பதிவர் மாதவராஜை அடர்த்தியாக்கினால் கிடைக்கும் ஓவிய உருவமாக இருப்பார் ராஜ். மாதவராஜிடம் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே கிடைக்கிற தெக்கத்தி வார்த்தைகள், ராஜின் சுவாசத்தில் கூடத் தெரிந்து மொத்தமாகக் குவிந்து கிடக்கும். நன்றாகப் பாடுவதும்,தொடர்ந்து விகடம் சொல்லி ஈர்ப்பதுவும் ராஜின் அக்மார்க் குணங்கள். எனது இருசக்கர வாகனத்தை ராஜின் கடைக்குக் கீழே நிறுத்திவிட்டுத் தான் நென்மேனியி லிருந்த வங்கிக் கிளைக்குப்போவேன்.அந்த மூன்று வருடங்களும் தினப்படிக்கு சாயங்காலம் ஒரு மணிநேரமாவது பேசிவிட்டுத்தான் வருவேன்.
நேர்த்தி, சுத்தம், நேரம் தவறாமையோடு மெல்லிதான ரசனைகள் மிகுந்த நண்பர் திரு ராஜ். 'ஆயா ஹே சந்த்ரமா ராத்து ஆஜி' என்று நான் பாடும் போது கூரை இடிந்து விழுகிற மாதிரி சிரித்துவிட்டு 'ஆயா இல்லை ஆதா'. 'ஆதாஹே சந்த்ரமா' என்றால் பாதியான நிலவே என்று பொருள் சொல்லுவார். முகம்மது ராபியின் நிலவுருகும் குரலை விகசித்தபடி நெடுநேரம் ஹிந்திப் பாடல் பாடுகிற நாட்களை நொறுக்கிப்போட்ட நாள் இது . இந்திய விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்று சாத்தூர் வந்த அந்த நான்கைந்து வருடங்கள் மௌனராகம் படத்தில் கார்த்திக் வந்துபோன காட்சிகள் போல கலகலப்பானவை. நினைவுகள் கனமாகப் பின்னிழுக்க மெலிதான சினிமாப் பாடல்கள் கேட்கிறது.
குட்டியின் நினைவுகளுக்கு.
9 comments:
குட்டியின் சித்திரத்தை வரைந்து தருகிறீர்கள், காமு, மாது, அம்பிகா.
இறக்கவாவது, உங்களோடு பிறந்திருக்கலாம் போல வரும் தருணம் இது. சரி. கூட இருக்கிறேனே.
மாதவ் அண்ணனின் பதிவை வாசித்து கலங்கிப்போனேன். எனது அஞ்சலிகளும் காமு அண்ணா.
அஞ்சலிகள்
தோழர்களே ...உங்களனைவரின் உணர்வுகளிலும் நானும் பங்கு கொள்கிறேன் ...
மிகவும் வருந்த தக்கது தான் ,,ஆழ்ந்த வருத்தங்கள்
எனது அஞ்சலிகளும்.
என் அஞ்சலிகளும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்....அண்ணே...
Post a Comment