4.2.10

சாமிக்குணவு இல்லாத போது சிறிது பசிக்கும் படைக்கப்படும்.

ஒரு ஆடு,
இல்லையா.

ஒரு சேவல்,
பரவால்ல.

ஒரு சட்டி பொங்கச்சோறு,
அதுவுமில்லயா ?.

அஞ்சு ரூவாய்க்கொரு தேங்கா
அட என்ன புள்ள நீ ?.

பழம்,பாக்கு,பத்தி,சூடன்
ஒண்ணுமேயில்லையா ?.

இந்தா பிடி சில்லுத் தேங்கா
திண்ணுக்கிட்டே
ஒக்காந்து ஒங்கதயச் சொல்லு.
பொழுதாவது போகட்டும்.

தெனம் ஒரு கதை கேட்பார்
கிழவங் கோயில் பூசாரி
எங்க பூச்சச் சின்னையா.

26 comments:

கிச்சான் said...

இந்த கவிதையை படித்த உடன்
முகத்திலும்
மனதிலும்
ஒரு
புன்னகை
தவழ
செய்ததற்கு
நன்றி
தோழரே

நேசமித்ரன் said...

படைச்சி திங்குறது என்றுதான் சொல்லுவாள் அப்பத்தா

கல்லுக்குள் சீவன் இருந்தால் சிற்பி நிராகரித்து விடும் கோவில்களில்
எரித்துப் புதைக்கிறோம் குடலிடு காட்டில்

குழந்தையின் இமைகளைப் போல் உறக்கத்தில் மலரும் புன்னைகையின் எள்ளலுடன் சொல்லியிருக்கும் இந்த கவிதையின் வரிகள் அழுத்தம்

காமராஜ் said...

அன்புக்கினிய கிச்சான்,
வாங்க.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் நேசமித்ரன்.
இது சும்மா,
கொஞ்சம் கவிதை முயற்சி.

எனினும் அன்புக்கு நன்றி.

மதுரை சரவணன் said...

nalla muyarchchi . ayaarchchi inri thotarungkal innum kavithai thaanaka varum. vaalththukkal.

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா

சந்தனமுல்லை said...

குலதெய்வம் கோயில்தான் நினைவுக்கு வருது! தலைப்பே கவிதையா தெரியுது எனக்கு! :-)

Deepa said...

கண் முன் கண்ட மாதிரி இருக்கு!

பா.ராஜாராம் said...

தலைப்பில் இருந்து தொடங்குது கவிதை...

தலைய தலைய ஆட்டிக்கிடே நடக்குது ரெட்டை மாடு..

வண்டியில தூங்குறாரு கோனாரு..

கிளாஸ்!

குப்பன்.யாஹூ said...

nice poem, India is happy still because of these village temples and people's love and faith.

சுந்தரா said...

இல்லாதவளின் மனச்சுமையை இறக்கிவைக்க இடம்கொடுக்கிறாரோ?

கதைகேட்கிற பூசாரி கண்ணில் தெரிகிறார் :)

க.பாலாசி said...

அருமையா சொல்லியிருக்கீங்க...உண்மையை...

சிவாஜி சங்கர் said...

ரொம்ப நல்லா இருக்கு :)

அம்பிகா said...

தலைப்பே கவிதை.
படைப்பதற்கு இல்லாவிட்டாலும் கடவுள் கோபித்துக் கொள்ள மாட்டார்;
நம்பிக்கையில் பக்தனும் பூசாரியும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண் முன்னே ஊர்ப்பக்கமிருக்கும் குலசாமி கோயில் தான் நினைவுக்கு வந்தது.

ஆரூரன் விசுவநாதன் said...

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஓர் பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்குஓரு வாயுரை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

என்ற திருமூலர் வரிகள் நினைவிற்கு வருகின்றன

காமராஜ் said...

மதுரை சரவணன் வாருங்கள்.
வருகை கருத்து ரெண்டுக்கும் வந்தனம்.

காமராஜ் said...

நன்றி லாவண்யா.

காமராஜ் said...

முல்லை,
அம்பிகா,
அமித்தம்மா

மூவர் குரலும் ஒரே சுதியில் இருக்கே !
அற்புதம்.
மூவருக்கும் ஒரே சொல்லில் நன்றி.

காமராஜ் said...

நன்றி தீபா.

காமராஜ் said...

பாரா...
என்ன இப்படி ?
அழகு,
மோதிரம் தேடுகிற சாக்கில்
கையைப்பிடித்துக்கொள்ள
மனதை கிறங்கடிக்க.
எல்லாம் அன்பின் வசமாக.

காமராஜ் said...

ஆமாம் குப்பன் சார்.
அதுதான் கவிதை.
இங்கே ஆற்றுப்படுத்த
ஏராளம் இருக்கு,இல்லியா?

காமராஜ் said...

சுந்தரா,
அன்புத் தங்கையே
நல்ல புரிதல்.

காமராஜ் said...

நன்றி பாலஜி.
0
நன்றி சிவாஜி,
புதிய வருகை.
வலை நிறைய்ய எதிர்பார்க்கிறது.

காமராஜ் said...

பொக்கிஷம் தோழர் அரூர்.
உண்மையிலே,
இதுபோன்றவற்றை
நாங்களெல்லாம் யோசித்துப்பார்க்கவில்லை.
தேடாமல் கிடைத்தது இது,
திருமூலரை அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி.

அன்புடன் அருணா said...

தலைப்பு அருமையோ அருமை!