ஒரு புதுமனை புகுவிழாவுக்குப் போயிருந்தேன்.வீட்டுக்குச் சொந்தக்காரர் நெருக்கமானவர் எனபதால் காலை மதியம் இரவு மூன்று வேளை சாப்படும் அங்கேதான்.மூன்று நேரமும் மூக்கை உறுத்தாத இயல்பான மணம்,வயிற்றை உறுத்தாத நல்ல சாப்பாடு.சமையல்காரர் யார் என்று கேட்டேன். அறிமுகப் படுத்தி வைத்தார்கள். மணக்க மணக்க சமைத்தவர் சிரிக்கச் சிரிக்கப்பேசினார். இவ்வளவு அருமையா சமயல் பண்றீங்க ஏன் பெரிய்ய ஆர்டகள் எடுத்து செய்யக்கூடாது என்றேன். எல்லாம் பேர் ராசி தான் தோழர் என்றார்.என்னய்யா தோழர்னு சொல்றீங்க தோழர் வீட்டுக்கு சமைக்க வந்துருக்கீங்க நீங்களே ராசி மேல நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று கேட்டேன்.சிரித்துக்கொண்டே 'எம்பேரு அம்பேத்கார்' என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விட்டார்.
என்னக்குத் தெரிந்து இதுவரை எந்தப்பள்ளி ஆண்டு விழாவிலும் அம்பேத்கர் வேடமிட்டு குழந்தை மாணவர்கள் மாறுவேடப்போட்டிக்கு வந்ததில்லை. லோகமான்ய பாலகங்காதர திலகரைக் கூடப் பார்த்திருக்கிறேன்.காரணம் பள்ளிகள் நடத்தப்படும் கல்வித் தந்தைகளால் அது அரசு பள்ளிகளா யிருந்தாலும் கூட அம்பேத்கர் ஒரு புரட்சிக்காரன் என்கிற பிம்பம் ஏற்படுத்தப்பட வில்லை.இதெல்லாம் எழுதப்பேச அயற்சிதான் வருகிறது. ஆனால் இந்த செய்தியைப்படிக்கும் போது நமக்கு என்ன நேர்கிறது ?.
தீக்கதிர் 02.12.10 தலையங்கம்.
//தலைக்கு குளித்ததால் ஈரம் உலர வேண்டும் என்பதற்காக இரட்டைச் சடை போடாமல் வந்த கோவை மாணவி ஹரிஹரசுதாவின் தலையை சுவற்றில் மோதியதோடு தலைமுடியையும் வெட்டி எறிந்துள்ளார் ஆசிரியர். விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர் கள்; தொடர்ந்து சாதிய ரீதியாக தாக்கப்படுகிறார் கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ரோகிணி என்ற எல்.கே.ஜி மாணவி சக மாணவனை விளையாட்டின் போது கிள்ளி இருக்கிறாள். இதற்காக ஆசிரியர் ரோகிணியை தாக்கியதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைத்து தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறார்.
இவையெல்லாம் சில செய்திகளே. தேர்வு அட்டையால் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர், ஆசிரியர் திட்டியதால் மாண வன் தற்கொலை, மாணவனை செவிடாக்கிய ஆசிரியர், வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட் டதால் எலி மருந்து சாப்பிட்ட மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் வக்கிரங்கள், தலித் மாண வர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் என 2008ஆம் ஆண்டு மட்டும் 21 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பதிவாகாதவை இன்னும் பல.//
//“தேசிய ஆணையத்தின் வழிகாட்டல்கள் குறித்தும் குழந்தைகளையும் அவர்களது உரிமை களையும் பாதுகாப்பது குறித்தும் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமது பள்ளி யில் அனைத்துப் பெற்றோர்களும் பங்கேற்கும் பேரவைக் கூட்டங்கள், அதேபோல் பள்ளிக் கல்விக்குழு அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும்”. “உடல் ரீதி யான தண்டனைகள் தொடர்பாக வட்டார அள வில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் அனைத்து பள் ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன் முறைச் செயல் நடந்தாலும் ஒட்டுமொத்தத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, 2009, மே 26 அன்று ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா அனுப்பிய வழிகாட்டும் குறிப்பின்மீது அரசு ஏதேனும் உருப்படி யான நடவடிக்கை எடுத்ததா? நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்க்கும்போது அனைத்து வழிகாட்டு நெறிகளையும் அரசு தூக்கி எறிந்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.//
அதே தீக்கதிரில் ப.கவிதாகுமாரின் கட்டுரை ஒன்றும் இருக்கிறது.மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனபாலின் மகள் ப்ரியங்காவை வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லி அந்த குப்பையைத் திங்க வைத்த ஆசிரியர் குறித்த பதிவும் இருக்கிறது.படிக்க முடியாதபடி அவலம் கண்களில் திரையிடுகிறது.நாம் எங்கே இருக்கிறோம்.
10 comments:
மனதுக்கு வருத்தம் சேர்க்கும் இரு விதமான தகவல்கள் காமராஜ்.
நமக்கு பள்ளிகளின் பயிற்றுவிப்பிலும் போதனை முறைகளிலும் மாறுதல் வராத மதிப்பெண் கல்வியுள்ள வரை இந்தப்போக்கு மாற வழியில்லை.
ஒவ்வொரு சம்பவமும் மனதை பதற வைக்கிறது. ஒன்றை ஒன்று, மிஞ்சும் வகையில் அநியாயம் நடக்கிறதே. மனித நேயம் என்பதையே மறந்து விட்டு இப்படி கொடுமைகள் நிகழ்த்தி இருக்கிறார்களே!
மிகவும் கவனித்து... கருத்தில் வைக்கவேண்டிய பதிவு..
அம்பேத்கரின் பெயரை சில பேர் misuse செய்வதும் ஒரு காரணம்...
மாறுவேடப்போட்டியில் நானும் பார்த்ததில்லை :(
/நாம் எங்கே இருக்கிறோம்/
இருக்கிறோமா?:((.
நாம் எங்கே இருக்கிறோம் ?????
good post
அன்பு காமராஜ்,
ரொம்ப நல்ல பதிவு... நிறைய விஷயங்கள் பேசத்தூண்டும் பதிவு... கல்விமுறையும்...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவன்
என்னத்த சொல்றது!
வார்த்தையும் வரல
ஒரு மண்ணாங்கட்டியும் வரல
நெஞ்சைத்தான் அடைக்குது.
மனிதனுக்கு ஏந்தான் இந்த மாதிரியான குரூர புத்தியோ!
பகிர்ந்ததற்கு நன்றி காமராஜ்.
என்ன நடக்குது அண்ணா.. பயமா இருக்கு ? அவுங்களுக்கும் குழந்தைகள் இருக்குமில்ல?
நல்ல பதிவுங்க. இந்த மாதிரி ஸ்கூல் இல் எத்தனை புள்ளைங்க கஷ்டப் படுதோ. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியும் அங்குள்ள பள்ளிகளில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லி ஒரு கட்டாய வகுப்பு ஆசிரியர்களுக்கு எடுக்க வேண்டும்.
எங்க பள்ளியில் ஒரு ஆசிரியர் எல்லோரையும் கைவிரல் முட்டியில் ஸ்கேல் ஆள் அடிப்பார். வலியில பல தடவ துடிச்சிருக்கிறோம்.
Post a Comment