ராஜகுமாரன் கதைகளில்,
பக்கத்துவீட்டு அக்கா சொன்ன
விடுகதைச் சேதியில்,
அண்ணன்களின் கண்களில்,
அவர்கள் வளர்த்த தாடியில்.
விரும்பிப் படித்த சிறுகதைகளில்,
திரும்ப திரும்ப படித்த நாவலில்
தூர தேசத்தில்,தலைநகரில்,
சினிமாவில்,அடுத்த தெருவில்
அண்டை வீட்டில்
பற்றி எரிந்தது தீ .
தண்ணீர் வாளியோடு
நானும் காத்திருந்தேன்.
திடீரென்றென் தண்ணீர் வாளி
காணவில்லை.
அப்போது அடுத்த தெருவில்
என்வாளியும், என்கதையும்
யாரோசிலர் கையிலிருந்தது.
15 comments:
பற்றி எறியும் தீயில் கருகுவது பல நேரங்களில் அப்பாவி இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இருப்பது தான் வேதனையளிக்கிறது..
பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் எத்தனை எத்தனை சம்பவங்கள் தினமும் நேர்கின்றன
பிரவுசிங் சென்டரில், ஆளில்லா கோவில்களில், இருண்ட ரெஸ்டாரண்ட்களில் உடல் மொழியில் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது
ராஜகுமாரன் கதைகளில்,
விரும்பிப் படித்த சிறுகதைகளில்,
திரும்ப திரும்ப படித்த நாவலில்
நிஜத்தில் மட்டுமே புரிகிறது உண்மையான வலி நன்றாக இருக்கிறது.
இப்படிப் பற்றியெரிவதும்,வாளியும் இடம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது!
அன்பு காமராஜ்,
அருமையான கவிதை. காதலர் தின சிறப்பாய் இங்கு குதித்து கூத்தாடும் பரிமாற்றங்கள், மலர்களாகவும், பரிசுப்பொருளாகவும், முத்தமாகவும் சில சமயம் காதலாகவும் கூட இருக்கிறது.
கவிதை இயல்பாய் வருகிறது எந்தவித படோடபங்களும் இல்லாமல், முழக்கங்கள் இல்லாமல் அமைதியாய் உள்நுழையும் காதல் போல.
அன்புடன்
ராகவன்
nalla karuththu. arumaiyaana samuka sinthanai. nanri.
நல்லா வந்திருக்கு கவிதை தோழனே!
\\கவிதை இயல்பாய் வருகிறது எந்தவித படோடபங்களும் இல்லாமல், முழக்கங்கள் இல்லாமல் அமைதியாய் உள்நுழையும் காதல் போல.\\
அழகா சொல்லியிருக்கிறார் ராகவன்.
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
அமைதியாக ஆனால் வலிமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...
"அவர்கள் அப்படியாமே?
இவர்கள் இப்படியாமே?."
என் வீட்டு அவர்களும்,அதுவும்
தெருவரையில் வாராதிருக்க
அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன் நானும்.
என்று எப்பவோ எழுதியதை நினைவிற்கு கொண்டு வருது காமு,இந்த கவிதை.
பவித்ராபாலு,
ஜீவன்,
அருணா,
ராகவன்,
மதுரை சரவணன்,
அம்பிகா,
தோழன்,
தியா,
கமலேஷ்,
பாரா...
எல்லோருக்கும் அன்பு.
//அப்போது அடுத்த தெருவில்
என்வாளியும், என்கதையும்
யாரோசிலர் கையிலிருந்தது.//
தலைப்பும் இந்த வரிகளும் அழகு
இயல்பனவைகளுடன் நிறையவே சிந்திக்க வைக்கும் கவிதை
நல்ல கவிதை....
Post a Comment