அலைந்தது ஒரு கூட்டம் இனி இந்தியாவில் அப்படி பொதுநம்பிக்கைகளை சுட்டிக் காட்டுவதற்கும் சொல்லி க்காண்பிப்பதற்கு இடமில்லாமல் போய் விட்டதா?
இல்லை.
எம் இளமைக் காலங்களில் கட்டபொம்மனின், வாஞ்சிநாதனின், பகத்சிங்கின், பாரதியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் முறுக்கேறி ஓடுமே ஒரு சூடான ரத்தம்.அவர்களின் கதைகள் கேட்கிறபோதெல்லாம் ஒரே ஒரு நாள் அவர்களைப்போல் வாழ்ந்து மடிந்து போகச்சித்தமாகும் ஆவல் மேவுமே ? அது போல.
இந்த தேசத்தில் காணக்கிடைக்கிற மேடு பள்ளங்களுக்கு,
ஆண்டான் அடிமை வழக்கத்துக்கு,
பாட்டினிச் சாவுக்கும் பத்து ஏக்கர் பங்களாவுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு மருந்தாகக்கிடைக்கிற ஒரே மாற்று என்ற நம்பிக்கையும்
அந்த நம்பிக்கையை சுட்டிக்காட்டவவும் இப்போதைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிற பொது மனிதர்கள் நிறைந்த இடம்
அந்த மாநிலம் என்பதாலே எனக்குப்பிடிக்கும்.
பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் கூடுகிற ஒரு சட்டசபையை,அந்த மாநிலத்தின் முதல் மண்டபத்தை எழுத்தாளர்கள் கட்டிடம் என்று சொல்லுவது தான் கூடுதலாகப் பிடிக்கும்.
21 comments:
அருமையான அலசல் !
தாகூர் காலத்திலேயே ஒரு சொல் பிரபலம். வங்கம் எந்தப்பாதையில் இன்று செல்கிறதோ அந்தப்பாதையில் இந்தியா நாளை பின் தொடரும். ராஜாராம் மோகன் ராய் தொடங்கி, சுபாஷ் சந்திர போஸ் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் என வந்து 23 ஆண்டுகள் எளிமையாக ஆண்ட தோழர் ஜோதிபாசு என நீட்சி தொடர்கிறது. மீடியாக்கள் 34 ஆண்டுகால ஆட்சியைத்தூக்கி ஏறிந்ததைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசியல்வாதியான மமதாவைத்தூக்கிப்பிடிக்கிறார்கள். இந்தப்பாதை கூட வங்கத்துப்பாதையாக இருக்கலாம். நாளை இந்தியா பின் தொடரலாம்.
Beautiful.
நல்ல அசலான அலசல் காமராஜ்.
வங்காளத்தின் சிந்தனைக்குப் பல காரணங்களும் உண்டு.
முதன் முதலில் ப்ரிடிஷ்காரர்கள் காலூன்றியதால் அவர்களின் கலாச்சாரத் தாக்கமும் அவர்கள் போல் விலகிச் சிந்திக்கும் குணமும் இயல்பாகவே வங்காளத்தினருக்கு வந்திருக்கலாம்.
ஆனாலும் சீக்கிரமாகவே தங்களின் கலாச்சாரம் தேசம் போன்ற விஷயங்களில் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர்கள் வங்காளிகள்தான்.
எத்தனை சுயநலமிகளாய் இருந்தாலும் ஏனோ வங்காளிகளின் மேலும் மலையாளிகளின் மேலும் அவர்களின் அசலான சிந்தனை ஒற்றுமையிலும் எளிமையிலும் மனம் குவிவதைத் தவிர்க்க முடியவில்லை.
Arumaiyana velippaadu nanbare!
Rathnavel said...
ஐயா வாருங்கள் வணக்கம் உங்களின் அன்புக்கு நன்றி
நன்றி கூடல் பாலா
அந்த எளிமையும் தூய்மையும் சாதாரண ஜனங்களை அறியவிடாமல் பாதுகாத்துக்கொண்டது நமது ஊடகங்கள்.
ஆனால் அன்னா ஹசாரே வுக்கும்,பாபா ராம்தேவுக்கும் கிடைக்கிற பாஸிடிவ் விளம்பரங்கள் சொல்லி மாளாது.
நன்றி பாலாண்ணா...
அன்பின் சுந்தர்ஜீ....
உங்கள் பின்னூட்டம் எனது முயற்சிக்கு மெருகேற்றுகிறது.
ஓலை said...
Arumaiyana velippaadu nanbare!
நன்றி சேதுசார்
காமராஜ் அவர்களே! என் அருமை நண்பர்கள் பலர் அங்கிருக்கிறார்கள் .அவர்கள்சொல்லக் கேட்டிருக்கிறேன் . அற்புதமான உணர்ச்சி மயமானபதிவு. கண்களைக் குளமாக்கிய பதிவு. வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்
ஆஹா....மாமா! அற்புதமான பதிவு....உங்கள் ரௌத்திரத்துக்கு அழகான எழுத்து வடிவம் கொடுத்துள்ளீர்கள்....!!!!!!!! இது போன்ற பதிவுகள் உங்களைப் போல் வசீகரமானவை.
tholar..
anandha vikadanil adarkaruppukkaana vimarsanam parthen . makilchiyaai irunthathu..
நன்றி மாப்ளே....
ஆமாம் தோழர் காஸ்யபன்..ரஷ்யா பிளவுண்டபோது பிரணாய் ராய் தினம் தினம் வந்து ussr ன் சிவப்பு வரை படத்தை சுக்கு நூறாக உடைத்தபடி சேதி சொல்லுவார். அப்போதெல்லாம் க்யூபாவும் மேற்குவங்கமும் ஆறுதலாக அருகில் இருந்தன.
நன்றி தோழர் இடதுசாரி.
காலையிலேயே பாண்டியராஜன் சொன்னார்.வெகுநேரம் கழித்துத்தான் பார்த்தேன்.சந்தோஷம்.
//இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்களை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருக்கிற மாநிலம். இவ்வளவு பெருமை களுக்கும் ஒரே காரணம் ஒரு முப்பத்திநான்கு ஆண்டுகள் அங்கு இடதுசாரி ஆட்சி நடைபெற்றதுதான் எனச்சொல்லமாட்டேன்//
அறிவுஜீவிகள் அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்கம் என்பதால் தான் தேசிய விடுதலையில் முண்ணனியில் நின்றது, அயோத்தியில் இந்துத்துவா கும்பல் மசூதியை இடித்து நாடுமுழுவதும் வெடித்த கலவரம் 25 சதமானம் அதிகம் முஸ்லீம்கள் உள்ள மேற்குவங்கத்தில் சிறு பதற்றம் இல்லை. ராஜீவ் கொலையுண்டபோது கல்கத்தாவில் சீக்கியர்களை காங்கிரஸ் குண்டர்களிடமிருந்து அம்மக்களும் இடதுசாரிகளும் பாதுகாத்தனர். சாதி வேற்றுமையோ தீண்டாமைக் கொடுமையோ , தாழ்த்தப்பட்ட மக்களுக்கேதிரான வன்முறையோ அந்த மாநிலத்தில் இல்லை.
ஆப்பிரிக்க விடுதலை வீரர் மண்டேலே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஹூகோ சாவேஸ் போன்றவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்த மாநிலம்.அதிக செலவு செய்து பிரம்மாண்டங்கள் மூலம் வந்த ஹிந்தி, தமிழ் தெலுங்கு சினிமாக்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிக விருதுகளை ஹீரோயிசம் இல்லாமல் கொடுத்தது வங்க அறிவுஜீவிகள். மிருணாள்சென் போன்ற இயக்குனர்கள் சமூக முன்னேற்றத்திற்காக படம் எடுத்தார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மண்ட்ல் கமிஷனை தயாரித்தவரும், அர்ஜீன் சென்குபதாவும் வங்காளிகள் என்றால் அவர்கள் சாதாரணமக்களின் மீது எவ்வள்வு அக்கள்றை கொண்டார்கள்.
தோழரே சிறப்பான பதிவு.
உங்கள் ஊணர்வுகளைக் குறை கூறவும் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், இப்படி நினைவு மண்டபம் கட்டியிருக்க வேண்டாமே என்று வருத்தப் படுகிறேன். (இவ்வளவுக்கும் நான் எனது "நாடோடித்தடம்" நூலில், 'இருதலையும் தீ' என்னும் ஓர் அத்தியாயத்தில் வாக்கு-அரசியற் கம்யூனிஸ்டுகளை விமர்சித்துள்ளவன்).
இன்னதினால் தோற்றோம்; அன்னதைப் புறம்கண்டு மீண்டும் எழுந்திடுவோம் என்று இக் கட்டுரை எழுதப்பட்டிருந்தால் மெச்சியிருப்பேன்.
அன்பின் ஹரிகரன்.நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
அன்பின் ராஜசுந்தரராஜன் அண்ணா.வணக்கம்.இப்படியான உங்களின் கருத்துக்கள் எங்கள் தோழர்கள் மத்தியில் இருநூறு சதமானம் இருப்பதால் தான் இது குறித்து பெரும்பாலும் கருத்தே சொல்வதில்லை எனக்கருதுகிறேன்.என் எழுத்து நினைமண்டபமாக இருந்தால் கட்டாயம் எனக்கு சந்தோஷமே.என் தாய்,என் காதலி,என் நண்பன்,என் எழுத்து,எனது அரசியல் நம்பிக்கை எல்லாம் தர்க்கரீதியானதல்ல.உணர்வு ரீதியானது.எதாவதொரு காரணத்துக்காக என் பிரியமானவர்கள் கண்ணீர் சிந்துகிறபோது நான் தர்க்க ரீதியாய் அறிவு பூர்வமாய் யோசிக்காமல் அழுதுவிடுகிறேன்.
கிட்டத்தட்ட தோற்றுக்கொண்டே இருக்கிற எளிய சனங்களின் மத்தியில் இன்னும் புழங்குகிற எனக்கு இது மட்டுமே சரியாகத்தோனுகிறது.
தவிரவும் மே.வங்கம் தோற்றுப்போனதற்கு இடத்சாரிகளின் அனுகுமுறை காரணமில்லை.அது முதலாலித்துவ ஊடகங்களின்,இந்துத்துவா பிடிப்புள்ளவர்களின்ன்,இவர்களின் எஜமானனான உலகமயத்தின் வெறி.
Post a Comment