17.8.10

அவரவர் பாடு.

பள்ளிக்கூடப் பையை
தோளில் சுமக்கிற
மகனைப் பார்த்தததும்
மனதுக்குள் நேந்துக்கிட்டாள்
மதுரவீரா எஞ்சாமி
என்னோட முடியட்டும்
இந்தச் சாக்கடை நாத்தம்.

திரைப்பட,அரசியல்,வியாபார
பிரபலங்கள் வேண்டினார்கள்
இறைவா சக்திகொடு
ஏழேழு தலைமுறைக்கும்
இப்படியே தொடரவென

கடவுள் வேடமிட்ட
பிச்சைக்காரார் நேர்ந்துகொண்டார்
இந்த வீட்டிலாவது கருணை
மிச்சமிருக்கவேண்டுமென்று.

கடவுள் வேண்டிக்கொண்டார்
'எப்பா சாமி மனுசா
என்ன விட்டுர்றா' வென்று

23 comments:

Deepa said...

அட்டகாசம்!
ரொம்ப‌ப் பிடித்திருக்கிற‌து அங்கிள் இந்த‌க் க‌விதை.

ஈரோடு கதிர் said...

அவரவர் பாடு என்றுமே குறைந்ததில்லை

vasu balaji said...

:)). அருமை அருமை! கண்டிப்பாக வேண்டுவார்:)))

Unknown said...

"கடுவுள்" என்று எழுதியது பிழையாகத் தோன்றாமல் ...

கடவுளை நக்கலடித்து இருப்பதாக தோன்றியது ..

க.பாலாசி said...

எது நடந்தாலும் கடவுள் வேண்டுவது நடக்காது...

அருமையான கவிதை.. வெகு சுலபமாய் மனதில் படிகிறது.

க ரா said...

ஹா ஹா.. கலக்கல்..

காமராஜ் said...

நன்றி தீபா...

காமராஜ் said...

கதிருக்கும்,எதிருக்கும்
சேர்த்து ஒரே வணக்கம் மற்றும் நன்றி.

காமராஜ் said...

கதிருக்கும்,எதிருக்கும்
சேர்த்து ஒரே வணக்கம் மற்றும் நன்றி.

காமராஜ் said...

செந்தில்...ஆஹ்ஹா..
எப்படி நைச்சியாமா சொல்லிட்டீங்க.
அது கடவுளேதான்.திருத்திக்கொண்டேன்
அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

பாலாசி.எப்படி இருக்கீங்க..
ஈரோடு நிகழ்வின் புகைப்படத்தில்
கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.

காமராஜ் said...

வாருங்கள் கண்ணன்.

Unknown said...

அருமை. எல்லோரும் போய் புலம்பினா, psychiatrist கூட யாரோயோ தேடி தான் போயிருப்பரு. இல்லாத கடவுள் மௌனமா தான் பார்க்கனும்.

vinthaimanithan said...

என்ன வரம்
வேண்டும்
கேட்டார் கடவுள்
அது தெரியாத
நீர் என்ன கடவுள்

இது நீலமணியோட கவிதை.... நல்லா எழுதியிருக்கீங்க சார்

அன்புடன் அருணா said...

பாவம் கடவுள்!

காமராஜ் said...

வாருங்கள் சேது. நன்றிங்க.

காமராஜ் said...

வாருங்கள் விந்தை மனிதன்.அப்படியே எங்களைத்தொண்ணூறுகளுக்கு கொண்டுபோய்விட்டது இந்தக்கவிதை.சங்கச்சுற்றறிக்கையில்.தர்ணாக்களின் விளம்பரங்களில்,மாநாடுகளில் அடிக்கடி எழுதி அழகு பார்க்கிற கவிதை,இத்தோடு சமயவேலில் பெரும்பாலான கவிதைகளையும்தான்.

காமராஜ் said...

நன்றி அருணா.

உயிரோடை said...

நல்ல கருத்து அண்ணா

velji said...

அவரும் பாவம்தான...!

அருமை!

vasan said...

வேண்டுத‌ல் வேண்டாமை இலான்,
இங்கு ம‌னித‌னை வேண்டி ஓடுகிறான்.
அருமை.
சுத‌ந்திர‌ நாட்டில்,
க‌ல்வியியும், உண‌வும் க‌ட‌வுளை
வேண்டிப் பெருவ‌த‌ல்ல‌.
அர‌சை ஆணையிட்டு பெற‌ வேண்டிய‌து
அடிப்ப‌டை உரிமையின் கீழ்.

லெமூரியன்... said...

அடக் கடவுளே...!

பத்மா said...

பாவம் கடவுள் ....lets leave him alone ..

அடக் கடவுளே அது மட்டும் என்னாலே முடியாது போல