அன்பிற்கினிய தோழர்களே....
வணக்கம்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியப்போகிறது இந்த வலையுலகத்துக்கு வந்து. தயங்கித்தயங்கி உள்ளே வந்த என்னைத் தாங்கிப் பிடித்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.அவர்கள் எல்லோருக்குள்ளும் ஊடுசரடாக ஓடுவது மனிதாபிமானம்.
என்னோட,தோழன்,பாரா,ராகவன்,கதிர்,வானம்பாடி,நேசன்,கும்கி
(ரோஷக்காரன்),பாலாஜி,ஆடுமாடு,வெயிலான்,ரமேஷ்,சரவணர்கள்,harikaran,
இர்ஷாத்,சீமான்கனி,பெண்தோழர்கள்,முல்லை,அருணா,தாரணி,தீபா,
லாவண்யா,பத்மா,சுந்தரா,மதார்,மழை,முத்துலட்சுமி,கலகலப்ரியா,இப்படி இன்னும் நீண்டுகொண்டே போகும்..யாரும் விடுபட்டுப் போனதாக எண்ண வேண்டாம் எல்லோரிடத்திலும் அன்பிருக்கிறது.
இந்தவார நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் குழுவுக்கும்.எனது வலைப் பக்கத்துக்கு வருகை தந்த அணைத்து நண்பர்களுக்கும்.எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட ப்ரியமானவர்களுக்கும்,ஓரளவுக்கு சுமாராக இருந்த என் எழுத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.நெஞ்சாந்த நன்றியும்.
ஆனால் ஒரு சின்ன நெருடலிருக்கிறது அதை இப்போது பகிர்ந்து கொள்ளாமல் போனால் வேறு சரியான நேரமில்லை.
எல்லோரிடத்திலும் எழுத்திருக்கிறது, சின்னச்சின்ன குறைகளோடு.அவை குறைகளில்லை எழுத்தின் படிகள்.அப்படித்தான். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. நூறுசதவீதம் சுத்தமான எழுத்து படைப்பு என்பது நெட்டுருப்பண்ணும் மெக்கலே பரீட்சையில்கூட இல்லை. அப்படியிருக்கும் போது படைப்பில் அது சாந்தியமில்லை.சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பொதுவான நியாயம் என்ற ஒன்றிருக்கிறது.ஆண்களே சைக்கிள் ஓட்டாத காலத்தில், கடயத்தில், ஒரு பெண் சைக்கிள், ஓட்டியதைப்பாத்ததும் மஹா கவி பாரதிக்கு ஒரு பொறி வந்தது அதுவே மிகச்சிறந்த கவிதையாகவும் வந்தது. 'அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்'.
அதுபோலத்தான் வலையெழுத வந்தவர்களில் மிகையாகப் பெண்கள் வருகிற இந்த புது வரத்தை கையிலேந்திக் கொண்டாட வேண்டும். சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் அதுதான் தன்னை எழுத்தாளன் என்று நிலை நிறுத்துகிற செயல். அதை விட்டு விட்டு விமர்சனங்களைத் தாங்க முடியாமல் பெண்களை ஆண் எனும் ஆங்காரத்திலும், வக்கிர மொழியிலும் வசைபாடுவதை ஒரு போதும் படைப்பென்றும், எழுத்தென்றும் கூறவே முடியாது.நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி,என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப்பெண்களும் படிக்கிற மாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படியில்லாதவை காக்கூசில் வெளியேறும் அருவருப்பு.அதை எழுதுவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரக் கம்பனாக இருந்தாலும் கூட, அது பீச்சியடிக்கும் ப்ளஸ் அவுட் தண்ணீரில் அடித்துப் போகும்.
மனிதகுல வரலாற்றில் எத்தனை கோடி வருடங்கள், எத்தனை கோடி விலங்குகள் எச்சமிட்டுப் போயிருக்கும். எங்காவது, ஏதாவது உயர்ந்த பிறப்பின் எச்சங்களுக்கு ஏதும் தடயமிருக்கிறதா நர்சிம்? நீங்கள் நம்பும் பிறப்பின் அடிப்படையில் எச்சமிட்ட உயர் பிறப்பின் எச்சங்கள் ஏதும் அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?.இருந்தால் கொண்டுவந்து வலையுலகுக்கு காண்பியுங்கள் அப்புறம் பூக்காரியின் பிறப்பு பற்றியும், இன்னபிற பிறப்புகள் பற்றியும் பேசலாம்.ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் பிறப்பில் குறைந்தவர்கள் என்று நம்பும் யாரும் அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதில்லை.உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஒருபோதும் உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா? உங்களுக்கென்ன மல்டிபிள் டிஸாடர்டர் சின்றோம் கோளாறு ஏதும் இருக்கிறதா?.
இன்னொரு 'கக்கூஸ்' கார்க்கி, 'குத்துங்க எசமான் குத்துங்க இந்தப்பொம்பளைங்க எல்லாமே இப்படித்தான் என்று பின்னூட்டமிட்டாராமே?.
நீங்கள் சரக்கடிப்பதை வாந்தியெடுப்பதை,விபச்சாரி வீட்டுக்குப்போய் உயிர்த்தரத்தில் உதை வாங்கியதைப் பதிவென்று சொல்லிப் பீத்தலாம்.பெண்கள் எழுதினால் என்ன வந்து குடையுது கார்க்கி.
பின்னூட்டமிடும்போது ஜாகிரதையாக எழுதவேண்டும்.நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று மீசையைச் சரிசெய்கிற நேரத்தில் பெண்கள் எதைவேண்டுமானாலும் சாதிப்பார்கள்.. அதில் பூக்காரன் பொண்டாட்டி கார்ப்பரேட் கம்பன் பொண்டாட்டி என்கிற பேதம் ஏதுமில்லை.அதில் நடு ரோடு,குளிரூட்டப்பட்ட அறை எல்லாம் இரண்டாம் பட்சம்.
முன்னதாக தோழர் தீபாவை இழிவு படுத்திய ஆ'ண் பதிவர்களுக்கும்,இப்போது தோழர் சந்தணமுல்லையை unihilate பண்ணும் மூத்த பதிவர்களுக்கும் ஒன்று. இப்போது கூட உங்கள் சறுக்கலை சரிசெய்ய அவகாசம் இருக்கிறது.வேறு ஏதாவது இறுமாப்பு இருந்தால் இடிந்து விழும் ஜாக்கிரதை.
நண்பர்களே, தோழர்களே..
சித்திரக்கூடம் என்கிற வலைப்பக்கத்து எழுத்தாளர் தோழர் சந்தணமுல்லையை.ஒரு பெண் என்பதற்காக, பூக்காரி என்கிற புனைவின் மூலமாக மிகக்கேவலமாக எழுதியிருக்கிறார் பதிவர் திரு.நர்சிம்.இது கண்ணகி பிறந்த நாடு. 'தேரா மன்னா'என்கிற சினம் தெறிக்கும் சொல்லெங்கும் தமிழ் எழுத்தில் விரவிக்கிடக்கிறது.அரசியலில்,சினிமாவில்,எம் சோதரத் தங்கைகள் தமிழீழத்தில்,ரேஷன்கடையில்,புலம்பெயர்நாடுகளில் இழிவு படுத்தும்போது துடிக்கிற கீபோர்டின் எழுத்துக்கள் இப்போதும் துடிக்கவேண்டும்.முதலில் கூரையேறிக் கோழி பிடிப்போம்.நமது கணினித்திரை ஊடாக வழிந்தோடும், இந்தச் சாக்கடையைச் சரிசெய்வோம்.மகாகவி பிடித்த எழுத்தாணியின் மறுரூபம் இந்த கீ போர்டின் பொத்தான்கள்.
வெறுமனே,கும்மியடிப்பதற்கும்,சொரிந்துவிடுவதற்கும் உருவானதல்ல வலையெழுத்து என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.அதுதான் எழுத்துக்கு நாம் செய்கிற குறைந்தபட்ச மரியாதை.அங்கீகாரம்.
தோழர் தீபாவுக்கு வந்த முதல் ரோஷத்தின் நீட்சி இது. இன்னும் தொடரவேண்டும். தொடருங்கள்.
http://deepaneha.blogspot.com/2010/05/blog-post_30.html
http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html
29 comments:
First of all, really enjoyed your writing for the last one week. Thanks.
Recently read Deepa's 'Rasavaatham', liked it instantly. Beautiful narration and looks like a natural writer. She should write more.
Initially didn't understand the reason for her 'Saakadai Pzhukkal' post and Mathavaraj's post. Now I understand the reason behind it.
பெண்களை இழிவு படுத்துவது மனித குணம் அல்ல. அதுவும் இளம் பெண் எழுத்தாளர்களை கொச்சை படுத்துவது உண்மையிலேயே சாக்கடை போன்ற மனது தான். மிக கேவலம்.
நர்சிமை வன்மையாய் கண்டிக்கிறேன்
கார்க்கி said...
//அதனால் வாடிய பூக்களையும் நம்பர் டூ ஐட்டங்களையும் கடையில் அடுக்கி, சதா சர்வகாலமும் தன் மகளையே கடையில் அமரச்செய்து கடை நடத்துகிறாள். /
ஹிஹிஹி.. பாவம் அந்த பூ.. ஐ மீன் சிறுமி... சரவணன் கிட்ட சொல்லி அந்த குழந்தைய கொல்ல வேணாம்னு சொல்லுங்க. ஆத்திரத்துல அவள கொண்ணுட போறான்
கார்க்கி இது உங்க கமெண்ட்தானே? இதை விட பச்சையான அப்பட்டமான மிரட்டல் வேறு உண்டா? வெக்கமாக இல்லையா?
////கார்க்கி said...
//அதனால் வாடிய பூக்களையும் நம்பர் டூ ஐட்டங்களையும் கடையில் அடுக்கி, சதா சர்வகாலமும் தன் மகளையே கடையில் அமரச்செய்து கடை நடத்துகிறாள். /
ஹிஹிஹி.. பாவம் அந்த பூ.. ஐ மீன் சிறுமி... சரவணன் கிட்ட சொல்லி அந்த குழந்தைய கொல்ல வேணாம்னு சொல்லுங்க. ஆத்திரத்துல அவள கொண்ணுட போறான் /////
கார்க்கி இது உங்க கமெண்ட்தானே? இதை விட பச்சையான அப்பட்டமான மிரட்டல் வேறு உண்டா? வெக்கமாக இல்லையா?
எப்போ முடியும் இதெல்லாம்?
நட்சத்திரம் ஆகியதுக்கு வாழ்த்து இப்ப சொன்னா தப்பா பாஸ்?
வாழ்த்துக்கள்
குசும்பன் said...
நட்சத்திரம் ஆகியதுக்கு வாழ்த்து இப்ப சொன்னா தப்பா பாஸ்?
வாழ்த்துக்கள்
காமராஜ், நட்சத்திர பதிவுகள் அனைத்தும் வெரைட்டியாக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். இந்த பதிவில் சம்பந்தப்பட்ட எந்த பதிவையும் படிக்கவில்லை. ஆனால் குறைகுடங்கள் ததும்பும்.
its really sad to read these kind of news in blog world.
Technology has improved but humanity has not improved. what else I can say.
Even in 2030 we humans will have jealous, back bittings.
its really sad to read these kind of news in blog world.
Technology has improved but humanity has not improved. what else I can say.
Even in 2030 we humans will have jealous, back bittings.
நான் குசும்பனை வழிமொழிகின்றேன் !
விஷயத்தை மிகத்தாமதமாக அறிந்து, நர்சிம் பதிவை வந்து பார்த்தேன்.. கண்டனத்தை பதிவு செய்ய முடியாதபடி.. பின்னூட்டமுடியாதபடி பெட்டி மூடி இருந்தது.
என்னதான் கோபம் என்றாலும் நிச்சயம் பேசி தீர்த்திருக்க முடியும். ஆனாலும்.. அந்த பதிவில் வழிந்தோடிய திராவக வரிகளை நினைக்கையில் உண்மையில் பதிவுலகின் போக்கு குறித்து நிறைய ஏமாற்றமும் அயர்ச்சியுமே மிஞ்சியது.
இப்படி ஒரு இடுகையை நான் பதிவர் நர்சிம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
//வெறுமனே,கும்மியடிப்பதற்கும்,சொரிந்துவிடுவதற்கும் உருவானதல்ல வலையெழுத்து என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.அதுதான் எழுத்துக்கு நாம் செய்கிற குறைந்தபட்ச மரியாதை.அங்கீகாரம்.//
முதலில் இரண்டுவருடம் தொடர்ந்து சிறப்பான இடுக்கைகள் தருவதற்கு நன்றியுடன் வாழ்த்துகள் தனி பட்ட முறையில் நான் உங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிப்பேன் அரசியல் சினிமா இந்த பக்கம் மட்டும் போவது இல்லை....
நெம்ப அழகா நாகரீகமா சொல்லிடீங்க அண்ணே...காடு எவ்ளோ பெருசா இருந்தாலும் ஒரு சின்ன தீக்குச்சி போதும் பொசுக்கி போட...புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்...
//முல்லையை வெறும் பதிவாரகவே பார்த்தோம். அவரை பெண்ணென, அதுவும் பிறபடுத்தபட்ட பெண்ணென பார்த்தது நீங்கள்...நல்லா இருங்க பாஸ்.//
திரு கார்க்கி அவர்களே.
பூக்காரியில் எழுதப்பட்டவை. பாலின பேதமற்ற எழுத்து இல்லை.அதை ஒரு எல்கேஜி பிள்ளை படித்தாலும்.அதில் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்,ஆதிக்க மனோபாவம் தெரிந்து விடும்.
ஆண் பெண் பேதமில்லை,
இப்படிச்சொல்லுவது.எழுத்திலும் கருத்திலும் இருந்தால்
எதுக்கு இவ்வளவு.
எழுத்தாளனுக்கும், சாதாரண ஆணாதிக்க மனிதனுக்கும் தொடர்பே இருக்க முடியாது.
அந்தப்பதிவில் உள்ள வார்த்தைகளை மீளச்சொல்ல எனக்கு மனம் இல்லை.
வருத்தமே மேலிடுகிறது.
நன்றி..
அபப்டியே விஜியின் பதிவில் முல்லையிம் கமெண்டுகள் பற்றி..
பிரச்சினை என்று தெரிந்தபின் மீண்டும் மீண்டும் அவர் கல்லெறிய காரணம் என்ன? அதை பற்றி பேசவே மாட்றீஙக்ளே நீங்க எல்லோரும்?????
:)... என் பெயரும் குறிப்பிட்டதற்கு நன்றி... ரொம்ப சந்தோஷம்..
...............................
சரியா... தவறா... எனில்... தவறென்று சொல்லி விடுதல் இலகு..
...............................
எவ்விதம் நிகழ்ந்தது என வினா எழுப்ப முடியுமெனில்... தவறுதான்... ஆனால்.. என்பது போன்று நீளலாம்... நாம் எல்லாரும் மனுஷங்கதான்... பாதிக்கப்பட்டவர் பார்வையில் பார்த்தால்... இரு பக்கமும்தான்... விகிதங்கள் கூடிக் குறையலாம்...
எனக்கு யாரையும் தப்பு என்று சொல்லும் அருகதை இருப்பதாக உணரவில்லை... ஆனால் அனைவரின் நிலைமையும் புரிகிறது...
...............................
provoked <> helplessness
................................
http://tvpravi.blogspot.com/2010/05/blog-post_31.html
அபப்டியே விஜியின் பதிவில் முல்லையிம் கமெண்டுகள் பற்றி..
பிரச்சினை என்று தெரிந்தபின் மீண்டும் மீண்டும் அவர் கல்லெறிய காரணம் என்ன? அதை பற்றி பேசவே மாட்றீஙக்ளே நீங்க எல்லோரும்?????
May 30, 2010 11:50 PM///
ஓ கல் எறிந்தால் தேவிடியா என்று திட்டலாமா ?
I strongly disagree any way of discremination by gender / religion/ caste.
நட்சத்திரத்தின் நல்லதொரு வாரம் மகிழ்ச்சியில் நிறைந்தாலும்...
நிறைவு வலியாகவே இருக்கிறது...
________________________
நர்சிம்-மின் அந்தக் குறிப்பிட்ட எழுத்து நிச்சயம் ஏற்புடையதில்லை.
ஆனால்...
இதில்... எதன் பொருட்டேனும், நீங்கள் சாதியை சுட்டியது எனக்கு ஏற்புடையதில்லை...
நன்றாகச் சொன்னீர்கள் தோழர் காமராஜ் !
//எனக்கு யாரையும் தப்பு என்று சொல்லும் அருகதை இருப்பதாக உணரவில்லை... //
என்னம்மா கலகலப்பு! நற்குடி என்று பொதுவாக எழுதியதற்கே பொத்துக் கொண்டு வந்தது, ஒரு பெண்ணை பச்சையாகத் திட்டியும் கோபம் வரலையா. பெண்ணுக்குப் பெண்தான் எதிரி.
//ஓ கல் எறிந்தால் தேவிடியா என்று திட்டலாமா ?//
அப்படிக் கேளு பிரதர்.
நர்சிம்மின் பூக்காரி பதிவை படிக்கமுடியவில்லை, அதற்குள் எடுத்துவிட்டார்.அப்பதிவின் அட்ரஸை யாரோ பின்னூட்டத்தில் போட்டிருந்தார்கள், அதைவைத்துத்தான் படித்தேன். மிகுந்த அதிர்ச்சி, இப்படியும் எழுதமுடியுமா? கருத்துச் சுதந்திரம் தேவைதான் ஆனால் அந்தப்பதிவும், அதன் பின்னூட்டங்களும் (முக்கியமாக கார்க்கியின்) அதை தவறாகவே பயன்படுத்தியிருக்கின்றன. எனது கண்டணத்தையும் பதிவு செய்கிறேன்.
அதே நேரத்தில் சகோதரிகளின் பதிவுகளும் பின்னூட்டங்களும் ஏற்புடையதல்ல!
இந்நிகழ்வுகள் எங்களைப் போன்ற குழு ஆதரவு இல்லாத பதிவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது!
ஆறுதலாக இருப்பது இது போன்ற பதிவுகளே, நன்றி காமராஜ் சார்!
இனி இந்த tamilish.coம் பக்கமே வர மாட்டேன், நீங்களும் உங்க தமிழ் பற்றும், எஸ். ரா வின் பக்கங்களே போதும்.
இனி இந்த tamilish.com பக்கமே வர மாட்டேன், நீங்களும் உங்க தமிழ் பற்றும்,
எஸ். ரா வின் பக்கங்களே போதும்.
அன்பின் கதிர்,லாவண்யா,
இதில் அதிகப்படியாகத்தோன்றுகிற சில பொது விஷயங்கள் தவிர்த்திருக்கலாம்.
தவிர்த்துவிடுகிறேன்.
ஆனால் சம்பந்தப்பட்ட பதிவில் எந்த பேதமும் இல்லை என்று தூக்கிப்போட முடியாது.
வலிகளை அன்பினால் வெல்லமுடியும்.அதுமட்டும்தான் மருந்து.
வலிகளை அன்பினால் வெல்லமுடியும்.அதுமட்டும்தான் மருந்து.
vaazhthum
anbum
nantriyum...:)
super mithran sir.
Post a Comment