பழ மொழிகள் அந்தந்த தேசத்தின் காலத்தையும், கலாச்சார சிந்தனையையும் அரிந்துகொள்ள உதவும் புதை சொற்கள்.நண்பர்களை,காதலை,பணத்தைப் பற்றிப் பேசாத நாடுகள் கிட்டத்தட்ட அழிந்துபோன நாடுகளாகவே இருக்கும்.ஆறுதேசங்களின் பழமொழிகளும்.கியூபாவின் எட்டுப்பழமொழிகளும் பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா
நீ நதிக்கரையில் வாழ விரும்பினால். முதலில் முதலைகளின் நண்பனாவதற்கு கற்றுக்கொள்.
சைனா.
பயணமே சிறந்த பரிசு.
இங்கிலாந்து.
அமைதியான கடற்பயணம் ஒரு நல்ல மாலுமியை உருவாக்கமுடியாது.
ஹங்கேரி
குறிக்கோள் முடியும்போது சந்தோசம் ஆரம்பிக்கும்.
ஜெர்மன்.
உலகத்தில் நீவாழப்பழகு,உலகை உன்னோடு வாழப் பழக்காதே.
யூதர்கள்
நீ வெறுக்கிறவற்றை அடுத்தவருக்கு செய்யாதே.அதுதான் பொது விதி மற்றதெல்லாம் அத்தமற்ற விவரணைதான்.
கியூபப்பழமொழிகள்.
பொய் முன்னேறிக்கொண்டே இருக்கும், உண்மை அதை ஜெயிக்காத வரை.
வெண்ணெயும்,மதுவும்,நண்பனும் பழசாக பழசாகத் தித்திக்கும்.
நீதியின்பதையில் நடப்பது நல்லது, அது என் வீட்டிலல்ல,அடுத்தவீட்டில்.
மனிதவாழ்க்கைக்கான காலம் ரொம்பச்சிறியது.ஆனால் ஒரு புன்சிரிப்புக்கான காலம் அதனினும் சிறிது.
ஏழு குழந்தைகளும் ஒரே தாயின் பிள்ளைகளாக இருக்கலாம்.ஏழுபேருக்கும் ஒரே சிந்தனை இருக்காது.
நல்லவேட்டைக்காரன்,அவன் வேட்டையாடியதைக் காட்டிலும் அதிகப்பொய் சொல்லுவான்.
பணம் பேச ஆரம்பித்தால்,மற்றவை மௌனமாகிவிடும்.
சரக்கடித்தவனுக்கும்,கிறுக்குப்பிடித்தவனுக்கும் ஒரு போதும் வித்தியாசம் காணமுடியாது. அவர்கள் தூங்குகிறநேரம்தவிர.
13 comments:
சூப்பர் அறிக்கொடுத்தமைக்கு நன்றி அண்ணா
அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ஒவ்வொரு பழமொழி குறித்தும் ஒரு பதிவு இடலாம் நீங்கள், அந்த அளவு பொருள் செறிந்தது.
இந்திய பழமொழியில் என்ன சொல்ல படுகிறது, எதிரியை நண்பனாக்கி கொள் என்றால், அகிம்சை தான் இந்தியாவின் அடையாளமா.
ஜேர்மனிய பழமொழி எதார்த்தம்- சமரசம் செய்ய கற்று கொள் என்ற பொருளா.
ஹங்கேரி பழமொழி போலா நாம் இருக்கிறோம், ஒரு குறிக்கோள் முடிந்ததும் அடுத்த குறிக்கோள் நிர்ணயிக்கிறோமே நாம். நமது ஆசைகளுக்கு எங்கே கடிவாளம்.
எனக்கு இந்தியாவும், இங்கிலாந்தும் மிகவும் பிடித்திருக்கிறது....
அனைத்துமே அர்த்தமுள்ள மொழிகள்...
க்யூபாவோட கடைசிப் பழமொழி உண்மை...
nallaayirukku.....:)
அசத்தல்!
நல்ல பகிர்வுக்கு நன்றி காமு சார்.
முதலைகளுடன் வாழ இந்தியன், சரியாகத்தான் செல்லியிருக்கிறார்கள்.
முதலைகளுடன் வாழ இந்தியன், சரியாகத்தான் செல்லியிருக்கிறார்கள்.
இந்தியா இங்கிலாந்து இரண்டும் அருமை! "மண் கட்டியை காற்றடித்து போகாது" நாவலில் வரும் பழமொழிகள் குறித்து தனிப்பதிவே போடலாம். நன்றி!
யூதர்களின் பழமொழி எனக்குப் பிடித்தது.
அடடா...அருமையான பகிர்வு அண்ணே...இந்தியர்கள் மற்றும் யூதர்களின் பழமிழிகள் அருமையா இருக்கு நிறைய சிந்தனைய தூண்டுது இதுபோல் சிறப்பான பதிவுகள் தொடர்ந்து எழுதுங்க அண்ணே....
"அமைதியான கடற்பயணம் ஒரு நல்ல மாலுமியை உருவாக்க முடியாது."
சூப்பர்..
அருமையான பழமொழிகள்...
ஒவ்வொன்றும் வைரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...
எங்கே கிடைத்தது இத்தனையும்...
Post a Comment