00 அந்நியப் பல்கலைக்கழகங்களுக்கு திறக்கும் கதவு.
உயர்கல்வி ‘சீர்திருத்த’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல் ...
00 பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாக். அதிகாரிகளிடம் பி.எஸ்.எப். புகார்...
தீக்கதிர் நாளிதழில் அடுத்தடுத்த செய்தியாக வருகிறது இந்த இரண்டும் .
இந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.ஒன்று வெல்லம் கொடுத்துக் கொள்வது,இன்னொன்று விஷம் கொடுத்துக் கொள்வது. இரண்டுமே தேசத்துக்கு அச்சுறுத்தலானவைதான். ஒன்றைத்தடுக்க ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும்.இன்னொன்றை மக்களவையில் மசோதா தாக்கல் செய்து எதிர்ப்பயும் மீறி ஜெயிக்க வைப்பதுமான ரெட்டை அணுகுமுறைதான் இந்திய அரசியலின் கைதேர்ந்த நிகழ் அரசியல்.
பெப்சி கொக்கக்கோலா,அனுமதிக்கப்படுவதால் இந்தியாவின் குடிசைத்தொழில்கள் பாதிக்கப்படாது என்று சத்தியம் செய்யப்பட்டது.ஆனால் இப்போது நிலைமை என்ன.ஒரு நாளைக்கு ரெண்டு முறை மட்டும் பேருந்துவரும் பொட்டக்காட்டில் ஒரு பொட்டிக்கடை இருக்கிறது.அங்கு தான் கோலிச்சோடா,ஜிஞ்சர்பீர்,கருப்புக்கலரெல்லாம் கிடைக்கும். ஐம்பது காசு ஒரு ரூபாய் செலவில் வயித்துவலி, வாயுத்தொல்லைகளை ஜிஞ்சர்பீர், கோலிச்சோடாக் குடித்து தீர்த்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்து மக்கள். இப்போது அந்தப் பெட்டிக்கடை ஒரு பளபளக்கும் ரெப்ரிஜிரேட்டரும், 'சந்தோசக்கனி கூல்டிரிங்ஸ்'என்கிற விளம்பரப் பலகையுமாக பந்தா வாகிவிட்டது. அங்கு சோடாப்போட்டுக் கொண்டிருந்த லோக்கல் முதலாளி, காடு வீடுகளை விற்றுவிட்டு இரவோடு இரவாக தலை மறை வாகிவிட்டார்.
குடிக்க, குண்டிகழுவத் தண்ணியில்லாத ராமநாதபுரத்துக் கிராமங்களில் அக்வாபீனா இல்லாத பொட்டிக்கடை இல்லையென்றாகிப்போனது.ஒரு லிட்டர் பாலும் ஒருலிட்டர் தண்ணீரும் ஒரே விலையாகிப் போனது. இந்த லட்சணத்தில் தான் அந்நிய பல்கலைக்கழகங்கள் உள்ளே வரப்போகிறது, இல்லை கிட்டத்தட்ட வந்துவிட்டது. அனுமதி பெற அரசுக்கு 50 கோடி கட்டணம் செலுத்தவேண்டும். இதுபோக பலகலைக்கழக மான்யக்குழு, உயர்கல்வித்துறை ஆகியவற்றில் ஒப்புதல் வாங்கவேண்டும்.இப்போதே இதன் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சட்டைப்பையைத் திறந்து வைத்துக்கொண்டு தயாராகிவிடுவார்கள்.
அடுத்ததாக உள்ளே வர வெளிநாட்டு வழக்கறிஞர் குழுமம்,வெளிநாட்டு பத்திரிகை குழுமம் எல்லாம் சூட்கேசுடன் தயாராக வரிசையில் நிற்கிறது.பிறகென்ன 'india wholly owned by abroad'. மீண்டும் ஆரம்பாப் பாடசாலைகளில் லார்டு ரிப்பன் எங்கப்பன் என்று தேசபக்திப் பாடல் பாடவேண்டியதுதான்.
16 comments:
//அனுமதி பெற அரசுக்கு 50 கோடி கட்டணம் செலுத்தவேண்டும். //
பலப்பல மடங்கு சம்பாதித்து விட மாட்டார்கள்..?
Blogger பிரசன்னா said...
//அனுமதி பெற அரசுக்கு 50 கோடி கட்டணம் செலுத்தவேண்டும். //
பலப்பல மடங்கு சம்பாதித்து விட மாட்டார்கள்..?//
எது நடக்குதோ இல்லையோ,அது கட்டாயம் நடக்கும்.
உண்மைதான் சார்.
வாங்க ராமசாமிக்கண்ணன்.
அன்புக்கு நன்றி .
மூட்டை அடிக்க விடுறான்னா இவனும் மூட்டையடிக்கப் போறான்னுதானே அர்த்தம். விளங்கிரும்.
5 வருடத்தில் அடிப்பதை அட்மிஷனிலேயே அடிக்கலாம்
நாளை வெப்காம்கள் உலவலாம் காம்ப்ஸுக்குள்
துப்பாக்கியும் ஆடைக் கலாச்சாரமும்
அடியெடுக்கலாம்
கல்வித்தரம் மாறலாம் தான் ஆனால் மெய்யாகவே நன்மைதான் நோக்கமா ?
ஏனோ நாட்டில் ஒரு மவுனம் நிலவுகிறது... இல்லை மக்கள் போராடி பலனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது...
பானைத்தன்னியிலயே படகு விடுவான், கடல் கிடச்சா என்ன செய்வானோ பாலா சார்.
நேசன் ...
எனக்கொன்னும் புரியல. சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்,படிக்கிற மாணவன்,
பள்ளிக்கூடத்துக்கான நிலம்,
கட்டிடம்,எல்லாம் இங்கேயே இருக்கிறது.அங்கிருந்து எண்ணாத்தக்கொண்டு வந்து கொட்டப்போறான்.இன்னும் சிங்கப்பூர் செண்டுக்குச்சோரம் போன மனநிலையிலேயே அரசாங்கமும் இருக்கிறதே.
ராசராசசோழன் said...
ஏனோ நாட்டில் ஒரு மவுனம் நிலவுகிறது... இல்லை மக்கள் போராடி பலனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது...
0
போராட்டமா ? வரும்
MCI ல் ஒரு கேதன் தேசாய் உயர்கல்வி அமைச்சகத்தில் எத்தனை தேசாய்க்களோ?
CBI க்கு எங்க நேரம் இருக்கு, ஏற்கனவே ஓவர் டைம் பார்த்து லல்லு, முலாயம், மாயாவதி,சிபுசோரன் இப்படி சோரம்போனவர்களை காங்கிரஸ் கட்சிக்காக ஃபிளாக் மெயில் பண்ணவே நேரம் பத்தல.
ஆதங்கம் என்னையும் தொற்றிக்கொள்கிறது
god save the king
god save us too
ஆதங்க பகிர்வு...ஆபத்து வருவது அரசுக்கு தெரியாமலா இருக்கும் அண்ணே...தெரிந்தேதான்...இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருகிறார்களோ....அச்சம் பற்றி கொள்கிறது...
PATHIVU MEKAVUM ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
உங்கள் வலைப்பூவை நின்றுதான் பார்க்க நேர்ந்தது....நல்ல எழுத்து நடை....வாழ்த்துகள்
Post a Comment