29.12.10

இடப் பெயர்வு...

மூன்றாவது இடம் மாறிய போதும்
நிலைகொள்ளாது அலைகிறது
வேகம் குறையாத குறுவாலணில் ஒன்று.

அடர்ந்த பெரு மரத்தின் மறைசலைப்போல
பிறிதொன்று இல்லாது சுற்றுச்சுவரில் நின்று
மயிருணர்த்தி அலகுரசிக்கொள்கின்றன
காதற் குருவி ரெண்டு.

சுவர்தாண்டி விழுந்த நிழலில் அமர்ந்து கொண்டு
மதியக்கஞ்சி குடித்து இளைப்பாறிய சித்தாள்கள்
இன்னொரு இடம் தேடிப்போகிறார்
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு  

என்ன ஒரே எறும்புப் பட்டாளமா இருக்கு
என புலம்பிக்கொண்டே துடப்பம் எடுக்கிறாள்.
வெட்டுப்பட்டு சாய்ந்துகிடக்கும் வாதா மரத்தின்
புலம்பல் மொழி கேட்காத வீட்டெஜமானி.

18 comments:

vasu balaji said...

கடைசியில மனசப் பிடுங்குறது கவிதையிலும் வாய்க்குமா? தலைப்பிலும் எத்தனை அர்த்தம். வியந்து நிற்கிறேன்.

அன்புடன் அருணா said...

இப்படித்தான் நிறைய புலம்பல்கள் பலநேரங்கள் கேட்பதில்லை!

VELU.G said...

மிக அருமை

பா.ராஜாராம் said...

//என்ன ஒரே எறும்புப் பட்டாளமா இருக்கு
என புலம்பிக்கொண்டே துடப்பம் எடுக்கிறாள்//

எவ்வளவு எதார்த்தமான காட்சி விரிப்பு.

சொல்லொண்ணா துயரம் இந்த இடப் பெயர்வு காமு. இன்னும் நிறைய இடப் பெயர்வுகள் இருக்கிறது. நல்லவேளை எல்லாத்தையும் நீங்கள் லிஸ்ட் அவுட் பண்ணலை. பண்ணவும் முடியாது. வேணவும் வேணாம். இதுவே தாங்கமுடியாமல்தான் இருக்கிறது.

காமராஜ் said...

வாருங்கள் பாலாண்ணா...
அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

வாங்க அருணா...
கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

நன்றி வேலு சார்

காமராஜ் said...

அன்பின் பாரா...
என்ன மக்கா ஊருக்குப் போயாச்சா?
சாத்தூர் வரவே இல்லை ...
அடுத்த முறை பார்க்கலாம்.

க.பாலாசி said...

ரொம்ப பிரமாதமா இருக்குங்க... காலையிலேர்ந்து இதை படிக்காம விட்டமேன்னு வருத்தம்கூட... எந்த வெட்டுப்பட்ட மரத்தின் புலம்பல்தான் கேட்டிருக்கிறது....

அருமை..அசத்தல்..

Unknown said...

அசத்துதுங்க கவிதை.

க ரா said...

அசத்தல் காமு சார்...

பத்மா said...

காமராஜ் சார் .வானம்பாடிகள் சொல்றது போல இப்படி உலுக்க கூட முடியுமா வார்த்தைகளால் ..?
கை குடுங்க சார் ...வாழ்த்துக்கள் ..மிகச் சிறந்த கவிதை

ஹேமா said...

இடப்பெய‌ர்வு...நினைச்சாலே மனசை அதிரவைக்கும் வார்த்தை !

வினோ said...

இடப்பெயர்வில் இடர் படுக்கிறது வாழ்க்கை... :(

இப்போ தான் படிக்க முடிந்தது அண்ணா..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்னும் எத்தனை பேருக்கு என்னென்னவெல்லாம் கொடுத்துச் சாய்ந்துகிடக்கிறதோ அந்த வாதாமரம் அதன் சொல்லாத மொழி ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது உங்களால் காமராஜ்.

என் உறுப்பில் ஒன்று வெட்டிவீழ்த்தப் பட்டதாய் உணர்கிறேன் தோழா.

மிகக் குறுகிய வார்த்தைகளில் உணர்வைத்தட்டி எழுப்புகிறது கவிதை.

Unknown said...

படம் , கவிதை இரண்டிலுமே வலி ....

ராகவன் said...

ANBU KAMARAJ,

NALAMA?... KAVITHAI NALLAYIRUKKU... KAMARAJ... VETTU PATTU SAYNDHU KIDAKKUM VAADHA MARATHTHIN PULAMBAL MOZHI KETKAATHU... THUDAIPPAM EDUKKUM VEETEJAMAANI...

INDHA KADAISI VARI ILLAAMAL IRUNDHAAL INNUM NALLAAYIRUKKUM ENDRU THONDRIYADHU...

ANBUDAN
RAGAVAN

காமராஜ் said...

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்.
வலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால்
நெடுநாட்கள் வர இயலவில்லை.