எண்பத்தாறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.இந்த எண்டோ
சல்பானைத்தான் எதோ புண்ணிய தீர்த்தம் மாதிரி இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவணம் இந்த நிமிடம் வரை விநியோகிக்கிறது சிபாரிசு செய்கிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான காசர் கோட் முந்திரி வயல்களுக்கு வான்வழியே தூவப்
படும் முறை இன்னும் அமலில் இருக்கிறது.தெளிக்கப்படும் எண்டோ
சல்பானின் வீர்யநச்சுத்தன்மையால் காசர்கோட் தொடங்கி அதன் சுற்று வட்டாரம் முழுக்க குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள். அங்குள்ள மருத்துவ
மனைக்கு வரும் ஏழைகளில் பெரும்பாலானோர் எண்டோசல்பானால் பதிக்கப்
பட்டவர்களாக இருக்கிறார்கள்.
மன்மோகன் வகையறாக்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.இதைவிடக் கோடிமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த உலகமயம்,தாரளமயம் ஆகியவற்றைச் சகித்துக்கொண்ட உங்களுக்கு இதைச் சகித்துக்கொள்ள முடியாதா என்று ஏளனக்கேள்வி கேட்கிறார்கள். ஆகையினாலே மத்திய அரசு சி எம் ஆர் ஐ க்கு பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நாடு முழுக்க தடைசெய்வது பற்றி யோசிக்கமுடியும் என்று இழுத்தடிக்கிறது. ஏற்கனவே கோக்கொகோலாவில் உள்ள நச்சுத்தண்மை கண்டறியும் விவகார த்தில் இந்திய அரசு நடந்து கொண்டதை நாடறியும். காரணம் அமெரிக் காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு. இதை எதிர்த்தும் நாடு முழுவதும் எண்டோசல்பானை தடை செய்யக்கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி கேரளம் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.
குஜராத் முதலமைச்சர் மோடியின் மீது கவிழ்ந்திருக்கும் ரத்தவாடையை மீண்டும் உலகுக்குச்சொலியிருக்கிறார் சஞ்சய் பட் என்கிற போலீஸ் உயர் அதிகாரி. கோத்ரா சம்பவம் நடந்த பிறகு பெரும்பாண்மை மக்களின் கோபம் அதிகரித்திருந்ததாம்.அந்தக் கோபத்திற்கு வடிகாலாக முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை அனுமதிக்கலாம் என்று ஒரு அரசே முடிவெடுத் திருக்
கிறது. அதற்கான ஆதரங்களையும் தனது சாட்சியங்களையும் வெளி உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார் சஞ்சய் பட். இந்தச் செய்தியை நீங்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தாலும் எந்த ஊடகத்திலும் கண்டு பிடிக்க முடியாது. மூன்று முறை குஜராத் மக்கள் அமோக ஆதரவு அளித்து பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவரெப்படி கெட்டவராக இருக்கமுடியும் என ஒரு கணினி மென்பொருள் நுட்பவல்லுநர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்.
சொந்தக்கட்சியிலும் கூட்டணிக்கட்சிகளிலும் ஒவ்வொரு மந்திரியாய் கைதாகி உள்ளேபோய்க்கொண்டிருக்க உள்துறை மந்திரி கொல்கத்தாவில் தெருகோணலாக இருக்கிறதென்று கூப்பாடு போடுகிறார்.ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிற மம்தாபானர்ஜியை சினிமாவில் வரும் ரஜினிகாந்தின் அறிமுகம் போல அப்படிப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துகிறது என் டி டிவி. அனில் பாசு மன்னிப்புகேட்டார் என்று ஊடகங்கள் உரக்கக் கூச்சலிடுகின்றன. ஒரு மேடையில் கனிமொழியின் பார்வை ராசாவின் பக்கம் திரும்புவதை,ஒரு தற்செயலான அந்த சிறு கணத்தை திரும்பத்திரும்ப காண்பிக்கிறார்கள். ”.......மணியை நீ வைத்துக்கொள்” என்கிற ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேலிக் குறுஞ்செய்திகளை அனுப்பி சந்தோசப்பட்டுக்கொள்கிறது டிஜிட்டல் இந்தியா.
எதைச்சொல்வது, எதை மட்டறுப்பது, யாரை முன்னிறுத்துவது என்பதில் நடக்கும் காய்நகர்த்தலில் காலந்தோறும் ஜெயிக்கிறது இந்த முதலாலித்துவ ஊடகங்கள்.
கேப்பையில் நெய் வடிக்கிற இந்த ஊடகங்கள்.
9 comments:
/எதைச்சொல்வது,எதை மட்டறுப்பது,யாரை முன்னிறுத்துவது என்பதில் நடக்கும் காய்நகர்த்தலில் காலந்தோறும் ஜெயிக்கிறது இந்த முதலாலித்துவ ஊடகங்கள். கேப்பையில் நெய் வடிக்கிற இந்த ஊடகங்கள்./
எமர்ஜென்சியில் இந்த ஊடகங்கள் போட்ட கூச்சலென்ன. அப்படிப் போராடி வாங்கிய உரிமையை இப்போது வேசித்தனம் செய்வதென்ன:(.
அமெரிக்காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு.
உண்மைதான்.
அமெரிக்காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு.
(இந்தியா) இருட்டுக்குள் இருக்கும் போது முகம் மற்றும் (அமெரிக்காவின் நயவஞ்சகம்) அழகு தேவையில்லை. இன்று அசாஞ்சே பேட்டியில் கூட இதை வேறு விதமாகத்தான் கூறியுள்ளார்.
இன்று இவர்கள் அமெரிக்காவுக்காக உழைக்கிறார்கள். இதற்கு பலன் நம் குழந்தைகள் பெறக்கூடும்.
தீக்கதிர் மட்டும் என்ன எப்போதும் உண்மையை சொல்கிற ஊடகமா.
அருணன் போன்றவர்கள் எழுதும் அரைஉண்மை-அரைப்பொய்கள் எங்களுக்கும் தெரியும்.அமெரிக்காதான் எண்டோசல்பானை தடைச் செய்யக்கூடாது என்று அழுத்தம் தருகிறது அச்சுதானந்தன் எங்காவதசொல்லியிருக்கிறாரா.லிபியாவின் கடாபிக்கு ஜால்ரா அடிக்கும் சிபிஎம் பேர்வழிகள்,ராஜபக்சேசை விட மோடியை அதிகம் திட்டும் சிபிஎம் ஆசாமிகளே கேரளாவில், மே.வங்கத்தில் உங்கள் கட்சி தோற்றுப் போனால் கூட அமெரிக்கா காரணம் என்றுதானே உளறுவீர்கள்.
உங்களுக்கு அறிவு கம்மி என்பதை ஏன் அடிக்கட்டி காட்டிக் கொள்கிறீர்கள்.அது தெரிந்த ஒன்றுதானே.
எண்டோசல்ஃபானிலிருந்து நாளை புதிதாய் இவர்கள் அறிமுகப்படுத்தப் பட இருக்கிற எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிக்கூட எலி நாம்தான் காமராஜ்.
பாரம்பரியமான நமது உழவுமுறையும் வேளாண்மையும் மகசூல் கொஞ்சம் குறைவோ கூடுதலோ யாருக்கும் ஆபத்து விளைவிக்காதவை.
இந்த உத்தரவாதத்தை எந்த விஞ்ஞானமாவது கொடுத்துவிட முடியுமா?
//கோடிமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த உலகமயம்,தாரளமயம் ஆகியவற்றைச் சகித்துக்கொண்ட உங்களுக்கு இதைச் சகித்துக்கொள்ள முடியாதா என்று ஏளனக்கேள்வி கேட்கிறார்கள்//
எல்லாமே விஷம் தான்.
இது தமிழுக்கு,
//மே.வங்கத்தில் உங்கள் கட்சி தோற்றுப் போனால் கூட அமெரிக்கா காரணம் என்றுதானே உளறுவீர்கள்.
உங்களுக்கு அறிவு கம்மி என்பதை ஏன் அடிக்கட்டி காட்டிக் கொள்கிறீர்கள்.அது தெரிந்த ஒன்றுதானே.//
மம்தாவை ‘வளர்த்தெடுக்கணும்’ அமெரிக்கா சொன்னது உங்களுக்கு தெரியாதா? இன்னிக்கு இல்ல 1959ம் வருஷ்த்திலேயே சிஐஏ கேரளாவிட நடந்த விமோச்சன சம்ரத்தில பங்கு இருக்குது. அத அமெரிக்க தூதர் பாட்ரிக் மொய்நிகான் தன்னோட ‘A Dangerous Place' புத்தக்த்தில எழுதியிருக்காரு. உங்களுக்கு வெளிநாட்டு சதிங்கிறது காமெடியா தெரியுது.
ஆமாம் திரு தமிழ் அவர்களே.
இந்தக்கம்யூனிஸ்டுகளுக்கு அறிவு கம்மிதான்.
நூறு வருஷமாக இந்த இந்தியாவில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும்கலைக்கூத்தாடிகள் போல.தங்களின் வாலிபம் குடும்பம் அரசு உத்தியோகம் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு மக்களோடு மக்களாய் அலைகிற அவர்கள் அறிவு கம்மியானவர்கள் தான். எப்படி ஊழல் பண்ணுவது,எப்படி கலவரத்தை உண்டுபண்ணுவது என்கிற அறிவு கம்மியானவர்கள் தான்.
ஒன்றை ஒத்துக்கொள்கிறீர்கள் மோடியும் ராஜபட்சேயும் ஒரே தரம் என்று அதற்கு நன்றிங்கோ.
Post a Comment