29.8.10

பராக்குப் பார்த்தல்.

நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஹரியுடன் நான் பார்க்க தேரம் கிடைத்தது.அல்லது தேடிப்போய் இசைக்கடியில் ஒளிந்து கொள்ள முடிந்தது. இசைக்கு சோர்வைத்,தனிமையை,நிராதரவை அழித்துப்போடுகிற வல்லமை உண்டு.ஆரம்பகால சன்தொலைக் காட்சியில் டாக்ஷோக்களில் அதகளப்படுத்திய ரெகோ,ஆனந்தகீதன்,நேருக்குநேர் ரபி வரிசையில் வந்தவர் ஜேம்ஸ்வசந்தன்.அவருக்குள் இப்படி ஒரு இசை ஆளுமை இருக்கிறது என்பதை இனங்கண்டு கொள்ள தமிழ்பரப்புக்கு பத்துவருடங்களுக்கு மேலாகிப்போனது.பாவம் இந்த வசந்தன் தான் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நின்றுகொண்டு சோப்பு சீப்புக்களோடு போட்டி நடத்திப்பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்.அவரை ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய சுப்ரமனியபுரமும், இயக்குனரும், கண்களிரண்டால் பாடலும் மைல்கற்கள்.

பாடல்களை அணுக்களாகப்பிரித்து கூறுபோடுகிற அந்த மூன்றுபேரையும் பார்த்தபிறகு எந்தப் பாடலையும் பாட நாக்கூசுகிறது.இந்த நிகழ்ச்சியில் பாடுகிற போட்டியாளர்கள் எல்லாமே வாலிபர்களாக இருப்பதனால் குறைகள் சொல்லுகிற அந்த மூன்றுபேர்மேலும் சித்ராசேச்சி மேல் வருகிற மாதிரிக் கோபம் வரவில்லை.எலிமினேசன் ரவுண்டின் பின்னணியில் ஒலிக்கிற சவுண்டு நம்மை கழிவிறக்கச் சூழலுக்கு இழுத்துக்கொண்டே போவதில் ஜெயா,சன் இரண்டுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

போட்டியிலிருந்து வெளியேறுகிறவர்களுக்கு தேர்வாளார்கள் சொல்லும் திடவார்த்தைகள் மனித குல நாகரீகத்தின் உச்சம்.ஆனாலும் தோற்று வெளியேறுகிறவர்களின் அந்த நேரத்து மனநிலை கொடூரமானது.அது பின்னணி இசையில்லாமலே பார்வையாளர்களைக் கலங்கடிக்கும். நான் தகுதியற்றவள் தான். இந்தப்போட்டிக்கு வருவதற்கு முன்னாள் எனது குரல் திறந்ததாக இருந்ததில்லை என்பது எனக்குத்தெரியும். என்றாலும் போட்டியின் போது அதில் நிறைய்ய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு வரும்போதே அந்த அருணாப் பொண்ணுக்கு குரல் உடைகிறது.அப்போது அதை ஒரு நிகழ்ச்சியாகவோ,அந்தப்பெண் யாரோ ஒருத்தி என்றோ தப்பிக்கமுடியாமல் சோகத்துக்குள் நமது மனசும் சேர்ந்து சஞ்சலப்படுகிறது.

0

வடமாநிலத்திலும் தமிழைப்போல அத்திபூத்த  அபூர்வமாக நல்ல திரைப்படங்கள் வந்து போகும்.தாரே ஜமீன்பர்,லாகூன்,1947,போன்ற முயற்சிகளை மேற்கொண்ட சாக்லெட் நடிகன் அமீர் இந்த முறை விவசயிகள் தற்கொலையைப் பின்புலமாகக்கொண்ட ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.பீப்லி (லைவ்).பீப்லி என்கிற குக்கிராமத்தில் விவச்சாயத்தை மட்டுமே நம்பிவாழ்கிற ஒரு குடும்பம் பட்ட கடனுக்காக வங்கியின் ஜப்திக்குள்ளாகிப் பின்னர்தற்கொலை முடிவுக்கு தயாரகிறது. செய்தி வெளியில் கசிந்து உள்ளூர் நிரூபர் மூலம் அது மும்பையை எட்டுகிறது. அங்கிருந்து இன்றைக்கிருக்கிற ப்பாப்புலர்  ஊடகங்கள் அணைத்தும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பீப்லி கிராமத்தை கபளீகரம் செய்கிற பகட்டு சோகம்தான் மையக்கதை. கூகிள் விமர்சனங்கள் மூலம் பார்க்கவேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுகிற சினிமா இது.பாட்டுக்களும் உண்டாம். உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் இல்லையெனில் உன்னைப்போல் ஒருவன் மாதிரி தமிழ்படுத்தி கெட்டுப்போன கதையப் பார்த்து ஆஹா ஓகோ என்று புலகாங்கிதப்படநேரிடும்.

5 comments:

Unknown said...

நான் டிவியில் டிஸ்கவரி தமிழ் மட்டும் பார்ப்பதால் முதல் செய்தி பற்றி எனக்கு தெரியவில்லை..

அமிர்கான் செய்திருந்தால் நேர்மையாக செய்திருப்பார் எனவே பீப்லி பார்த்து விடுகிறேன் ...

vijayan said...

வணக்கம் காமராஜ், அரசியல் அங்கத படம் என்பதால் உரையாடல் முக்கிய பங்கு வகிக்கிறது,போஜ்பூரி என்ற மத்யப்ரதேச இந்தி,புரிந்தால் நன்றாக ரசிக்கலாம்.இது என்னுடைய கருத்து.

ராம்ஜி_யாஹூ said...

அருணாவா, ரஞ்சனியா என்று தெரிய வில்லை, அவர் சொன்ன கருத்து.
நான் இந்த நிகழ்ச்சியை சற்று இயல்பாக விளையாட்டாக தான் எடுத்து கலந்து கொண்டேன். இந்த சுற்று வரை பாட வந்ததே பெருமை என்று சொல்லி அழகாக முடித்தார். சில சுற்றுகளுக்கு அப்புறம் தான் சீரியாச்நேச்ஸ் வந்தது என்றார்.

இதே போல என் நண்பன் ஒருவன் செய்த செயல்- சூப்பர் சிங்கரில் முதல் சுற்றில் எடுத்த எடுப்பிலியே சொல்லி விட்டான் மகதி யிடம். மேடம் நான் தோல்வி வெற்றி பற்றி கவலைப் பட வில்லை. எனக்கு உங்களை நேரில் பார்க்கும் வய்ய்ப்பு, எனது முகம் இரண்டு வினாடிகள் தொலைக்காட்சியில் தெரியும். இந்த இரண்டே எனது வெற்றி , எனக்கு போதும் என்று கூறினான்.

பத்மா said...

நேற்று நானும் பார்த்தேன் காமராஜ் சார் ..
ஆனால் முடிவைக்காண வில்லை ..
elimination ஒரு கொடுமையான செயல் தான் ..அதை பார்க்கும் மனதிடம் எனக்கு இல்லை ..
மற்றபடி போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும் தானே ..
இருபக்கமும் நியாயம் இருக்கிறது ..
அதுசரி உங்கள் பாட்டை எப்போது வலைப்பூவில் போடப்போகிறீர்கள்

சீமான்கனி said...

நானும் ஜேம்ஸ்-ஐ சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன் அவரின் இசையும் நல்லா இருக்கு சிலவை எங்கோ கேட்டதுபோல் இருக்கு.

அமீரின் நல்ல சிந்தனைகள் சிறந்த படங்களாய் வெளிவரணும். இன்னும்!! எனக்கும் அந்த ஆசை இருக்கு அண்ணே...பகிர்வுக்கு நன்றி ...வாழ்த்துகள்...