மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்.
வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த
பசுமையின் விதைகள் சீரற்ற
மரகதப் பளிங்கெனப்பாவும் காடு.
எடுத்துக் கொண்ட தானே
மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம்.
அங்கிருந்து தவளைகள் நிரப்பும் இசை இரவு.
வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும்
அலைந்து கதறும் பன்றிக்கூட்டம்.
வெளுத்த துணியிலிருந்து
கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும்
கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும்
நாயும் நசுங்கும் நாற்கரச்சாலை.
அப்பாடவெனச்சொல்லி
ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி.
அணைத்திலும் ஊடுறுவித்
தகிப்பை விரட்டும் அடைமழை.
விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.
0
மீள்பதிவு
14 comments:
அருமை, நன்றிகள்
enakku kavitha purivathillai. voted...:)
அடி மழையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறேன் ...
//தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்//
மனதிலும்.:)
கவிதை நல்லா இருக்குங்க அண்ணா
வெப்பம் எப்பவும் கவிஞனிடமிருந்திருக்களாம்,
ஆனால், இக்கவிதைக்குள்ளிருப்பது குளுமைதான்.
நல்ல கவிதைங்க. அப்பாடவெனச் சொல்லி...... கொஞ்சம் புரியவில்லை.
கவிதை ரொம்ப நல்லாருக்கு அண்ணா.
very nice
தஞ்சம் புகுந்துகொள்ளும் ஒரு கவிதை அருமையாக இருக்கிறது காமு அண்ணா.
நல்லாருக்கு காமு.
நேற்று ஒரே ஆட்டமா, என்னை விட்டுட்டு? இருங்கடி, இருங்க. வந்து வச்சுக்கிறேன். :-))
தஞ்சம்புகுந்த கவிதை நெஞ்சம்புகுந்தது அண்ணே...அருமை வாழ்த்துகள்...
தலையங்கமே கவிதையாய் குளிர்ச்சியாய் இருக்கு.
almost a poem i liked in the first read
Post a Comment