7.3.11

சே’ யின் புகழ்மிக்க பயணத்தில் உடன் சென்றவர் மறைந்தார்


முதலாளித்துவம்,அதன் கொடுக்கான ஜனநாயகம் ஆகியவை மூடிமறைக்கிற ஒரு பெயர் உண்டு. அதுஒரு பொட்டலம் கட்டப்பட்ட நெருப்பு.அது ஒரு நீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட காற்று.அதுதான், அந்தப் பெயர்தான் உலகநாயகன் சேகுவாரா. 


எங்கோ பிறந்து மருத்துவம் படித்து பின் துப்பாக்கி தூக்கிய அரசியல்வாதி. துப்பாகியைக்கீழே வைத்துவிட்டு கியூப மக்கள் கொடுத்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவன்.அண்டை அயல் நாடுகளில் தொடரும் அடிமைத்தனத்தை எதிர்க்க தன் அமைச்சர் பதவியைத்தூக்கி எறிந்துவிட்டு காடுகளுக்குள் சென்றவன். என் கால்களே என் வீடு என்று சொன்ன நடோடி புரட்சிக்காரன் சே 

அவனோடு பிராயத்தில் காடுமேடு சுற்றி அலைந்த அவனது தோழன்  அல்பெர்டோ பற்றிய செய்தி தீக்கதிர் ( 07.3.2011) நாளிதழில்.

1952ம் ஆண்டில் லத்தீன்- அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற சே குவேராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் கூட்டாளியாகச் சென்ற ஆல்பர்ட்டோ கிரா னாடோ சனிக்கிழமை யன்று ஹவானாவில் மர ணம் அடைந்தார். அவ ருக்கு வயது 88.

1961 ம் ஆண்டு முதல் கியூபாவின் தலைநகர் ஹவா னாவில் வாழ்ந்த அவர் இயற்கை மரணமடைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளராக சே குவேரா உருவாவதற்கு கிரானாடோவும் சேயும் மேற்கொண்ட பயணம் மிகப் பெரும் காரணமாக அமைந்தது. அருதப் பழ சான மோட்டார் சைக்கி ளுக்கு, வலுவான என்ற அர்த்தம் கொண்ட லா போடரோசா என்ற ஸ்பா னிஷ் பெயர் சூட்டி, அதில் இருவரும் பயணித்தனர்.

1952 ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட இப்பய ணத்தின் பதிவுகளை இரு வரும் குறித்து வைத்திருந் தனர். இவற்றைப் பயன் படுத்தி ‘தி மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ என்ற பெயரில் 2004ம் ஆண்டில் வெளியான திரைப்படம் சர்வதேசப் புகழ்பெற்றது.

அர்ஜென்டினாவின் கார்டோபா நகரில் 8.8. 1922ல் கிரானாடோ பிறந் தார். சே குவேராவும் கிரா னாடோவும் சிறுபிராயத் தோழர்களாகவும். மருத் துவக் கல்லூரி மாணவர் களாகவும் இருந்தனர். 1952ம் ஆண்டில் தென் அமெரிக்காவில் பயணம் செய்தனர். சிலி, கொலம் பியா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் வறுமை கோரத் தாண்ட வத்தை இருவரும் கண்ட னர். பெரு நாட்டில் தொழு நோயாளிகள் குடியிருப்பில் இருவரும் தங்கினர்.

வெனிசுலாவில் இரு வரும் பிரிந்தனர். தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை யில் கிரானாடோ பணியில் அமர்ந்தார். பயணம் முடிந்த பின் சே மருத்துவப் படிப்பை முடித்தார். பிடல், ரால் காஸ்ட்ரோக்களுடன் இணைந்த சே குவேரா கியூபா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

சே அழைப்பின் பேரில் 1960ல் கியூபாவைச் சுற்றிப் பார்த்த கிரானாடோ 1961ல் ஹவானா பல்கலைக்கழகத் தில் பயோ கெமிஸ்ட்ரி கற்பிக்கும் பணியில் ஈடுபட் டார். பெருமைமிகு தலைவ னோடு தனக்கிருந்த நட்பை பெரிதும் மதித்த அவர், அதனைப் பெரிதுப்படுத் திக் கொள்ளவில்லை.

தன்னுடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பலை கியூபா, அர்ஜென்டினா மற் றும் வெனிசுலா மீது தூவப் பட வேண்டுமென்று கிரா னாடோ தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ‘சேகுவேரா வுடன் ஒரு பயணம் - ஒரு புரட்சிக்காரனின் உருவாக் கம்’ என்ற நூல் உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆவணங் களில் ஒன்றாகும்.

7 comments:

சக்தி கல்வி மையம் said...

உன்னதமானவனின் வாழ்க்கை கட்டுரை. உணர்ச்சி பொங்குகிறது..

Deepa said...

நல்ல பகிர்வு. நன்றி.

செ.சரவணக்குமார் said...

அல்பெர்டோவின் மரணச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

வரலாற்றில் என்னென்றும் நிலைத்திருக்கும் அற்புத ஆளுமை அவர்.

எனது அஞ்சலிகள்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் கவிதை ஒன்றை அல்பெர்டோவுக்காக இங்கே இணைக்கிறேன் காமராஜ். அவர் சாம்பலின் மேல் அது புரண்டெழட்டும்.

சாகும் வரை வாழ்பவனுக்கும்
சாகாமல் வாழ்பவனுக்கும்
செத்தபின்னும் வாழ்பவனுக்கும்
இடையே நுரைக்கிறது
மரணமில்லாப் பெருவாழ்வு.

Matangi Mawley said...

the one who showed us che'! news padiththaa enakkum oru chinna kalakkam. avar vaarthaikalil kanda oru veeranai, avar maraivilum kandirunthen...

well written!

Pranavam Ravikumar said...

பகிர்வு அருமை!

தமிழ்ப் பையன் said...

மனுஷனா பிறந்தா மேல போயி தான் ஆவணும்