நேற்று பகுத்தறிவுப்பாசறையிலிருந்து கிளம்பும் கலைஞர் தொலைக்காட்சி நேரடி வர்ணனையில் நூறு தடவைக்குமேல் ராஜாங்கம்,தனி அரசாங்கம் என்று சொல்லிப்புழகாங்கிதம் அடைந்தார்.இந்தியா குடியரசாக அறிவிக்கப் பட்டு 53 ஆண்டுகள் கடந்த பின்னும் இப்படிப்பட்ட அரசாங்காங்கள் தொடர்வது தான் வேடிக்கை .ஆமாம் இந்தியாவில் பக்தி என்கிற படுதாவுக்குள் ஒழிந்து கொண்டு தொழில் செய்யும் இதே போன்ற அரசாங்கங்கள் கணக்கிலடங் காதவை இருக்கின்றன.இவை தவிர்த்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வக்கணம் காட்டும் அரசாங்கங்கள் ஐம்பத்தாறுக்கும் மேல் தேறும். அவை அம்பானிகுழுமம் முதல் அழகிரிகுழுமம் வரை நீண்டுகொண்டே போகிறது.
அவரின் மறைவு பக்தர்களின் உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திரும்புகிற திசைகளெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 85 வயதில் இறப்பது ஈடு செய்யமுடியாத இழப்பென்பது கொஞ்சம் கூடுதலான மாயஜாலம் தான். ஐந்து முறை மரணத்தை வென்றவராம். அதுகூடப்பராவயில்லை.அவர் படுத்து தூங்கும் போது அவரோடு இருந்த ஆறுபேர் கத்தியால் தாக்க வந்தார்களாம் கடவுள் கிருபையால் காவலாளி ஆறுபேரையும் கொன்று விட்டாராம்.இந்தச்செய்தி எதோ எம்ஜியார் ரஜினி சினிமா பார்த்தமாதிரி இருக்கிறதா.இருக்கத்தான் செய்யும். பிள்ளையார் பால்குடித்தார்,பசுமாடு பேசியது என்கின்ற கட்டுக்கதைகளை நம்புவது போல நம்பித்தான் ஆகவேண்டும்.
பிழிந்து பிழிந்து அழுகிற பக்தர் கூட்டத்தைப்பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பெற்ற தாய்க்கு கஞ்சி ஊற்றாமல் காப்பகத்துக்கு அனுப்புகிறவர்கள்.வீட்டுவாசலில் பசியேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பொமரேனியனின் குறைப்புச்சத்ததை கொடுத்தவர்கள்,பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் சகஊழியனுக்கு உதவாத பணத்தை உண்டியலில் கொட்டியவர்கள்,படுக்கைம் அறையிலும்,கழிப்பறையிலும் பதுக்கமுடியாத பணத்தை அவரின் காலடியில் கொட்டியவர்கள்,கடவுளே இறங்கி வந்து ஜாதி இல்லை என்று சொன்னாலும் மறுக்கிற கடவுள் மறுப்பாளர்கள், மேடு பள்ளங்கள் நீடிக்கவேண்டுமென்கிற நம்பிக்கை வாதிகளின் கண்ணீர் உலகமெங்கும் சிந்திக்கொண்டிருக்கிறது.
இரண்டுவேளைச்சாப்பாடு சாப்பிட முடியாத ஜனங்கள் பாதிக்க்கு மேல் இருக் கிற இந்த தேசத்தில், உலகத்திலே அதிக ரத்தசோகை நிறைந்த கர்ப்பினிப் பெண்களை உருவாக்குகிற இந்த தேசத்தில் கல்வியறிவில்லாத வாக் காளர்கள் பல்கிப்பெருகும் இந்த தேசத்தில் அடித்தட்டு மக்களின் கண்ணீர் கேட்பாரற்று ஓடுகிற இந்த தேசத்தில் இது போன்ற மாய்மால்ங்களும் மாயா ஜாலங்களும் செழித்து வளரச்செய்யும்.
ஊடகங்கள் வாழ்க.
7 comments:
தோழர் காமராஜ்! ஒரு மரணத்தைக்கூட "முக்தியடைந்தார்" என்று தினமணி எழுதுகிறது. தனி ஒரு மனிதன் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து இந்தியாவில் மட்டும் 40,000 கோடி சொத்து சேர்த்து இருக்கிறார் ( இதில் சமூக சேவை மூலம் செலவழித்தது கணக்கில் வராது) உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்து மதிப்பு 1,50,000 கோடிகள் தேறுமாம். சென்னைக்குகூட அவரது உதவியால்தான் தெலுங்கு கங்கை மூலம் நீர் கிடைக்கிறதாம். மக்கள் வரிப்பணமும் அதைக்கொள்ளையடிக்கக்காரணமாக இருந்த அரசியல்வாதிகளையும் தவிர வேறு ஏதும் பணம் சம்பாதிக்க அவருக்கு மார்க்கம் இருந்திருக்குமா என்ன?
காமராஜ் அவர்களே! காஞ்சி சங்கராசாரியார் மலம் கழிக்க வாழை இலை வாங்கிக்கொடுத்த போலீசும் அரசாங்கமும் அப்படித்தான் இருக்கும். சாமியார் ஒருவர் நிர்வாணமாக காலைத் தலையில் வைத்து மறைந்த இந்திரா அம்மையாருக்கு ஆசீர்வாதம் பண்ணீனார்.ஆகவேண்டியத பாரும்!ஐயா!---காஸ்யபன்
||பகுத்தறிவுப் பாசறையிலிருந்து||
அண்ணே,
இந்த வரிக்கு உங்களை நங்’னு குட்டனும் போல இருக்கு!
நிறைய நியாயமான கேள்விகளை எழுப்பும் இடுகை.
திலிப் நாராயணனின் ஆதங்கமும் நியாயமானதே.
இப்படி எழுத யோசிக்க அநேகர் இருப்பதில்லை காமராஜ்.
ஒரு நக்ரின் குடிநீர் தேவைக்காக அரசு பணம் ஒதுக்காமல் ஆன்மீகவாதிகளிடம் கையேந்துவதை இந்த அரசு இழிவாக கருதவில்லையே. அதுவும் பகுத்தறிவு வாதி............ வீட்டில் அழைத்துவந்து காலில் விழுந்தார்கள்.
/ஈரோடு கதிர் said...
||பகுத்தறிவுப் பாசறையிலிருந்து||
அண்ணே,
இந்த வரிக்கு உங்களை நங்’னு குட்டனும் போல இருக்கு!/
ம்கும். ஊர்ப்பாசமோ?
அரசியலில் இதெல்லாம் சகசமப்பா என்றுதான் சொல்லணும் போல இருக்கு தலைவா !
Post a Comment