ஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்
தோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம் பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.
எதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு முற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.
வெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.
வாருங்கள் ஊர்கூடித்தேர் இழுப்போம்.
12 comments:
பெரியார் வாழ்ந்த பூமி. மாமனிதர் அம்பேத்கர் படத்தை அனைவரும் காண வேண்டும்.
அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்....இந்த படத்தை பற்றிய செய்தியை பலரிடம் கொண்டுபோய் சேர்க்க பதிவர்கள் முன்வர வேண்டும்.
உங்களின் இந்த பகிர்வுக்கு என் நன்றிகள்
எழவு தமிழ்ப் பேரை வச்சிட்டு ஊரைக் கெடுக்கிற படத்துக்கெல்லாம் மானியம் கொடுக்கிறதுக்கு பதில், அரசே இந்தமாதிரிப் படங்களை கட்டாயமாக ஒரு காட்சி ஓட வைக்கலாம். நஷ்ட ஈடு கொடுத்துன்னாலும்.
இந்தப் பின்னூட்டம் அம்பேத்கரை ஆதரித்தோ ஒதுக்கியோ அல்ல.எந்த ஒரு மனிதனையும் கொண்டாடுவதில் இருக்கும் ஆர்வம் அவரைத் தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை.
காந்தியோ பாரதியோ அரிஸ்டாட்டிலோ புத்தனோ வள்ளுவனோ கொண்டாடப்படுவதைவிடவும் சிலையாய் மாறுவதை விடவும் சிந்தனையில் எத்தனை பேரிடம் மாறுதல் ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் காலத்தைக் கடக்கிறார்கள்.
கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவர் ஆனபோது அவர் முதல் தலித் என்று அடையாளம் காணப்பட்டது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டியது.அவர் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கு உதவினாரேயொழிய ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்வின் மறுமலர்ச்சியுண்டாக்கவில்லை.
நம் தலைமுறையின் மாற்றம் யாரின் பின்னால் நாமிருக்கிறோம் என்பதை விட யாரின் சிந்தனைகளையெல்லாம் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில்தான்.
வெல்லக்கட்டிகள் அரிதாகவே எறும்புகளின் புற்றில் இடப்படுகின்றன.எறும்புகள் இதைப்பற்றியெல்லாம் கவலையுறாது ஒற்றுமையாய் வெல்லக்கட்டிகளைத் தேடிச் சென்றபடி ஊர்ந்துகொண்டேயிருக்கின்றன.
// வானம்பாடிகள் said...
எழவு தமிழ்ப் பேரை வச்சிட்டு ஊரைக் கெடுக்கிற படத்துக்கெல்லாம் மானியம் கொடுக்கிறதுக்கு பதில், அரசே இந்தமாதிரிப் படங்களை கட்டாயமாக ஒரு காட்சி ஓட வைக்கலாம். நஷ்ட ஈடு கொடுத்துன்னாலும்.//
மிகச் சரியாக சொன்னீர்கள் பாலா சார்.
காமராஜ்! காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தேன்.. படம் வெளியிடுகிறார்கள். த.மு.எ.க.ச தலையிட்டுள்ளது. வெற்றி செய்தி வரவேண்டுமே! என்பதுதான் காரணம்.மதியம் 1 மணிக்கு அ.குமரெசனை தொடர்பு கொள்ள முடிந்தது. "எப்படி?" என்றென்." நல்லகூட்டம்" என்றார்.".த.மு.எ.க.ச ஊர்வலமாகச்சென்று படம் ஆரம்பமானது" என்றார்."இடைவெளை.திரும்ப உள்ளே பொகிறேன் படம் முடிந்ததும் பேசுகிறென்" என்றார்."மணி 2 ஆகப்போகிறதே. சாப்பிட வேண்டாமா?" என்று முத்துமீனாட்சி கெட்டார். வெறும் ரொட்டியும்,புளிக்கொழம்பும்,சோறும் தான்.ஒரு கவளம் கூடுதலாக சாப்பிட்டேன் காமராஜ்! கண்கள் பனித்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை---காஸ்யபன்
நன்றி
உங்கள் வலைபதிவுலும் குவிகிறது அந்நம்பிக்கை.. :)
சுந்தர்ஜியின் பின்னூட்டமும் முக்கியமாக படுகிறது
நாளை கண்டிப்பாக பார்த்துவிடுவேன்...
எங்கோ உட்கார்ந்து கொண்டு படத்தை பார்க்கமுடியவில்லை,..
அம்பேத்கார் தலித் பிரதி நிதியாக அடையாளம் காட்டப்பட்டு விட்டார்.அவருக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சியில் முக்கிய பங்குண்டு என்பது நிறைய பேருக்கு துரதிர்ஷ்டவசமாக தெரியவில்லை
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே//இது வருத்தமான செய்தி
Post a Comment