ஒரு பக்கம் உலகக்கோப்பையை தூக்கிக்கொண்டு இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சீதையை மீட்டுவிட்டார்கள் ராமன்கள் என்று குறுஞ்செய்தி கொண்டாட்டங்கள் நடக்கின்றன.சிங்களவனை பழிவாங்கிய தேசப்பற்று மிக்க வீரர்களின் கேப்டன் என்று வர்ணிக்கப்படுகிறார் தோனி.
இன்னொரு பக்கம் கொண்டாட்டங்கள் என்கிற பேரில் ஊர் ஊருக்கு ரகளை நடந்து கொண்டிருக்கிறது.சாத்தூர் தொடங்கி டேராடூன் வரையிலும் இரவுக்கொண்டாட்டங்களில் அத்து மீறிக்கலாட்டா செய்த இளைய இந்தியா ஜட்டியோடு லாக்கப்புக்குள் உட்கார்ந்து முழித்துக்கொண்டிருக்கிறது.
இந்தக் களேபரங்களை அப்படியே அள்ளிக் காசாக்குகிற வேலை கச்சிதமாக நடக்கிறது இன்னொரு பக்கம். ஆமாங்க, விளையாட்டு வீரர்களை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
ஜாதிமத இனமொழி கட்சிகள் கடந்து எல்லோருக்குள்ளும் ஊடுறுவுகிற சந்தோசம் இந்த உலகக்கோப்பை என்கிற ரசாயனக் கண்டுபிடிப்புகள் வேறு பரப்பப்படுகிறது.இவையெல்லாம் தொலைக் காட்சிகளாலும், கணினியாலும், அலைபேசிகளாலும் சாத்தியப்படுகிறது. கொண்டாடுங்கள் கொண்டாடுங்கள் என்று உற்சாகப்படுத்துகிற சத்தம் உரக்கக்கேட்டுக்கொண்டே இருக்கிறது. பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க என்று சொல்லுகிற மாதிரி.
நானும் என் நண்பனும்,நானும் என்தோழியும்,நானும் என் அலுவலக மேலாளரும் பேசுவதை கலாப்பூர்வமாக ஊக்குவிக்கிறான் ஏர்டெல்லும், ஏர்செல்லும், டாடா டோக்கோம்மோவும் ,பிஎஸ் என்னெல்லும். வார்த்தைகளைக் காசாக்குகிற வித்தை தெரிந்த பன்னாட்டுக்கம்பெனி வியாபாரி.
இந்த செய்திகளுக்கு இணையாக இன்னொரு செய்தி சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணிவீரர்களுக்கு இணையாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறது இன்னொரு பெயர். ”பூனம் பாண்டே”. இந்தியா ஜெயித்து விட்டால் நான் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்று சவால் விட்ட மாதிரி நான் அம்மணமாக விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வருகிறேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறாள் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியா ஜெயித்த செய்தி வெளியான உடனே பிரபல பத்திரிகை ஊடகங்கள் காமிராவைத் தூக்கிக்கொண்டு பூனம் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக் கின்றனவாம். கிரிக்கெட்டோடு சேர்த்து அமோகமாக நடக்கப்போகிறது பரபரப்பு வியாபாரம். வெற்றிக்களிப்பு வழிந்தோடிய பின்னரும் வற்றாமல் நிறைக்கப்போகிறது பார்க்கப்போகிற ஆவல்.அந்த ஆவலை வெளிநாட்டுப் பத்திரிகைகள் தங்களின் அட்டைப்படமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன.
அவள் இப்போது தனது வாக்குறுதியைச்சற்று திருத்தி இருக்கிறாள். மைதானத்தில் என்பதை கொஞ்சம் திருத்தி கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் என்று ரெண்டாம் அறிக்கை விட்டிருக்கிறாள்.எனவே இந்த நிமிடத்து கூகுள் தேடுதளத்தில் அதிகப்படியான வருகை எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் பிரபலாமாகிறாள் செல்வி பூணம் பாண்டே.
வீட்டில் வளர்க்கிற நாய் பூனை,தெருவில் அலைகிற பன்றிகள், காட்டில் வளர்கிற மிருகங்கள்,தண்ணீரில் நிறைந்திருக்கிற கடல்வாழ் உயிரினங்கள் எல்லாமே எல்லா நேரமும் ஆடையின்றித்தான் திரிகிறது. அதற்காக அவை ஏதும் வெட்கப் பபடுவதுமில்லை, விளம்பரப் படுத்து வதுமில்லை.
7 comments:
//வீட்டில் வளர்க்கிற நாய் பூனை,தெருவில் அலைகிற பன்றிகள்,காட்டில் வளர்கிற மிருகங்கள்,தண்ணீரில் நிறைந்திருக்கிற கடல்வாழ் உயிரினங்கள் எல்லாமே எல்லா நேரமும் ஆடையின்றித்தான் திரிகிறது. அதற்காக அவை ஏதும் வெட்கப் பபடுவதுமில்லை, விளம்பரப் படுத்து வதுமில்லை//
நல்ல சூடு..
Absolutely true. You have missed the freebies.
Silathu thavirththirukkalaam nanbare.
பிரபலம் ஆகுறதுக்கு இதுவும் ஒரு வழி
//வீட்டில் வளர்க்கிற நாய் பூனை,தெருவில் அலைகிற பன்றிகள், காட்டில் வளர்கிற மிருகங்கள்,தண்ணீரில் நிறைந்திருக்கிற கடல்வாழ் உயிரினங்கள் எல்லாமே எல்லா நேரமும் ஆடையின்றித்தான் திரிகிறது. அதற்காக அவை ஏதும் வெட்கப் பபடுவதுமில்லை, விளம்பரப் படுத்து வதுமில்லை.//
:)
பூனம் பாண்டெயின் அறிவிப்பு காரணமாக அவரைக் கைது செய்ய போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்ததே ஐயா! வழக்கம் போல குற்றம் நடந்தபின் நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறார்களோ!---காஸ்யபன்
நல்லா இருக்கு!
Blog owner திரு காமராஜ் அவர்களே உங்க மூலமா ஒரு செய்தி: இந்தப் பெண்ணை அம்மணமாகப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் மன்மத ராசாக்களே, உங்க அக்க தங்கச்சிங்க, அம்மா பாட்டிங்க அம்மணமா இருந்தா எப்படி இருப்பாங்களோ அதே மாதிரிதான் இவளும் இருப்பா. நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையாதீங்க, போங்கடா போய் வேற உருப்படியா வேலை இருந்தா பாருங்க.
Post a Comment