எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் தலைப்புச்செய்திகள் இந்த தேசத்தை மூழ்கடித்துக்கொடிருக்கும் முடைநாற்றத்தைச்சொல்லும் சேதிகளாகவே இருக்கிறது.கேதன் தேசாய்,கில்,அமித்ஷா,செத்துப்போன ராஜீவ் காந்தி,போபால்,டௌ கெமிக்கல்,இப்படி இந்திய துனைக்கண்டத்தை ஆளும் அரசர்களும் அவர்களின் நேரடி ஏவலாட்களான உயர் அதிகாரிகளும்,அவர்களை இயக்குகிற பெருமுதலைகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க குற்ற விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் எதிர்க்கட்சி- ஆளும்கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஜெயிக்கிறார்கள் தோற்றுப் போனது ஜனநாயகமும் அதைக் கட்டிக்காக்கும் மக்களும் தான்.
சென்ற வாரம் சிவகாசிக்கு அருகில் ஒரு வெடி விபத்து நடந்தது சட்டவிரோதமாக பட்டாசுதயாரித்தவர்களைப்பிடிக்கப்போன காவல் துறை மற்றும் வருவாய்த்துறை முதல் நிலை அதிகாரிகள் ஒன்பதுபேர் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.தேடுதல் வேட்டைக்குப்போனவர்கள் பலியான விபரங்களை முன்வைக்கும் செய்திகள் முரண்பாடுள்ளதாக இருக்கிறது.பத்திரிகைச் செய்திகளும் வாய்மொழிச் செய்திகளும் அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தன்மைக்கு மிகப்பெரிய உதாரணம்.
சிவகாசியைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோகமாக நடைபெறுவது இன்றல்ல நேற்றல்ல.அதற்கு ஒரே காரணம் மோசமான கூலியும்,அமோகமான லாபமும் தான்.அதைக்கண்டு கொள்ளாத தொழிலாளர் நலத்துறை மட்டுமல்ல அந்தத் தொழிலைக் காபந்து பண்ணும் இன்னும் அதிகாமான துறைகளும் தான். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் என்பது மத்திய கலால் துறை,மாநில விற்பனைவரித்துறை,வெடிபொருள் மற்றும் சுரங்கத்துறை,வருவாய்த்துறை,தொழில்துறை,மாசுகட்டுப்பாட்டுத்துறை என்கிற துறைகளின் கட்டுப்பட்டிலும்,கண்காணிப்பிலும் இயங்குகிறவை.ஆனால் அந்தந்த துறைகளின் கட்டுப்பட்டுத்திறமை என்ன என்பதை வருடா வருடம் நடக்கும் விபத்துக்கள் நாறடிக்கின்றன.
இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து இன்னொரு பூதம் கிளம்புகிறது.இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி இது.600 டன் வெடிபொருட்கள் காணவில்லை என்று கைபிசைகிறார் அதை ந்ர்வகிக்கும் நேர்மைமாறா உயர்திரு. உபாத்யாய்.அதோடு நில்லாது எனக்கு பொறுப்பில்லை என்கிறார்.எல்லாம் உண்மை.மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் எல்லாமே இங்கு சாத்தியம்.
600 டன் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் மாயம்:தீவிரவாதிகள் கடத்தலா? சாகர், ஆக.13-
600 டன் வெடிபொருட் கள் ஏற்றப்பட்ட 61 லாரி களைக் காணவில்லை. இத னால் மத்தியப் பிரதேசத் தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. இவற்றை நக்சலைட்டு கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியி லிருந்து இந்த வெடி பொருட்கள் ஏற்றிய லாரி கள் மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ் புளோ சிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டன. மொத்தம் 61 லாரி களில் 600 டன்னுக்கும் மேற் பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெடி பொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ் புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத் யாய் கூறுகையில், உரிய உரிமங்களுடன் வந்த லாரி களில்தான் இந்த வெடி பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற் போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக் குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார். இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்ட வையாகும். அதில் டெட்ட னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற் போது பூட்டப்பட்டுள் ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடி பொருட்களை அந்த நிறுவ னத்திற்கு அனுப்பினர் என் பது தெரியவில்லை. கணேஷ் வெடிபொருள் நிறு வனத்தின் உரிமையா ளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாது காப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட் டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலி ருந்துதான் டெலிவரி செய் யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாய மான சம்பவம்பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் உள்ளிட்டவர் கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிறு பான்மை மக்கள் மீது பழி போட முயன்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இந்த பாணி யில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இப்போது பெருமள வில் வெடிபொருட்கள் கடத்தப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
2 comments:
சாமி - நீங்க ஜெயா டிவி, தீக்கதிர், நமது எம்ஜி ஆற மட்டும் படிக்கிறீங்க போல.
கொஞ்சம் முரசொலி, தினகரன் எல்லாம் படிங்க. பொதிகை , கலைஞர் தொலைக்காட்சி எல்லாம் பாருங்க.
வண்ணார்பேட்டையில் மேம்பாலம், சென்னை அடையாரில் பெரிய நூலகம், பல்லாவரத்தில் மேம்பாலம் போன்றவையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இப்படி பொறுப்பிலாதவர்களின் அரசாங்கம் தான் எப்பவும் நடக்கிறது. ஏதும் விபரீதம் நடந்தால் தீவிரவாதிகளின் அட்டகாசம் என்று பேட்டி கொடுப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுகிறது...எப்போது விடியும்...நன்றி அண்ணே...
Post a Comment