4.10.10

விலகாத இருள்.

அனுகுண்டை வெடிக்கலாம்
வின்கலத்தை ஏவலாம்
நாற்கர சாலையமைக்கலாம்
ரக ரகமாக நூடுல்ஸ் சமைக்கலாம்
கணினி இறக்குமதி செய்யலாம்
வல்லுநர்களை ஏற்றுமதி செய்யலாம்
வல்லரசுக் கனவுகூட   நனவாகலாம்
இந்தியாஒளிர்கிறதென்று ஒலிபரப்பலாம்.


எனினும்....

அந்திக்கருக்கலில்,முந்திக்காலையில்
நடைபாதைகளில் நுழைகையில்
வாகன வெளிச்சம் கூச
பதறி எழுந்து தலைகுனியும்
கிராமத்து சகோதரிகளோடு
இன்னும் இருண்டேகிடக்கிறது
என் தேசத்தின் முகம்.

24 comments:

Anonymous said...

நம் கிராமங்களின் தலை எழுத்தாகவே
இன்னும் விலகாத இருள்

vinthaimanithan said...

இதையெல்லாம் சொன்னா நீ என்னத்த தியாகம் பண்ணினேன்னு நம்ம 'இண்டலக்சுவல்' மக்கள் கேப்பாங்களே தலைவா?!

எதுக்கு வம்பு? பேசாம நீங்களும் " அய்!நானும் எந்திரன் பாத்துட்டேன்"னு ஒரு பதிவு போட்ருங்க!

All the bloody bullshits!

வேறொண்ணுமில்ல... இப்பத்தான் ஒரு 'அதிபுத்திசாலி'யோட பதிவ படிச்சிட்டு வரேன்.
உங்க கவிதையகூட ரசிக்க முடியாத அளவுக்கு மனசு கொதிச்சிட்டு இருக்கு...

Unknown said...

உண்மை தான். இடைவெளி ரொம்ப ஜாஸ்தி ஆகிகிட்டு இருக்கு. எழுபதாயிரம் கோடி பணத்திலே எவ்வளவோ பண்ணலாம். இப்பிடி வேஸ்ட் ஆகப் போகுது.

பத்மா said...

இதற்கும் எதாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. யாரோ நம்மை முன்னேற்றுவார்கள் என்று காத்துக்கொண்டிருப்பதை விட நாமே அதற்கு முயற்சிக்க வேண்டாமா?நான் பார்த்த வரை முன்னேறணும் என்ற வேட்கை கிராமத்து சகோதரிகளிடம் குறைவாகக் காணப்படுகிறது ...என்ன சொல்றிங்க ?

மாதவராஜ் said...

முகத்திலறையும் உண்மையை சொல்கிறது. அருமை தோழனே!

kashyapan said...

தொழர்! 1996ம் ஆண்டு என்று நினைவு.சத்காசியா தொகிதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜோதிபாசு பெசுகிறார். நானும் மொழிபெயர்ப்பாளர் முத்த மீனாட்சியும்(என் துணைவியார்தானய்யா) போயிருந்தோம். பசுமையான கிராமங்களத்தாண்டி சாலையில் பயணப்பட்டோம்.ஆங்காங்கே நிறுத்தி வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளிடம் பேசினோம்."ஜொதிபாபு ஆட்சியில் எங்களுக்கு குறை எதுவுமில்லை. கிராமங்களில் கழிப்பிட வசதி இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேண்டும்" என்றார்கள். தற்போது அதுவும் செய்துகொடுக்கப்பட்டுவிட்டது என்று அறிந்தேன்.
மக்களின் பிரச்சினையை மக்களோடு தொடர்பு கொண்டவர்களால் விரைவில் சரி செய்ய முடியும்---காஸ்யபன்.

கமலேஷ் said...

உண்மை

சுந்தரா said...

கண்கூடாகக் காணும்போது கஷ்டம்தான் மிஞ்சுகிறது.

velji said...

யார் மீது கோபம்கொள்வது என்பது தெளிவாகாமல் இதை கடந்திருக்கிறேன்...சகோதரிகள் என்ற வார்த்தை என்னை கைபிடித்து தூக்கிவிட்டிருக்கிறது.

நன்றி!

க.பாலாசி said...

இதுதான் உண்மை... இன்றைக்கும் ஊருக்குள் நுழையும் அந்த அதிகாலைவேளை தலைகுனிந்தே செல்லவைக்கிறது.

Unknown said...

அண்ணே இந்தியா உலகின் மூன்றாவது வலிமையான நாடென்று சொல்கிறார்கள்... கேக்கவே சிரிப்பாணியா இருக்கு ...

ஆ.ஞானசேகரன் said...

//அந்திக்கருக்கலில்,முந்திக்காலையில்
நடைபாதைகளில் நுழைகையில்
வாகன வெளிச்சம் கூச
பதறி எழுந்து தலைகுனியும்
கிராமத்து சகோதரிகளோடு
இன்னும் இருண்டேகிடக்கிறது
என் தேசத்தின் முகம்///

அழுத்தமாக சொல்லியுள்ளீர்கள் தோழரே!

பனித்துளி சங்கர் said...

அருமையான கவிதை . உணர்வுகள் இன்னும் கசிந்துகொண்டுதான் இருக்கிறது இதுபோன்ற வார்த்தை தேடல்களில் . பகிர்வுக்கு நன்றி

vasu balaji said...

பளிச்சுன்னு அறையுது உண்மை. விடியலில் வியாசர்பாடியிலிருந்து பேசின் பிரிட்ஜ்வரை பயணிப்பது நரகம். வண்டி கடந்துவிடும் என எழுந்து நிற்பதும், சிக்னலுக்கு வண்டி நின்றுவிட்டால் தவிப்பதும் வங்கொடுமை.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல கவிதை... எல்லோரும் கடந்து போகும் ஒரு விஷயம், ரயில் பயணங்களின் விகுதியாய் இருக்கும் இந்த விஷயம் நம் எல்லோரையும் பாதிக்கிறது. நிறைய எழுதுகிறோம், பின்னூட்டங்களில் கொட்டுகிறோம் காமராஜ்.

நான் முன்பு பணிசெய்த நிறுவனத்தின் மூலம் என் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் மூலம் சில இடங்களில் கழிப்பறை கட்டிக் கொடுத்தோம். சுகாதாரம் பற்றி, சௌச்சால்யம் பற்றிய பாடங்கள் எடுத்தோம்... ஆனால் சொல்லும்படி மாற்றங்கள் வரவில்லை. சிறு சலசலப்பை தவிர...

மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

சுலப் இண்டர்னேஷனல் ஒரு புரட்சி மாதிரி வந்தது, வர்த்தக நோக்கம் இருந்தாலும் நிறைய இடங்களில் சமூக மாற்றங்கள் கொண்டு வந்தார், கழிப்பிடங்களை பொறுத்த வரை.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

வருங்கள்

விமலன்,
விந்தை மனிதன்,
சேது சார்
பத்மா.

கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி டெனிம்.

நன்றி தோழா

காமராஜ் said...

நன்றி தோழர் காஷ்யபன்

நன்றி தங்கச்சி சுந்தரா

நன்றி வெல்ஜி,

நன்றி பாலாஜி

காமராஜ் said...

thanks kamalesh
thankas senthil
thanks gnans

காமராஜ் said...

ராகவன்
பாலாண்ணா
பனித்துளி சங்கர்

எல்லோருக்கும்
அன்பும் நன்றியும்.

hariharan said...

ஒரே நாட்டிற்குள் ஒளிரும் இந்தியா,இருண்ட இந்தியா.

அரசு எப்போதும் ஒளிரும் இந்தியா பக்கமே இருக்கிறது, இருண்ட இந்தியாவை வெளியுலக்த்திற்கு இருட்டடிப்பு செய்கிறது.

நல்ல கவிதை தோழரே...

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

உயிரோடை said...

இன்னும் இருண்டே கிடக்கிறது :(

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக் கவிதை!